இயக்க விதிகள் - பத்தாம் வகுப்பு அறிவியல் கேள்வி தொகுப்பு
தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/
வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகளைக் கொண்டு இலவசமாக நடத்தப்படும் தேர்வு
- விசையின் செயல்பாட்டால் பொருள் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றி பயிலும் அறிவியல் பாடத்தின் பெயர் என்ன? இயந்திரவியல்
- இயந்திரவியலின் இரண்டு பிரிவுகள் என்னென்ன? நிலையியல் மற்றும் இயங்கியல்
- விசையின் செயல்பாட்டால் ஓய்வு நிலையில் உள்ள பொருள் மீது ஏற்படும் விளைவுகளை பற்றி அறியும் அறிவியல் பாடத்தின் பெயர் என்ன? நிலையியல்
- விசையின் செயல்பாட்டால் இயக்க நிலையில் உள்ள பொருள் மீது ஏற்படும் விளைவுகளை பற்றி அறியும் அறிவியலின் பிரிவு எது? இயங்கியல்
- இயக்கத்தை ஏற்படுத்தும் விசையினை கருத்தில் கொள்ளாமல் இயக்கத்தினை மட்டும் விளக்கும் அறிவியல் பிரிவு எது? இயக்கவியல்
- பொருளின் இயக்கத்தையும் அதற்கு காரணமான விசை பற்றியும் விளக்கும் அறிவியலின் பிரிவு எது? இயக்க விசையியல்
- இயங்குகின்ற பொருள்கள் யாவும் தாமாகவே இயற்கையாக தத்தமது ஓய்வு நிலைக்கு வந்து சேரும். அவற்றினை ஓய்வு நிலைக்கு கொண்டுவர புறவிசை எதுவும் தேவையில்லை என்று கூறியவர் யார்? அரிஸ்டாட்டில்
- பொருட்களின் இயக்கத்தை இயற்கையான இயக்கம் இயற்கைக்கு மாறான இயக்கம் என பிரித்து கூறியவர் யார்? அரிஸ்டாட்டில்
- இருவேறு நிறை கொண்ட பொருள்கள் சம உயரத்தில் இருந்து விழும் போது அதிக நிறை கொண்ட பொருள் வெகு வேகமாக விழும் என்று கூறியவர் யார்? அரிஸ்டாட்டில்
- 1. இயற்கையில் உள்ள புவிசார் பொருள்கள் யாவும் தத்தமது இயல்பான ஓய்வு நிலையிலோ அல்லது சீரான இயக்க நிலையிலேயோ தொடர்ந்து இருக்கும், 2. புறவிசை ஏதும் செயல்படாத வரை பொருள்கள் யாவும் தத்தமது முந்திய நிலையிலேயே தொடர்ந்து இருக்கும். 3. பொருளின் மீது விசையின் தாக்கம் இருக்கும் போது தம் நிலை மாற்றத்தினை தவிர்க்க முயலும் தன்மை அதன் நிலைமம் எனப்படும். 4. வெற்றிடத்தில் வெவ்வேறு நிறை கொண்ட பொருள்கள் யாவும் ஒரே உயரத்தில் இருந்து விழும் போது அவை ஒரே நேரத்தில் தரையை வந்தடையும். இந்த நான்கு கருத்துக்களையும் கூறிய அறிவியல் அறிஞர் யார்? கலிலியோ
- ஒவ்வொரு பொருளும் தன்மீது சமன் செய்யப்படாத புறவிசை ஏதும் செயல்படாத வரையில் தமது ஓய்வு நிலையையோ அல்லது சென்று கொண்டிருக்கும் நேர்கோட்டு இயக்க நிலையையோ மாற்றுவதை எதிர்க்கும் தன்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது? நிலைமம்
- நிலையாக உள்ள ஒவ்வொரு பொருளும் தமது ஓய்வு நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஓய்வில் நிலைமம்
- இயக்க நிலையில் உள்ள பொருள் தமது இயக்க நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? இயக்கத்தில் நிலைமம்
- இயக்க நிலையில் உள்ள பொருள் இயங்கும் திசையிலிருந்து மாறாது திசை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? திசையில் நிலைமம்
- இயங்கும் பொருளின் நிறை மற்றும் திசைவேகத்தின் பெருக்கற்பலன் எவ்வாறு அழைக்கப்படுகிறது? உந்தம்
- உந்தத்தின் திசையானது எதனுடைய திசையில் அமையும்? பொருளின் திசைவேகத்தின் திசையில்
- விசையின் எண் மதிப்பு எதனால் அளவிடப்படுகிறது அதன் SI அலகு என்ன? உந்தத்தால் அளவிடப்படுகிறது. SI அலகு கிகி மீவி-1
- ஒவ்வொரு பொருளும் புறவிசை ஏதும் செயல்படாத வரையில் தமது ஓய்வு நிலையிலோ அல்லது சீராக இயங்கிக் கொண்டிருக்கும் நேர்கோட்டு நிலையில் தொடர்ந்து இருக்கும் இது என்ன விதி? நியூட்டனின் முதல் விதி
- இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சமமான அல்லது சமமற்ற விசைகள் ஒரே திசையில் ஒரு பொருள் மீது இணையாக செயல்பட்டால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஒத்த இணை விசை
- இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சமமான அல்லது சமமற்ற விசைகள் எதிரெதிர் திசையில் ஒரு பொருள் மீது இணையாக செயல்பட்டால் அவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன? மாறுபட்ட இணை விசைகள்
- ஒரு பொருளின் மீது பல்வேறு விசைகள் செயல்படும் போது அவற்றின் மொத்த விளைவை ஏற்படுத்தும் ஒரு தனித்த விசை எவ்வாறு அழைக்கப்படுகிறது? தொகுபயன் விசை
- ஒரு பொருள் சமநிலையில் உள்ளது எனில் அதன் தொகுபயன் விசையின் மதிப்பு என்ன? சுழியம்
- தொகுபயன் விசைக்கு சமமான ஆனால் எதிர் திசையில் செயல்படும் ஒரு விசையானது பொருட்களை சமநிலைக்கு கொண்டுவர உதவுகிறது இவ்விசையை எவ்வாறு அழைக்கலாம்? எதிர் சமனி(equilibrant)
- தண்டு ஒன்றின் ஒரு முனையை தரையிலோ அல்லது சுவரிலோ நிலையாக பொருத்தி மறுமுனையில் தண்டின் கோட்டின் வழியே விசை செயல்படுத்தப்பட்டால் தனது நிலை புள்ளியை மையமாக வைத்து சூழலும் இப்புள்ளி எவ்வாறு அழைக்கப்படுகிறது? சுழற்புள்ளி point of rotation
- விசையின் திருப்புத்திறன் ஒரு ____________________அலகு? வெக்டர்
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்
1. 20 Questions test series – Test 12- http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-12/
2. 20 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-11/
3. 20 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-10/
4. 20 Questions test series – Test 9- http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-9/
5. 20 Questions test series – Test 8- http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-8/
6. 20 Questions test series – Test 7- http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-7/
7. 20 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-6/
8. 20 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-5/
9. 20 Questions test series – Test 4 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-4/
10. 20 Questions test series – Test 3 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-3/
11. 20 Questions test series – Test 2 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-2/
12. 20 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-1/