ஸ்ரீ பகுளாதேவி சமேத ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷி வாழ்க!
நற்பவி நற்பவி நற்பவி
ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி அருளால் அனைத்து வளங்களையும் பெற்று வாழ்ந்து கொண்டிருப்போருக்கும், அனைத்து வளங்களையும் பெற விரும்புவோருக்கும் வணக்கம். நற்பவி நற்பவி நற்பவி
நற்பவி மந்திரத்தின் முழு பலனைப் பெறுவதற்கு இந்த விஷயங்களை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்
சிவன் ஆலயங்கள் அனைத்திலும் காவல் தெய்வமாக இருக்கும் பைரவரே சிவனின் 64 வடிவங்களில் மகா ஞானியான, ரௌத்ர தோற்றம் கொண்டவர்.
குடும்பத்தை நடத்துவதற்கும், தொழிலை விருத்தி செய்வதற்கும், இன்னும் பல காரணங்களுக்காகவும் நாம் வாங்கும் கடனை திருப்பி செலுத்த முடியாமல் இக்கட்டான சூழலுக்கு செல்லும் பொழுது அந்த சூழலில் இருந்து நம்மை காக்கும் கண்கண்ட தெய்வமாக இருப்பவர் பைரவர் ஆவார்.

மந்திரத்தை உபயோகிக்கும் முறை
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மந்திரத்தை புதன்கிழமைகளில், உங்கள் அருகில் இருக்கும் கால பைரவர் அல்லது ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்கு சென்று மனமுருகி 108 முறை செல்லும்பொழுது உங்களுடைய கடன் பிரச்சினைகள் அனைத்தும் விரைவிலேயே தீரும்.
பைரவர் சன்னதியில் 2 நெய் தீபம் ஏற்றி, சிறிது கல்கண்டு படைத்துவிட்டு அருகிலேயே அமர்ந்து பைரவரை எண்ணி உங்கள் வேண்டுதலை மனதில் நிறுத்தி கீழே உள்ள மந்திரத்தை மனதார கூறுங்கள்.
மந்திரம்: ஒம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஆபதுத்தாரணாய
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரும்
அஜாமல பத்தாய
லோகேஸ்வராய ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மம
தாரித்ரிய வித்வேஷணாய
மஹா பைரவாய நம:
ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
கடன் தொல்லைகள் அனைத்தும் நீங்கி அனைவரும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்கள்
ஆன்மிக சிந்தனைகள் குறித்தும் நற்பவி குறித்தும் மேலும் அறிந்து கொள்ள கீழே உள்ள டெலிகிராம், வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.
நற்பவி நற்பவி நற்பவி
நற்பவி மந்திரத்தின் முழு பலனைப் பெறுவதற்கு இந்த விஷயங்களை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்