இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள்

பகிர்க - Share:

இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள்

இந்த குறிப்புகளை PDFவடிவில் பெறுவதற்கு கீழே உள்ள டெலிகிராம் குரூப்பில் இணைந்து கொள்ளவும்.

Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1

 

எங்கள் இணையதளத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்களுக்குமான ஒரு வரி வினாக்கள் அனைத்தும் பாடவாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பாடத்திலிருந்தும் எடுக்கப்பட்ட கேள்விகளை கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்வும் (TEST) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கேள்விகள் அனைத்தையும் படித்துவிட்டு அந்த தேர்வை எழுதிப் பார்க்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது

ஒருவரி வினாக்கள் அனைத்தும் பாடப்புத்தகத்தை வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்டதாகும்.





இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்து வினாக்களையும் நீங்கள் முறையாக பயிற்சி செய்தாலே தமிழகத்தில் நடைபெறும் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறலாம்.

தேர்வுத் தொடரில் கலந்து கொள்ள கீழே உள்ள டெலிகிராம் குரூப்பில் இணைந்து கொள்ளவும்

தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/

இந்திய அரசியல் அமைப்பு பல்வேறு வகைகளில் தனிச்சிறப்புடையது

  1. நீண்ட அரசியல் அமைப்பு:
    1.  எந்த நாட்டின் அரசியல் சட்டத்தையும் விட இந்திய அரசியல் சட்டம் நீளமானது.
    2.  சாதாரண சட்டமியற்றும் விவகாரம் ஆயினும் அல்லது நிர்வாக செயல் ஆயினும் எல்லா விஷயங்களையும் உள்ளடக்கிய விரிவான ஆவணமாக இது திகழ்கிறது.
    3. ஆரம்பத்தில் 395  சரத்துகளையும் 22 பகுதிகளையும் 8 அட்டவணைகளையும் பெற்றிருந்தது.
  2. நெகிழா அரசியலமைப்பு:
    1.   இந்திய அரசியலமைப்பில் சில பிரிவுகள் எளியமுறையில் திருத்தப்பட கூடியதாகவும் சில பிரிவுகள் அவ்வளவு எளிதாக திருத்தம் செய்யப்பட இயலாததாக இருக்கிறது, 
    2.  ஆகவே நம்முடைய அரசியலமைப்பு நெகிழும் இயல்பும், நெகிழா இயல்பும் கொண்டுள்ளது,
  3.  பல்வேறு மூலங்களில் இருந்து எடுத்தாளப்பட்ட அரசியலமைப்பு : 
    1.  ரஷ்யா - அடிப்படை கடமைகள்
    2. அமெரிக்கா - முகப்புரை, அடிப்படை உரிமைகள், நீதிப்புனராய்வு, நீதிபதிகள் பதவி நீக்கம், தனித்து இயங்கும் நீதிமன்றம்.
    3. இங்கிலாந்து - பாராளுமன்ற முறை,  பிரதம மந்திரி, சட்டமியற்றும் முறை, சட்டத்தின் வழி ஆட்சி, ஒற்றைக் குடியுரிமை.
    4. அயர்லாந்து - அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள், குடியரசுத் தலைவரின் தேர்தல் முறை, ராஜ்ய சபைக்கு 12 உறுப்பினர் நியமனம்.
    5. கனடா - மத்தியில் வலிமையுடன் கூடிய கூட்டாட்சி முறை, அதிகாரப்பகிர்வு மற்றும் மத்திய அரசிடம் எஞ்சிய அதிகாரங்கள்.
    6. தென்னாப்பிரிக்கா - சட்டத்திருத்தம் முறை
    7. ஆஸ்திரேலியா - பொதுப் பட்டியல், மத்திய மாநில உறவுகள்
    8. ஜெர்மனி - அவசர நிலைப் பிரகடனத்தின் போது அடிப்படை உரிமைகள் இடைநீக்கம்
    9.  ஜப்பான் - உச்ச   நீதிமன்றத்தின் தோற்றமும், நடைமுறையும்
    10. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1935 -  கூட்டாட்சி முறை, ஆளுநர் பதவி, நெருக்கடி கால நிலை.
  4. மக்கள் இறையாண்மை : 
    1.  மக்கள் இறையாண்மை என்ற கொள்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் அரசியல் அமைப்பாக இந்திய அரசியல் அமைப்பு விளங்குகிறது.
  5.  நாடாளுமன்ற ஆட்சி முறை
    1.  இந்திய அரசியலமைப்பு பிரிட்டனின் நாடாளுமன்ற அரசாங்க முறையை ஏற்றுக் கொண்டுள்ளது
