ஒளியியல் - பத்தாம் வகுப்பு அறிவியல் கேள்வி தொகுப்பு
தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/
வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகளைக் கொண்டு இலவசமாக நடத்தப்படும் தேர்வு
- மிக நுண்ணிய துகள்கள் மற்றொரு பொருளில் சம அளவில் விரவி இருப்பதை எவ்வாறு அழைக்கிறோம்? கூழ்மம்
- கூழ்மத்திற்கு எடுத்துக்காட்டுகள் என்னென்ன? பால், புகை, ஐஸ்கிரீம் மற்றும் கலங்கலான நீர்
- ஒரு கூழ்மக் கரைசலில் உள்ள கூழ்ம துகள்களால் ஒளிக்கதிர்கள் சிதறலடிக்கப்படும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது? டின்டால் விளைவு
- வாயுக்கள் அல்லது திரவங்கள் அல்லது ஒளிபுகும் தன்மை கொண்ட திண்மங்களின் வழியாக ஒற்றை நிற ஒளியானது இணை கற்றைகளாக செல்லும்போது அவற்றின் ஒரு பகுதி சிதறல் அடைகிறது. சிதறல் அடைந்த கதிரானது படுகின்ற கதிரின் அதிர்வெண்ணை தவிர சில புதிய அதிர்வெண்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். இந்த நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது? ராமன் விளைவு அல்லது ராமன் ஒளிச்சிதறல்
- படுகதிரின் அதிர்வெண்ணுக்கு சமமான அதிர்வெண்ணை கொண்ட நிறமாலை வரிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? ராலே வரிகள்
- படுகதிரின் அதிர்வெண்ணுக்கு சமமில்லாத அதிர்வெண்ணை உடைய நிறமாலை வரிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? ராமன் வரிகள்
- படுகதிரின் அதிர்வெண்ணை விட குறைவான அதிர்வெண் கொண்ட நிறமாலை வரிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? ஸ்டோக் வரிகள்
- படுகதிரின் அதிர்வெண்ணை விட அதிகமான அதிர்வெண் கொண்ட நிறமாலை வரிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? ஆன்ட்டிஸ்டோக் வரிகள்
- இரு பரப்புகளுக்கு இடைப்பட்ட ஒளிபுகும் தன்மை கொண்ட ஊடகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? லென்ஸ்
- இருபுறமும் கோளக பரப்புகளை கொண்டு, மையத்தில் தடித்தும் ஓரங்களில் மெலிந்தும் காணப்படும் லென்ஸ் எவ்வாறு அழைக்கப்படுகிறது? குவி லென்ஸ் அல்லது இருபுற குவிலென்ஸ்
- இருபுறமும் உள்நோக்கி குழிந்த கோளக பரப்புகளை கொண்டு, மையத்தில் மெலிந்தும் ஓரங்களில் தடித்தும் காணப்படும் லென்ஸ் எவ்வாறு அழைக்கப்படுகிறது? குழி லென்ஸ் அல்லது இருபுற குழி லென்ஸ்
- ஒரு இருபுற குவிலென்சின் ஒரு பரப்பு சமதள பரப்பாக அமைந்தால் அந்த லென்ஸ் எவ்வாறு அழைக்கப்படுகிறது? தட்ட குவி லென்ஸ்
- ஓரு இருபுற குழிலென்சின் ஒரு பரப்பு சமதள பரப்பாக அமைந்திருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது? தட்ட குழி லென்ஸ்
- ஒளிக்கதிரானது ஒரு குவி லென்ஸ் அல்லது குழி லென்சின் ஒளியியல் மையத்தின் வழியாக செல்லும் பொழுது விலகல் அடையாமல் அதே பாதையில் செல்கிறது. இது என்ன விதி? லென்ஸின் முதல் விதி
- முதன்மை அச்சுக்கு இணையாக வரும் ஒளிக்கதிர்கள் குவிலென்சின் மீது படும்போது முதன்மைக் குவியத்தில் குவிக்கப்படும். குழி லென்ஸின் மீது படும்போது முதன்மை குவியத்தில் இருந்து விலகல் அடைந்து செல்வது போல் தோன்றும். இது என்ன விதி? லென்சின் இரண்டாம் விதி
- முதன்மைக் குவியம் வழியாகச் சென்று குவிலென்சின் மீது விழும் ஒளிக் கதிர்களும் முதன்மைக் குவியத்தை நோக்கிச் சென்று குழி லென்ஸ் மீது விழும் ஒளிக்கதிர்களும் விலகல் அடைந்தபிறகு முதன்மை அச்சுக்கு இணையாக செல்லும். இது என்ன விதி? லென்ஸின் மூன்றாம் விதி
- குவி லென்ஸில் பொருள் ஈறில்லா தொலைவில் வைக்கப்படும்போது முதன்மை குவியத்தில் என்ன பிம்பம் உருவாக்கப்படுகிறது? பொருளின் அளவைவிட சிறியதான மெய்பிம்பம் கிடைக்கும்
