ஸ்ரீ பகுளாதேவி சமேத ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷி வாழ்க!
நற்பவி நற்பவி நற்பவி
நடுத்தர வர்க்கத்தினர் அனைவரின் கனவாக இருக்கும் வீடு மற்றும் நிலம் வாங்கும் ஆசையை நிறைவேற்றி அருள்பவரே வராகியம்மன்.
நற்பவி மந்திரத்தின் முழு பலனைப் பெறுவதற்கு இந்த விஷயங்களை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்
பூஜை செய்யும் காலம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை செவ்வாய் தோறும், மாலை 6 மணிக்கு 9 வாரங்கள் வராகி அம்மன் கோவிலில் சென்று அல்லது வீட்டில் வராகி அம்மன் படத்தை வைத்து பூஜை செய்து வந்தால் நினைத்த காரியங்கள் கைகூடும்.
இந்த பூஜையை ஆண்கள் பெண்கள் இருவரும் செய்யலாம்.
ஆண்களாக இருப்பின் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் இந்த பூஜையை செய்ய வேண்டும். பெண்களாக இருந்தால் மாதவிடாய் நாட்களில் இந்த வழிபாட்டை தவிர்த்து விட்டு அடுத்து வரக் கூடிய வாரத்தை கணக்கில் வைத்துக் கொள்ளலாம்.
பூஜையில் வைக்க வேண்டிய பொருட்கள்
வராகி அம்மனுக்கு பூமிக்கு அடியில் விளையக்கூடிய அனைத்து பொருட்களுமே மிகவும் சிறப்பானவை ஆகும். எனவே பூஜையின் பொழுது பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகளை வராகி அம்மனுக்கு படையலாக வைக்கலாம். மாதுளம்பழம் வராகி அம்மனுக்கு உகந்த பழம் ஆகும். எனவே மாதுளம் பழத்தையும் படையலில் சேர்த்துக் கொள்ளலாம்.
பூஜை செய்யும் முறை
செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6 மணியளவில் அருகில் உள்ள வராஹி அம்மன் கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டில் வராகி அம்மன் படத்தை வைத்து இந்த பூஜையை செய்யலாம்.
சுத்தமாக குளித்துவிட்டு. வீட்டை சுத்தம் செய்து பின் பூஜையை ஆரம்பிக்கலாம்.
பூஜை அறையில் விளக்கை ஏற்றிவிட்டு பின் வராகி அம்மன் படத்தை சிவப்பு நிற பூக்களால் அலங்கரிக்கவும்.
பின் மேலே கூறிய படையல் பொருட்களை அம்மன் முன் வைத்துவிட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தைப் மூன்று முறையோ அல்லது 18 முறையோ கூற வேண்டும்.
ஓம் குண்டலினி புரவாசினி, சண்டமுண்ட விநாசினி, பண்டிதஸ்ய மனோன்மணி, வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி, அஷ்டதாரித்ரய நாசினி இஷ்டகாமப்ரதாயினி, வாராஹீ நமோஸ்துதே!
மந்திரத்தை சொல்லி முடித்த பின்பு உங்களுடைய வேண்டுதலை மனமுருகி வராகி அம்மனிடம் கூறவும்.
உங்கள் வேண்டுதலை கூறி முடித்த பின்பு கற்பூர ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்யவும்.
படையலில் வைத்த பொருட்களை வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடலாம். கோவிலில் பூஜை செய்தால் கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு படையல் பொருட்களை பிரசாதமாக அளிக்கலாம்.
வராஹி அம்மனை முழுவதுமாக நம்பி 9 வாரங்கள் இந்த மந்திரத்தை கூறி உங்கள் பூஜையை முடித்து பாருங்கள், கூடிய விரைவிலேயே உங்களுக்கு நிலம் மற்றும் வீடு வாங்கும் யோகம் கிடைக்கும்.
ஆன்மிக சிந்தனைகள் குறித்தும் நற்பவி குறித்தும் மேலும் அறிந்து கொள்ள கீழே உள்ள டெலிகிராம், வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.
நற்பவி நற்பவி நற்பவி
நற்பவி மந்திரத்தின் முழு பலனைப் பெறுவதற்கு இந்த விஷயங்களை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்

1 thought on “வீடு, நிலம் யோகம் அருளும் வராகி அம்மன்”