Science Important Questions- Part 10

பகிர்க - Share:

வெப்ப இயற்பியல் - பத்தாம் வகுப்பு அறிவியல் கேள்வி தொகுப்பு

தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/

வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகளைக் கொண்டு இலவசமாக நடத்தப்படும் தேர்வு

  1. ஒரு கிலோகிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை ஒரு டிகிரி செல்சியஸ் உயர்த்த தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஒரு கிலோ கலோரி
  2. ஒரு பொருளின் வெப்ப நிலை உயர்வானது எதை பொருத்தது? அப்பொருளுக்கு அளிக்கப்பட்ட வெப்ப ஆற்றலை சார்ந்தது
  3. ஒரு பொருளின் வெப்ப நிலை உயர்வானது எதைப் பொறுத்து மாறுபடும்? பொருளின் தன்மை மற்றும் நிறையைப் பொருத்து மாறுபடும்.
  4. ஒரு பொருளுக்கு அளிக்கப்படும் வெப்பநிலை உயர்வால் பொருளின் பரிமாணத்தில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? வெப்ப விரிவு
  5. திட திரவ வாயு மூன்று பொருள்களையும் வெப்பப்படுத்தும் போது எந்த பொருளில் வெப்ப விரிவு குறைவு? வெப்ப நிலை மாற்றத்தினால் ஏற்படும் வெப்ப விரிவு திரவ மற்றும் வாயு பொருள்களை ஒப்பிடும்போது திடப் பொருளில் குறைவு.
  6. திடப் பொருளில் ஏற்படும் மூன்று வகையான வெப்ப விரிவு என்னென்ன? நீள் வெப்ப விரிவு, பரப்பு வெப்ப விரிவு, பரும வெப்ப விரிவு
  7. ஓரலகு வெப்பநிலை உயர்வால் பொருளின் நீளத்தில் ஏற்படும் மாற்றத்திற்கும் ஓரலகு நீளத்திற்கும் உள்ள தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? நீள் வெப்ப விரிவுக் குணகம்
  8. நீள் வெப்ப விரிவு குணத்தின் எஸ்ஐ அலகு என்ன? கெல்வின்-1
  9. ஒரு திடப்பொருளை வெப்பப்படுத்தும் போது வெப்பத்தின் விளைவாக அப்பொருளின் பரப்பில் ஏற்படும் வெப்ப விரிவு எதனைக் கொண்டு அளவிடப்படுகிறது? பரப்பு வெப்பவிரிவுக் குணகம்
  10. ஓரலகு வெப்பநிலை உயர்வால் பொருளின் பரப்பில் ஏற்படும் மாற்றத்திற்கும் ஓரலகு பரப்பிற்கும் உள்ள தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? பரப்பு வெப்ப விரிவுக் குணகம்
  11. பரப்பு வெப்ப விரிவு குணகத்தின் எஸ்ஐ அலகு என்ன? கெல்வின்-1
  12. ஓரலகு வெப்பநிலை உயர்வால் பொருளின் பருமனில் ஏற்படும் மாற்றத்திற்கும் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? பரும வெப்ப விரிவுக் குணகம்
  13. பரும வெப்ப விரிவு குணத்தின் எஸ்ஐ அலகு என்ன? கெல்வின்-1
  14. ஒரு திடப்பொருளை வெப்பப்படுத்தும் போது வெப்பத்தின் விளைவாக அப்பொருளின் பருமனில் ஏற்படும் வெப்ப விரிவு எதனைக் கொண்டு அளவிடப்படுகிறது? பரும வெப்பவிரிவுக் குணகம்
  15. நீரின் பரும வெப்ப விரிவு குணகத்தின் மதிப்பு எவ்வளவு? 20.7×10-5 K-1
  16. திரவத்தில் ஏற்படும் வெப்ப விரிவின் இரண்டு வகைகள் என்னென்ன? உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவு
  17. திரவத்தின் உண்மை வெப்ப விரிவு என்றால் என்ன? எந்த ஒரு கொள்கலனும் இல்லாமல் நேரடியாக திரவத்தை வெப்பப்படுத்தும் போது ஏற்படும் வெப்ப விரிவு உண்மை வெப்ப விரிவு எனப்படும்.
  18. ஓரலகு வெப்பநிலை உயர்வால் திரவத்தில் அதிகரிக்கும் உண்மை பருமனுக்கும் திரவத்தின் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? உண்மை வெப்ப விரிவுக் குணகம்
  19. கொள்கலனில் வைத்து திரவத்தை சூடு படுத்தும் பொழுது கொள்கலனின் விரிவினை பொருட்படுத்தாமல் திரவத்தின் தோற்ற விரிவினை மட்டும் கணக்கில் கொள்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது? திரவத்தின் தோற்ற வெப்ப விரிவு
  20. ஓர் அலகு வெப்பநிலை உயர்வால் திரவத்தில் அதிகரிக்கும் தோற்ற பருமனுக்கும் அத்திரவத்தின் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?  தோற்ற வெப்ப விரிவுக் குணகம்
  21. தோற்ற வெப்ப விரிவு மற்றும் உண்மை வெப்ப விரிவு இவற்றின் எஸ்ஐ அலகு என்ன? கெல்வின்-1
  22. உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவு இவற்றில் எது அதிக மதிப்பை கொண்டிருக்கும்? எப்பொழுதும் தோற்ற வெப்ப விரிவை விட உண்மை வெப்ப விரிவு அதிகமாக இருக்கும்
  23. தோற்ற வெப்ப விரிவில் அளிக்கப்படும் வெப்பம் எதற்கெல்லாம் பயன்படுகிறது? அளிக்கப்பட்ட வெப்ப ஆற்றலின் ஒரு பகுதி கொள்கலனை விரிவடைய செய்வதற்கும் மீதமுள்ள ஆற்றல் திரவத்தை விரிவடையச் செய்வதற்கும் பயன்படுகிறது
  24. வாயுக்களின் அழுத்தம் கனஅளவு மற்றும் வெப்பநிலை ஆகியவற்றை தொடர்புபடுத்தும் மூன்று விதிகள் என்னென்ன? பாயில் விதி, சார்லஸ் விதி, அவகேட்ரோ விதி
  25. மாறாத வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் பருமனுக்கு எதிர் தகவில் அமையும். இது என்ன விதி? பாயில் விதி