    2. நிர்வாகத் துறை மற்றும் சட்டம் இயற்றும் துறைகளுக்கு இடையில் நெருங்கிய ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் அமையப் பெற்றிருப்பது நாடாளுமன்ற ஆட்சி முறையின் சிறப்பாகும் .
  6. கூட்டாட்சி மற்றும் ஒற்றையாட்சி கூறுகள்
    1.  கூட்டாட்சி அமைப்பில் எழுதப்பட்ட  நெகழ்ச்சி அற்ற அரசியலமைப்பு மேலாண்மை மிக்கதாக விளங்கி, அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் அதிகாரத்தைப் பகிர்ந்து அளிக்கும்.
  7. சுதந்திரமான மற்றும் ஒருங்கிணைந்த நீதித்துறை
    1.  நீதிப்புனராய்வு அதிகாரங்களைக் கொண்ட சுதந்திரமான நீதித் துறையை இந்திய அரசியல் அமைப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
    2.  ஒன்றியம், மாநிலம், உரிமையியல், குற்றவியல், அரசியல் சட்டம் உட்பட எல்லா சட்டங்களைப் பற்றியும் விசாரிக்கும் அதிகாரம் பெற்றதாக உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் கொண்ட ஒருங்கிணைந்த ஒரு நீதித்துறை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
  8. வயதுவந்தோர் வாக்குரிமை
    1.  வயது வந்த இந்திய குடிமக்கள் அனைவருக்கும் எவ்வித பாரபட்சமும் இன்றி சம வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது.  மேலைநாடுகளில், முன்னேறிய மக்களாட்சி நாடுகளில் கூட படிப்படியாகத்தான் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது.
  9. அடிப்படை உரிமைகள்
    1. ஓர் அரசில் மக்கள் அனுபவிக்கும் உரிமைகளை கொண்டே அந்த அரசின் தன்மையை அறிந்து கொள்ளலாம்.
    2.  சமத்துவ உரிமை, சுதந்திர உரிமை, சுரண்டலுக்கு எதிரான உரிமை, சமயத்தை பின்பற்றுவதற்கு தடையற்ற சுதந்திரம், பண்பாடு மற்றும் கல்வி கற்பதில் உரிமைகள், அரசியல் அமைப்புக்கு  உட்பட்டு நிவாரணம் தேடும் உரிமை ஆகியவை அடிப்படை உரிமைகளாகும்.
    3. குடிமகனின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக ஏதேனும் சட்டமோ, நிர்வாக செயல்பாடோ அமையுமானால் அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.
  10. அடிப்படைக் கடமைகள்
    1.  1976ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்பு திருத்தம் அடிப்படை கடமைகள் பற்றி விவரிக்கிறது
    2.  இந்த புதிய பகுதியானது இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 11 அடிப்படை கடமைகளை விவரிக்கிறது
  11. குடியுரிமை
    1. இந்திய குடியுரிமை சட்டம் 1955 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. 
    2. பகுதி III, IV, IV A ஆகிய மூன்று பகுதிகளும் இந்திய குடிமக்களின் நலனைப் பேணுவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
    3. சகோதரத்துவத்தையும் ஒன்றுபட்ட இந்தியாவையும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டரசு அமைப்பு இருந்த போதிலும் ஒரே குடியுரிமை கொண்டுள்ளது.
  12. நெறிமுறைக் கோட்பாடுகள் 
    1. அயர்லாந்தின் அரசியலமைப்பை பின்பற்றி இந்திய அரசியல் சட்டத்தில் அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளன.
  13. சமயச் சார்பின்மை
    1.  இந்திய அரசியலமைப்பு இந்தியாவை ஒரு சமயச் சார்பற்ற அரசாக அமைத்துள்ளது. அது எல்லா குடிமக்களையும் தாங்கள் விரும்பும் சமயத்தை பின்பற்றவும், பிறருக்கு போதிக்கவும், பரப்பவும் உரிமைகளை கொடுத்துள்ளது.
  14. மூன்று அடுக்கு அரசாங்க முறை
    1.  73-வது மற்றும் 74-வது இந்திய அரசியலமைப்பு திருத்தச் சட்டங்கள் மூன்றாவது அடுக்கான உள்ளாட்சி அமைப்புகளின் அமைப்பு. அதிகாரம். பணிகள் ஆகியவற்றை வரையறை செய்தது.
    2. இந்த அரசியலமைப்பு திருத்தங்களின் படி இந்திய அரசானது ஒன்றிய அரசாங்கம், மாநில அரசாங்கம் மற்றும் உள்ளாட்சி அரசாங்கம் என்ற மூன்று அடுக்கு அரசாங்கமாக உள்ளது.
  15. சுதந்திரமான அரசியலமைப்பு அமைப்புகள்
