Science Important Questions- Part 5

பகிர்க - Share:

ஒளியியல் - பத்தாம் வகுப்பு அறிவியல் கேள்வி தொகுப்பு

தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/

வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகளைக் கொண்டு இலவசமாக நடத்தப்படும் தேர்வு

  1. குவி லென்ஸில் பொருளானது ஈறிலா தொலைவில் வைக்கப்படும்போது என்ன பிம்பம் கிடைக்கிறது? முதன்மைக் குவியத்தில் மெய்பிம்பம் உருவாக்கப்படுகிறது, பிம்பத்தின் அளவு பொருளின் அளவை விட பலமடங்கு சிறியதாக இருக்கும்.
  2. குவி லென்ஸில்பொருளானது வளைவு மையத்திற்கு அப்பால் வைக்கப்படும் போது என்ன பிம்பம் கிடைக்கிறது? சிறிய தலைகீழான மெய் பிம்பம்  லென்சின் மறுபுறம், வளைவு மையத்திற்கும் முதன்மைக் குவியத்திற்க்கும் இடையே தோன்றுகிறது.
  3.  பொருள் ஒன்று குவிலென்சின் வளைவு மையத்தில் வைக்கப்படும்போது என்ன பிம்பம் உருவாகிறது?பொருளின் அதே அளவிலான தலைகீழான மெய்பிம்பம் லென்ஸின் மற்றொரு பக்கத்தின் வளைவு மையத்தில் கிடைக்கிறது.
  4.  பொருள் ஒன்று குவிலென்சின் வளைவு மையத்திற்கும் முக்கிய குவியத்திற்கும் இடையே வைக்கப்படும்போது என்ன பிம்பம் கிடைக்கிறது?அளவில் பெரிய தலைகீழான மெய்பிம்பம் லென்சின் மறுபுறத்தில் வளைவு மையத்திற்கு அப்பால் உருவாகிறது.
  5.  பொருளொன்றை குவிலென்சின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்படும்போது என்ன பிம்பம் கிடைக்கிறது? அளவில் பெரிய தலைகீழான மெய்பிம்பம் ஈரில்லா தொலைவில்  உருவாக்கப்படுகிறது.
  6.  பொருள் ஒன்றை குவிலென்சின் முதன்மைக் குவியத்திற்க்கும் ஒளியியல் மையத்திற்கும் இடையே வைக்கப்படும்போது என்ன பிம்பம் உருவாகிறது? அளவில் பெரிய நேரான மாயபிம்பம் பொருள் இருக்கும் அதே பக்கத்தில் உருவாகிறது.
  7.  ஒளிப்படக்கருவி, உருப்பெருக்கும் கண்ணாடி, நுண்ணோக்கிகள், தொலைநோக்கிகள், நழுவப்பட வீழ்த்திகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் லென்ஸ் எது? குவி லென்ஸ்
  8.  பொருள் ஒன்றை குழி லென்சின் முன்பாக ஈறிலா தொலைவில் வைக்கப்படும்போது என்ன பிம்பம் கிடைக்கிறது? நேரான மிகச் சிறிய மாயபிம்பம் குழி லென்சின் முதன்மைக் குவியத்தில் உருவாக்கப்படுகிறது.
  9.  பொருளொன்று குழி லென்ஸிற்கு முன்பாக அளவிடக்கூடிய தொலைவில் வைக்கப்படும்போது என்ன பிம்பம் உருவாகிறது?குழி லென்ஸின் ஒளியியல் மையத்திற்கும் முதன்மைக் குவியத்திற்கும் இடையே நேரான சிறிய மாயபிம்பம் உருவாகிறது.
  10.  லென்சுகளின் கதிர் வரைபடங்களில் பல்வேறு தொலைவுகளை அளவிடுவதற்கு என்ன குறியீடு மரபு பயன்படுத்தப்படுகிறது? கார்ட்டீசியன் குறியீடு மரபு
  11. கார்ட்டீசியன் குறியீட்டு மரபுகள் என்னென்ன?

    1. பொருள் எப்போதும் லென்சின் இடப்பக்கம் வைக்கப்படவேண்டும்
    2. அனைத்து தொலைவுகளும் ஒளியியல் மையத்திலிருந்து அளக்கப்பட வேண்டும்
    3. படுகதிரின் திசையில் மேற்கொள்ளப்படும் அளவீடுகளை நேர் குறியாகக் கொள்ள வேண்டும்.