- குவி லென்ஸில் பொருளானது வளைவு மையத்திற்கு அப்பால் வைக்கப்படும்போது என்ன பிம்பம் கிடைக்கிறது? சிறிய தலைகீழான மெய்பிம்பம் லென்சின் மறுபுறத்தில் வளைவு மையத்திற்கும், முதன்மைக் குவியத்திற்க்கும் இடையே தோன்றுகிறது
- பொருளொன்றை குவிலென்சின் வளைவு மையத்தில் வைக்கப்படும்போது என்ன பிம்பம் கிடைக்கிறது? பொருளின் அளவிலான தலைகீழான மெய்பிம்பம் லென்ஸின் மற்றொரு பக்கத்தின் வளைவு மையத்தில் கிடைக்கிறது
- பொருள் ஒன்று குவிலென்சின் வளைவு மையத்திற்கும் முக்கிய குவியத்திற்க்கும் இடையே வைக்கப்படும்போது என்ன பிம்பம் கிடைக்கிறது? அளவில் பெரிய தலைகீழான மெய்பிம்பம் லென்ஸின் மறுபுறத்தில் வளைவு மையத்திற்கு அப்பால் உருவாகிறது
- பொருள் ஒன்று குவிலென்சின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்படும்போது என்ன பிம்பம் உருவாகிறது? அளவில் பெரிய தலைகீழான மெய்பிம்பம் தொலைவில் உருவாக்கப்படுகிறது
- பொருள் ஒன்று குவிலென்சின் முதன்மை குவியத்திற்கும் ஒளியியல் மையத்திற்கும் இடையே வைக்கப்படும்போது என்ன பிம்பம் உருவாகிறது? அளவில் பெரிய நேரான மாயபிம்பம் பொருள் இருக்கும் அதே பக்கத்தில் உருவாகிறது
- ஒளிப்படக் கருவி, உருப்பெருக்கும் கண்ணாடி ஆகியவற்றில் பயன்படும் லென்ஸ் எது? குவி லென்ஸ்
- நுண்ணோக்கிகள், நழுவபட வீழ்த்தி, தொலைநோக்கிகள் ஆகியவற்றில் பயன்படும் லென்ஸ் எது? குவி லென்ஸ்
- தூரப்பார்வையை சரிசெய்ய பயன்படும் லென்ஸ் எது? குவி லென்ஸ்
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்
- வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஏழாம் வகுப்பு – தமிழ் – இயல் 1 - http://tpnkalvi.in/general/7th-standard-tamil-lesson-1/
- Science Important Questions- Part 3 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-3/
- Daily 4 free test series – Today’s Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/daily-4-free-test-series-todays-test-1/
- Science Important Questions- Part 2 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-2/
- 50 Questions test series – Test 12 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-12/
- 20 Questions test series – Test 16 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-16/
- 20 Questions test series – Test 15 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-15/
- 50 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-11/
- 50 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-10/
- 50 Questions test series – Test 9 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-9/
- 50 Questions test series – Test 8 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-8/
- 100 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/100-questions-test-series-test-1/
- 50 Questions test series – Test 7 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-7/
- 50 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-6/
- 50 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-5/
- Science Important Questions- Part 1 - http://tpnkalvi.in/general/science-questions-for-tnpsc-part-1/
- 50 Questions test series – Test 4 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-4/
- 50 Questions test series – Test 3 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-3/
- 50 Questions test series – Test 2 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-2/
- 50 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-1/