    1.  இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றும் துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை அமைப்புகளை மட்டும் வரையறுக்காமல் சுதந்திரமாக இயங்கக்கூடிய சில அரசியலமைப்பு நிறுவனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
    2. சில சுதந்திர அமைப்புகள்
      1.  தேர்தல் ஆணையம் 
      2. இந்திய அரசு தலைமை கணக்காயர் மற்றும் தணிக்கை துறைத் தலைவர்
  16. நெருக்கடி கால சட்ட வகை முறைகள்
    1. நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை நிலவும் போது நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு, மக்களாட்சி முறை இவற்றை காக்க நெருக்கடி நிலையினை அமல் செய்வதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகை செய்கிறது.
    2. போர், வெளிநாட்டு தாக்குதல் மற்றும் உள்நாட்டு ஆயுத கலகங்களால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனக் கருதினால் இந்தியா முழுமைக்கும் அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு தேசிய நெருக்கடி நிலையை (352) குடியரசுத் தலைவர் பிரகடனப்படுத்தலாம்.
    3. ஒரு மாநில அரசாங்கத்தை அரசியலமைப்புச் சட்ட வகை முறைகளின்படி நடத்த இயலாத சூழ்நிலை உருவாகி உள்ளது என அம்மாநில ஆளுநர் அனுப்பிய அறிக்கையின் பெயரிலோ அல்லது வேறு விதத்திலோ குடியரசுத் தலைவர் திருப்தியுற்றால் அவர் அந்த மாநிலத்தில் நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தலாம். 

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்

 

  1.  வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஏழாம் வகுப்பு – தமிழ் – இயல் 1 - http://tpnkalvi.in/general/7th-standard-tamil-lesson-1/
  2. Science Important Questions- Part 3 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-3/
  3. Daily 4 free test series – Today’s Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/daily-4-free-test-series-todays-test-1/
  4. Science Important Questions- Part 2 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-2/
  5. 50 Questions test series – Test 12 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-12/
  6. 20 Questions test series – Test 16 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-16/
  7.  20 Questions test series – Test 15 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-15/
  8. 50 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-11/
  9.  50 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-10/
  10. 50 Questions test series – Test 9 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-9/
  11. 50 Questions test series – Test 8 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-8/
  12. 100 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/100-questions-test-series-test-1/
  13. 50 Questions test series – Test 7 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-7/
  14.  50 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-6/
  15. 50 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-5/
  16.  Science Important Questions- Part 1 - http://tpnkalvi.in/general/science-questions-for-tnpsc-part-1/
  17. 50 Questions test series – Test 4 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-4/
  18. 50 Questions test series – Test 3 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-3/
  19.  50 Questions test series – Test 2 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-2/
  20. 50 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-1/
பகிர்க - Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *