ஸ்ரீ பகுளாதேவி சமேத ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷி வாழ்க!
நற்பவி நற்பவி நற்பவி
ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி அருளால் அனைத்து வளங்களையும் பெற்று வாழ்ந்து கொண்டிருப்போருக்கும், அனைத்து வளங்களையும் பெற விரும்புவோருக்கும் வணக்கம். நற்பவி நற்பவி நற்பவி
இன்றைய முதல் பகுதியில் நற்பவி என்பதன் பொருளையும், மந்திரத்தின் பின்புலத்தையும், அதனால் உண்டாகும் பொதுவான நன்மைகளையும் பார்ப்போம்.
நற்பவி மந்திரத்தின் முழு பலனைப் பெறுவதற்கு இந்த விஷயங்களை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்
நற்பவி மந்திரத்தின் சிறப்பை அறிந்துகொள்ள/ இந்தத் தொடரின் இரண்டாம் பாகத்தை படிப்பதற்கு கீழே கிளிக் செய்யவும்.
நற்பவி என்ற மந்திரத்தின் பொருள்
நற்பவி என்பது மனித குலத்திற்கு கிடைத்த தலைசிறந்த மந்திரச் சொல் ஆகும். நற்பவி என்ற சொல்லுக்கான பொருள் நல்லதே பவிக்கட்டும். அதாவது நம்மைச் சுற்றியுள்ள தீமைகள் அனைத்தும் அழிந்து நன்மைகள் மட்டும் பெருகி, வளர்ந்து, நம்மை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும். நற்பவி நற்பவி நற்பவி
நற்பவி என்ற மந்திரச் சொல்லின் பின்புலம்
இந்த உயர்ந்த மந்திரத்தை மனித குலத்திற்கு அளித்தவர் ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி. பேரண்டத்தின் அனைத்து உயிர்களையும் காத்து ரட்சிக்கும் எம்பெருமான் சிவபெருமான் அவர்களால் உருவாக்கப்பட்டவரே இந்த காகபுஜண்ட மகரிஷி.
உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும், வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் குழப்பம், கடினமான சூழ்நிலை ஏற்படும்பொழுது அவர்களுக்கு சிறந்த ஒரு பாதையை காட்டுவதற்காக உருவாக்கப்பட்டவரே இந்த காக புஜண்ட மகரிஷி. மனித குலத்திற்கு இவர் அருளிய உலகின் தலைசிறந்த மந்திரமே நற்பவி எனும் இந்த மந்திரச் சொல்.
நற்பவி நற்பவி நற்பவி

மந்திரத்தை உபயோகிக்கும் முறை
நற்பவி எனும் இந்த உயர்ந்த சொல்லை வயது வித்தியாசமின்றி அனைவரும் உபயோகிக்கலாம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் நன்மை அளிப்பதாகவே இந்த மந்திரம் உள்ளது. இந்த மந்திரத்தை ஒரு நாளின் எந்த மணி பொழுதிலும் நாம் உச்சரிக்கலாம். நாள் முழுவதும் உச்சரித்துக் கொண்டே இருக்கலாம்.
இந்த மந்திரச் சொல்லை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக கூறிக் கொண்டே இருக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நன்மை நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளோரையும் வந்து சேரும். நாம் பேசும் ஒவ்வொரு வாக்கியத்திற்கு இடையிலேயும் இந்த நற்பவி எனும் சிறந்த சொல்லை சேர்த்துக்கொண்டு பேசுவோமேயானால். நாம் பேசும், சிந்திக்கும் அனைத்து காரியங்களும் ஜெயமாகவே முடியும். நற்பவி நற்பவி நற்பவி
ஒவ்வொரு நாளும் குறைந்தது 108 முறையாவது இந்த மந்திரச் சொல்லை எழுதியும் சொல்லியும் வந்தால் எண்ணிய காரியங்கள் அனைத்தும் கைகூடும்.
நற்பவி நற்பவி நற்பவி
உடல் நலம் இல்லாதவர்கள், பணத்தேவை உள்ளவர்கள், குடும்பத்தில் பிரச்சனை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், சிறந்த வேலை சிறந்த கல்வி பெற விரும்புவோர், வீடு, மனை வாங்க விரும்புவோர் என அனைவரும் இந்த மந்திரத்தை உச்சரித்து எம்பெருமான் சிவபெருமானின் பரிபூரண ஆசியைப் பெறலாம்.
முடிந்த அளவிற்கு இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்லாமல் வாய்விட்டு சத்தமாக சொல்வது சிறந்த பலனை அளிக்கும்.
நற்பவி தொடரின் இரண்டாம் பாகத்தில் ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷியின் வரலாற்றைப் முழுவதுமாக பார்ப்போம்.
நற்பவி குறித்தும் ஆன்மிக சிந்தனைகள் குறித்தும் மேலும் அறிந்து கொள்ள கீழே உள்ள டெலிகிராம், வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.
நற்பவி மந்திரத்தின் சிறப்பை அறிந்துகொள்ள/ இந்தத் தொடரின் இரண்டாம் பாகத்தை படிப்பதற்கு கீழே கிளிக் செய்யவும்.
நற்பவி நற்பவி நற்பவி
நற்பவி மந்திரத்தின் முழு பலனைப் பெறுவதற்கு இந்த விஷயங்களை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்
நற்பவி
ப வல்லினமா. மெல்லினமா
Narapavi. Or narbhavi
Pl clarify