வெப்ப இயற்பியல் - பத்தாம் வகுப்பு அறிவியல் கேள்வி தொகுப்பு
தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/
வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகளைக் கொண்டு இலவசமாக நடத்தப்படும் தேர்வு
- ஒரு கிலோகிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை ஒரு டிகிரி செல்சியஸ் உயர்த்த தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஒரு கிலோ கலோரி
- ஒரு பொருளின் வெப்ப நிலை உயர்வானது எதை பொருத்தது? அப்பொருளுக்கு அளிக்கப்பட்ட வெப்ப ஆற்றலை சார்ந்தது
- ஒரு பொருளின் வெப்ப நிலை உயர்வானது எதைப் பொறுத்து மாறுபடும்? பொருளின் தன்மை மற்றும் நிறையைப் பொருத்து மாறுபடும்.
- ஒரு பொருளுக்கு அளிக்கப்படும் வெப்பநிலை உயர்வால் பொருளின் பரிமாணத்தில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? வெப்ப விரிவு
- திட திரவ வாயு மூன்று பொருள்களையும் வெப்பப்படுத்தும் போது எந்த பொருளில் வெப்ப விரிவு குறைவு? வெப்ப நிலை மாற்றத்தினால் ஏற்படும் வெப்ப விரிவு திரவ மற்றும் வாயு பொருள்களை ஒப்பிடும்போது திடப் பொருளில் குறைவு.
- திடப் பொருளில் ஏற்படும் மூன்று வகையான வெப்ப விரிவு என்னென்ன? நீள் வெப்ப விரிவு, பரப்பு வெப்ப விரிவு, பரும வெப்ப விரிவு
- ஓரலகு வெப்பநிலை உயர்வால் பொருளின் நீளத்தில் ஏற்படும் மாற்றத்திற்கும் ஓரலகு நீளத்திற்கும் உள்ள தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? நீள் வெப்ப விரிவுக் குணகம்
- நீள் வெப்ப விரிவு குணத்தின் எஸ்ஐ அலகு என்ன? கெல்வின்-1
- ஒரு திடப்பொருளை வெப்பப்படுத்தும் போது வெப்பத்தின் விளைவாக அப்பொருளின் பரப்பில் ஏற்படும் வெப்ப விரிவு எதனைக் கொண்டு அளவிடப்படுகிறது? பரப்பு வெப்பவிரிவுக் குணகம்
- ஓரலகு வெப்பநிலை உயர்வால் பொருளின் பரப்பில் ஏற்படும் மாற்றத்திற்கும் ஓரலகு பரப்பிற்கும் உள்ள தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? பரப்பு வெப்ப விரிவுக் குணகம்
- பரப்பு வெப்ப விரிவு குணகத்தின் எஸ்ஐ அலகு என்ன? கெல்வின்-1
- ஓரலகு வெப்பநிலை உயர்வால் பொருளின் பருமனில் ஏற்படும் மாற்றத்திற்கும் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? பரும வெப்ப விரிவுக் குணகம்
- பரும வெப்ப விரிவு குணத்தின் எஸ்ஐ அலகு என்ன? கெல்வின்-1
- ஒரு திடப்பொருளை வெப்பப்படுத்தும் போது வெப்பத்தின் விளைவாக அப்பொருளின் பருமனில் ஏற்படும் வெப்ப விரிவு எதனைக் கொண்டு அளவிடப்படுகிறது? பரும வெப்பவிரிவுக் குணகம்
- நீரின் பரும வெப்ப விரிவு குணகத்தின் மதிப்பு எவ்வளவு? 20.7×10-5 K-1
- திரவத்தில் ஏற்படும் வெப்ப விரிவின் இரண்டு வகைகள் என்னென்ன? உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவு
- திரவத்தின் உண்மை வெப்ப விரிவு என்றால் என்ன? எந்த ஒரு கொள்கலனும் இல்லாமல் நேரடியாக திரவத்தை வெப்பப்படுத்தும் போது ஏற்படும் வெப்ப விரிவு உண்மை வெப்ப விரிவு எனப்படும்.
- ஓரலகு வெப்பநிலை உயர்வால் திரவத்தில் அதிகரிக்கும் உண்மை பருமனுக்கும் திரவத்தின் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? உண்மை வெப்ப விரிவுக் குணகம்
- கொள்கலனில் வைத்து திரவத்தை சூடு படுத்தும் பொழுது கொள்கலனின் விரிவினை பொருட்படுத்தாமல் திரவத்தின் தோற்ற விரிவினை மட்டும் கணக்கில் கொள்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது? திரவத்தின் தோற்ற வெப்ப விரிவு
- ஓர் அலகு வெப்பநிலை உயர்வால் திரவத்தில் அதிகரிக்கும் தோற்ற பருமனுக்கும் அத்திரவத்தின் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? தோற்ற வெப்ப விரிவுக் குணகம்
- தோற்ற வெப்ப விரிவு மற்றும் உண்மை வெப்ப விரிவு இவற்றின் எஸ்ஐ அலகு என்ன? கெல்வின்-1
- உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவு இவற்றில் எது அதிக மதிப்பை கொண்டிருக்கும்? எப்பொழுதும் தோற்ற வெப்ப விரிவை விட உண்மை வெப்ப விரிவு அதிகமாக இருக்கும்
- தோற்ற வெப்ப விரிவில் அளிக்கப்படும் வெப்பம் எதற்கெல்லாம் பயன்படுகிறது? அளிக்கப்பட்ட வெப்ப ஆற்றலின் ஒரு பகுதி கொள்கலனை விரிவடைய செய்வதற்கும் மீதமுள்ள ஆற்றல் திரவத்தை விரிவடையச் செய்வதற்கும் பயன்படுகிறது
- வாயுக்களின் அழுத்தம் கனஅளவு மற்றும் வெப்பநிலை ஆகியவற்றை தொடர்புபடுத்தும் மூன்று விதிகள் என்னென்ன? பாயில் விதி, சார்லஸ் விதி, அவகேட்ரோ விதி
- மாறாத வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் பருமனுக்கு எதிர் தகவில் அமையும். இது என்ன விதி? பாயில் விதி
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்
- All Test links of tpnkalvi website -http://tpnkalvi.in/online-test/free-tests/all-test-links-of-tpnkalvi-website/
- வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஏழாம் வகுப்பு – தமிழ் – இயல் 1 - http://tpnkalvi.in/general/7th-standard-tamil-lesson-1/
- Science Important Questions- Part 3 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-3/
- Daily 4 free test series – Today’s Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/daily-4-free-test-series-todays-test-1/
- Science Important Questions- Part 2 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-2/
- 50 Questions test series – Test 12 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-12/
- 20 Questions test series – Test 16 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-16/
- 20 Questions test series – Test 15 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-15/
- 50 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-11/
- 50 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-10/
- 50 Questions test series – Test 9 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-9/
- 50 Questions test series – Test 8 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-8/
- 100 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/100-questions-test-series-test-1/
- 50 Questions test series – Test 7 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-7/
- 50 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-6/
- 50 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-5/
- Science Important Questions- Part 1 - http://tpnkalvi.in/general/science-questions-for-tnpsc-part-1/
- 50 Questions test series – Test 4 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-4/
- 50 Questions test series – Test 3 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-3/
- 50 Questions test series – Test 2 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-2/
- 50 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-1/