    4. படுகதிரின் எதிர்திசையில்  மேற்கொள்ளப்படும் அளவீடுகளை எதிர் குறியாக கொள்ள வேண்டும்.
    5. முதன்மை அச்சுக்கு செங்குத்தாக மேல்நோக்கி அளக்கப்படும் அளவுகளை நேற்குறியாகக் கொள்ள வேண்டும்.
    6. முதன்மை அச்சுக்கு செங்குத்தாக கீழ் நோக்கி அளக்கப்படும் அளவுகளை எதிர்க் குறியாகக் கொள்ள வேண்டும்.
  12.  லென்ஸில் பிம்பத்தின் உயரத்திற்கும் பொருளின் உயரத்திற்கும் இடையே உள்ள தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? உருப்பெருக்கம்
  13.  உருபெருக்கத்தின் மதிப்பு ஒன்றை விட அதிகமாக இருந்தால் பொருளின் பிம்பம் எப்படி இருக்கும்? ஒன்றை விட குறைவாக இருந்தால் பிம்பத்தின் அளவு எப்படி இருக்கும்?ஒன்றை விட அதிகமாக இருந்தால் பொருளை விட பெரிய பிம்பம் கிடைக்கும். ஒன்றை விட குறைவாக இருந்தால் பொருளை விட சிறிய பிம்பம் கிடைக்கும்.
  14. லென்ஸ் சமன்பாடு மற்றும் லென்சை உருவாக்குவோர் சமன்பாடு ஆகியவை எந்த லென்ஸ்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியது? மெல்லிய லென்சுகளுக்கு மட்டுமே பொருந்தும். தடிமனான லென்ஸ்களுக்கு இவ்விரு சமன்பாடுகளும் சிறிய மாற்றங்கள் செய்து பயன்படுத்தப்படுகின்றன.
  15.  ஒரு ஒளிக்கதிர் லென்ஸின் மீது படும்போது கதிரானது குவிக்கப்படும் அல்லது விரிக்கப்படும் அளவானது லென்ஸின் எதனை பொறுத்தது? லென்சின் குவிய தொலைவை பொருத்தது
  16. லென்ஸ் ஒன்று தன்மீது விழும் ஒளிக்கதிர்களை குவிக்கும் அல்லது விரிக்கும் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது,? லென்சின் திறன்
  17. லென்சின் திறனின் SI அலகு என்ன? அது எந்த எழுத்தால் குறிக்கப்படுகிறது?  டயாப்டர், D என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது
  18. தூரப்பார்வையை சரிசெய்ய பயன்படும் லென்ஸ் எது? குவி லென்ஸ்
  19.  ஒரு மீட்டர் குவியத் தொலைவு கொண்ட லென்சின் திறன் என்ன? ஒரு டயாப்டர்
  20. எந்த லென்சின் திறன் நேர் குறியிலும், எந்த லென்சின் திறன் எதிர் குறியிலும் குறிக்கப்படுகிறது? குவிலென்சின் திறன் நேர்குறியாகவும் குழிலென்சின் திறன் எதிர் குறியாகும் குறிக்கப்படுகிறது
  21. மனிதக் கண்ணின் விட்டம் எவ்வளவு? ஏறத்தாழ 2.3 சென்டிமீட்டர்
  22.  கண்ணின் விழி கோளத்தின் முன் பகுதியில் காணப்படும் மெல்லிய ஒளிபுகும் படலத்தின் பெயர் என்ன? கார்னியா
  23. கண்ணில் ஒளிவிலகல் நடைபெறும் பகுதி எது? கார்னியா
  24.  கார்னியாவில் ஒளிவிலகல் அடையும் ஒளிக்கதிர்கள் எங்கு குவிக்கப்படுகின்றன? விழி லென்ஸின் மீது
  25. கண்ணின் நிறமுடைய பகுதியின் பெயர் என்ன? ஐரிஸ்

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்

 

  1.  வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஏழாம் வகுப்பு – தமிழ் – இயல் 1 - http://tpnkalvi.in/general/7th-standard-tamil-lesson-1/
  2. Science Important Questions- Part 3 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-3/
  3. Daily 4 free test series – Today’s Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/daily-4-free-test-series-todays-test-1/
  4. Science Important Questions- Part 2 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-2/
  5. 50 Questions test series – Test 12 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-12/
  6. 20 Questions test series – Test 16 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-16/
  7.  20 Questions test series – Test 15 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-15/
  8. 50 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-11/
  9.  50 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-10/
  10. 50 Questions test series – Test 9 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-9/
  11. 50 Questions test series – Test 8 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-8/
  12. 100 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/100-questions-test-series-test-1/
  13. 50 Questions test series – Test 7 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-7/
  14.  50 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-6/
  15. 50 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-5/
  16.  Science Important Questions- Part 1 - http://tpnkalvi.in/general/science-questions-for-tnpsc-part-1/
  17. 50 Questions test series – Test 4 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-4/
  18. 50 Questions test series – Test 3 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-3/
  19.  50 Questions test series – Test 2 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-2/
  20. 50 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-1/
பகிர்க - Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *