ஒளியியல் - பத்தாம் வகுப்பு அறிவியல் கேள்வி தொகுப்பு
தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/
- ஆற்றல்கள் சமமாக இருப்பின் சிதறல் எவ்வாறு அழைக்கப்படுகிறது? மீட்சி அற்ற சிதறல்
- சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் வளிமண்டலத்திலுள்ள வாயு அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளால் சிதறடிக்க படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது? ராலே ஒளிச்சிதறல்
- ஒளிச் சிதறலை ஏற்படுத்தும் துகளின் விட்டமானது படும் ஒளிக்கதிர்களி நீளத்திற்கு சமமாக அல்லது அலை நீளத்தை விட அதிகமாக இருந்தால் அந்த ஒளிச்சிதறல் எவ்வாறு அழைக்கப்படுகிறது? மீ ஒளிச்சிதறல்
- மீ ஒளிச் சிதறலை ஏற்படுத்தும் பொருட்கள் எவை? வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு பகுதியில் உள்ள தூசு, புகை, நீர்த்துளிகள்
- ஒளி எந்த வடிவில் பரவும்?வரிவடிவில்
- ஒளி செல்லும் பாதை எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஒளிக்கதிர்
- ஒளிக்கதிர்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஒளிக்கற்றை
- ஒளியை வெளியிடும் பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? ஒளி மூலங்கள்
- ஒளி மூலங்கள் தங்களுடைய சுய ஒளியை வெளியிட்டால் அவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன? ஒளிரும் பொருட்கள் luminous object
- ஒளிரும் பொருளுக்கு எடுத்துக்காட்டு என்ன? சூரியன், நட்சத்திரங்கள்
- காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் என்ன? 3×10⁸ மீ வி^-1
- கண்ணுறு ஒளியில் குறைந்த அலைநீளம் கொண்ட நிறம் எது அதிக அலைநீளம் கொண்ட நிறம் எது? ஊதா நிறம் குறைந்த அலைநீளத்தையும் சிவப்பு நிறம் அதிக அலைநீளத்தையும் கொண்டிருக்கும்
- ஒளிக்கதிர் ஒன்று ஓர் ஒளிபுகும் ஊடகத்தில் இருந்து மற்றொரு ஒளி புகும் ஊடகத்திற்கு சாய்வாக செல்லும்பொழுது ஒளிக்கதிர் தன் பாதையிலிருந்து விலகிச் செல்கிறது. ஒளியின் பாதையில் ஏற்படும் இந்த விலகலின் பெயர் என்ன? ஒளிவிலகல்
- ஒளியின் திசைவேகம் எந்த ஊடகத்தில் அதிகமாகவும் எந்த ஊடகத்தில் குறைவாகவும் இருக்கும்? ஒளியின் திசைவேகம் அடர்வு குறை ஊடகத்தில் அதிகமாகவும் அடர்வு மிகுந்த ஊடகத்தில் குறைவாகவும் இருக்கும்.
- ஒளிக்கதிர் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும்போது படுகதிர், விலகு கதிர், படு புள்ளியில் விலகல் அடையும் பரப்புக்கு செங்குத்தாக வரையப்படும் கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமைகின்றன. இது என்ன விதி? ஒளிவிலகலின் முதல் விதி
- ஒளிக்கதிர் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும்போது படு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் இடையே உள்ள தகவானது அவ்விரு ஊடகங்களின் ஒளிவிலகல் எண்களின் தகவிற்கு சமம், இது என்ன விதி? ஒளிவிலகலின் இரண்டாம் விதி அல்லது ஸ்நெல் விதி
- ஒளி மூலமானது ஒரே ஒரு நிறத்தைக் கொண்ட ஒளியை வெளியிடுமானால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஒற்றை நிற ஒளி மூலம்
- ஒளி மூலமானது பல்வேறு நிறங்களை உள்ளடக்கிய வெள்ளை ஒளியை வெளியிடுமானால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது? கூட்டொளி மூலங்கள்
- இயற்கை கூட்டொளி மூலத்திற்கு எடுத்துக்காட்டு என்ன? செயற்கை கூட்டொளி மூலத்திற்கு எடுத்துக்காட்டு என்ன? இயற்கை கூட்டொளி மூலம் சூரியன். செயற்கைக் கூட்டொளி மூலம் பாதரச ஆவி விளக்கு.
- வெள்ளை ஒளி ஒன்றை ஒரு கண்ணாடி முப்பட்டகத்தின் வழியே செலுத்தும் பொழுது ஒளிபுகும் ஊடகத்தில் ஒளிவிலகல் அடையும். இதனால் அதில் உள்ள நிறங்கள் தனித்தனியாக பிரிகின்றன. இந்த நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது? நிறப்பிரிகை
- நிறப்பிரிகையில் இருந்து வெளிவரும் நிறங்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது இந்த தொகுப்பின் சுருக்கக் குறியீடு என்ன? நிறமாலை, VIBGYOR
- ஒரு ஊடகத்தின் ஒளிவிலகல் எண் எதைச் சார்ந்தது? ஒளிவிலகல் எண் ஒளிக்கதிரின் அலைநீளத்தை சார்ந்தது.
- சூரிய ஒளி புவியின் வளி மண்டலத்தில் நுழையும்போது வளிமண்டலத்தில் உள்ள பல்வேறு வாயு அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளால் அனைத்து திசைகளிலும் விலகல் அடைய செய்யப்படுகிறது. இந்த நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஒளிச்சிதறல்
- சிதறல் அடையும் ஒளிக்கற்றையின் தொடக்க மற்றும் இறுதி ஆற்றல்கள் சமமாக இருப்பின் சிதறல் எவ்வாறு அழைக்கப்படுகிறது? மீட்சி சிதறல்
- சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் வளிமண்டலத்திலுள்ள வாயு அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளால் சிதறடிக்க படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது? ராலே ஒளிச்சிதறல்
- மேகக்கூட்டங்கள் வெண்மை நிறமாக காட்சி அளிக்க எந்த ஒளிச்சிதறல் காரணம்? மேக கூட்டங்கள் வெண்மை நிறமாகக் காட்சியளிக்க மீ ஒளிசிதறல் காரணமாக அமைகிறது வெள்ளை ஒளியானது மேகத்தில் உள்ள நீர் துளிகளின் மீது படும்போது நீர்த்துளிகள் அனைத்து நிறங்களையும் சமமாக சிதறல் அடையச் செய்கின்றன
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்
1. 20 Questions test series – Test 12- http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-12/
2. 20 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-11/
3. 20 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-10/
4. 20 Questions test series – Test 9- http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-9/
5. 20 Questions test series – Test 8- http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-8/
6. 20 Questions test series – Test 7- http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-7/
7. 20 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-6/
8. 20 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-5/
9. 20 Questions test series – Test 4 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-4/
10. 20 Questions test series – Test 3 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-3/
11. 20 Questions test series – Test 2 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-2/
12. 20 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-1/