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்

 

  1. All Test links of tpnkalvi website -http://tpnkalvi.in/online-test/free-tests/all-test-links-of-tpnkalvi-website/
  2.  வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஏழாம் வகுப்பு – தமிழ் – இயல் 1 - http://tpnkalvi.in/general/7th-standard-tamil-lesson-1/
  3. Science Important Questions- Part 3 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-3/
  4. Daily 4 free test series – Today’s Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/daily-4-free-test-series-todays-test-1/
  5. Science Important Questions- Part 2 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-2/
  6. 50 Questions test series – Test 12 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-12/
  7. 20 Questions test series – Test 16 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-16/
  8.  20 Questions test series – Test 15 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-15/
  9. 50 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-11/
  10.  50 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-10/
  11. 50 Questions test series – Test 9 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-9/
  12. 50 Questions test series – Test 8 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-8/
  13. 100 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/100-questions-test-series-test-1/
  14. 50 Questions test series – Test 7 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-7/
  15.  50 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-6/
  16. 50 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-5/
  17.  Science Important Questions- Part 1 - http://tpnkalvi.in/general/science-questions-for-tnpsc-part-1/
  18. 50 Questions test series – Test 4 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-4/
  19. 50 Questions test series – Test 3 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-3/
  20.  50 Questions test series – Test 2 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-2/
  21. 50 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-1/
பகிர்க - Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *