இறைவனுக்கான மலர்களும் அதன் பலன்களும்

பகிர்க - Share:

ஸ்ரீ பகுளாதேவி சமேத ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷி வாழ்க!

நற்பவி நற்பவி நற்பவி

 

மலர்கள் நம்மை பரவசப்படுத்துவதோடு நம்மை படைத்த ஆண்டவனையும் நம்முடன் இணைக்கும் ஒரு அற்புத சக்தியாகும்.

ஆண்டவனுக்கு படைக்கப்படும் ஒவ்வொரு மலருக்குமான பலன்களையும் தனித்தனியாக கீழே காண்போம்.

 

நற்பவி மந்திரத்தின் முழு பலனைப் பெறுவதற்கு இந்த விஷயங்களை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்

மலர்களும் பலன்களும்

இறைவன் பூமியின் மீது படைத்துள்ள அனைத்து பொருட்களும் அவனுக்கு உரியன. அதில் மலர்களும் அடங்கும். ஆயினும் எல்லா மலர்களும் எல்லா நேரங்களிலும் எல்லா இடத்திலும் கிடைப்பது கடினம். ஆகையால் கிடைக்கும் மலர்களையும் அதன் தன்மையையும் பயனையும் உணர்ந்து மனநிறைவோடு மனப்பூர்வமாக பயன்படுத்தி பூஜை செய்தால் எதிர்பார்க்கும் பலன் கட்டாயம் கிடைக்கும்.

சிவப்பு அரளி, செம்பருத்தி - மனதை வாட்டும் கவலை நீக்கி குடும்ப ஒற்றுமை பெருகும்

முருகப்பெருமானுக்கு முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தள், செங்காந்தள் ஆகியவை மிகவும் உகந்தவை.

செந்தாமரை - செல்வம், தொழிலில் மேன்மை, ஆத்மபலம், சூரியன் அருள்.

வெண்தாமரை, வெள்ளை நந்தியாவட்டை, மல்லிகை, இருவாட்சி போன்ற வெள்ளை மலர்கள் மனக் குறையைப் போக்கும். மனதில் தைரியம் சேர்க்கும்.

தங்க அரளி மலர்கள் பெண்களுக்கு மாங்கல்ய ப்ராப்தி உண்டாகும். கடன் ஏற்படாது தடுக்கும். கிரகபீடை நீக்கும், குருபார்வை அருளும்.

நீலசங்கு புஷ்பம், நீலாம்பரம், நீலோர்பகம் ஆகியவை அவப்பெயரை போக்கும். தரித்திரம் நீக்கும். மன அமைதி தரும், சனி பகவானின் அருளையும் பெற்றுத் தரும், ஆயுளைப் பெருக்கும்.

மனோரஞ்சிதம் குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தி கணவன் மனைவிக்குள் அன்பையும் பெருக்கும்.

திருமாலுக்கு தாமரை, பவளமல்லி, மரிக்கொழுந்து, துளசி, சாமந்தி ஆகியவை உகந்தவை. நீலசங்கு புஷ்பம் பயன்படுத்தலாம்.

வரலட்சுமிக்கு மடல் அவிழ்ந்த தாழை மடல் மிகவும் சிறந்தது.

பாரிஜாதம், அல்லிப்பூ போன்ற சற்று மங்கலான வெள்ளை புஷ்பங்கள் சந்திரன் அருளைப் பெற்று புத்தி வலிமையைப் பெருக்கும்.  தாயாரின் உடல் நலத்தையும் காப்பாற்றும்.

பாசிப் பச்சை, மரிக்கொழுந்து போன்றவை இவை பெருக்கி மன உறுதியைத் தரும், புதனுடைய நற் பார்வை அருளும்.

அடுக்கு அரளி, செம்பருத்தி -  ஞானம், கல்வி, தொழில் பெருகும்.

வில்வ புஷ்பம், கருந்துளசி புஷ்பம், மகிழ மலர் ஆகியவை ராகு கேது கிரகங்களின் நற்பலனை தரும்.

விநாயகப்பெருமானுக்கு எருக்கம்பூ, தும்பை, செம்பருத்தி, தாமரை, ரோஜா ஆகிய மலர்கள் பூஜைக்கு உகந்தவை.

 

 

நீக்க வேண்டிய மலர்கள்

பழைய புஷ்பங்களையும், மொட்டுகளையும், தூய்மை இல்லாத புஷ்பங்களையும் இறைவனுக்கு சார்த்த கூடாது.

பூஜைக்கு ஆகாத சில பொருள்கள் இருக்கின்றன. அவை விநாயகருக்கு துளசியும், சிவனுக்கு தாழம்பூவும், தேவிக்கு அருகம்புல்லும், பைரவருக்கு நந்தியாவட்டையும், சூரியனுக்கு வில்வமும் ஆகாத பூக்கள் ஆகும்.

ஆன்மிக சிந்தனைகள் குறித்தும்  நற்பவி  குறித்தும் மேலும் அறிந்து கொள்ள கீழே உள்ள டெலிகிராம், வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள். 




 

நற்பவி நற்பவி நற்பவி

 

நற்பவி மந்திரத்தின் முழு பலனைப் பெறுவதற்கு இந்த விஷயங்களை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்

பகிர்க - Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *