Science Important Questions- Part 3

பகிர்க - Share:

இயக்க விதிகள் - பத்தாம் வகுப்பு அறிவியல் கேள்வி தொகுப்பு

தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/

வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகளைக் கொண்டு இலவசமாக நடத்தப்படும் தேர்வு

  1. விசையின் திருப்புத்திறனின் SI அலகு என்ன? நியூட்டன் மீட்டர்
  2. இரு சமமான இணை விசைகள் ஒரே நேரத்தில் ஒரு பொருளின் இருவேறு புள்ளிகளின் மீது எதிரெதிர் திசையில் செயல்பட்டால் அந்த விசைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? இரட்டை விசைகள் அல்லது இரட்டை
  3. இரட்டைகளின் தொகுபயன் விசை மதிப்பு சுழி எனவே இவை நேர்க்கோட்டு இயக்கத்தினை ஏற்படுத்தாது ஆனால் சுழல் விளைவினை ஏற்படுத்தும் இதை எவ்வாறு அழைக்கலாம்? இரட்டைகளின் திருப்புத்திறன்
  4. இரட்டையின் திருப்புத்திறனின் SI அலகு என்ன? நியூட்டன் மீ
  5. பற்ச்சக்கரங்கள் (gears), ஏற்ற பலகை (seesaw play), திருப்பு சக்கரம் (steering wheel) இவை எதற்கான எடுத்துக்காட்டுகள்? விசையின் திருப்புத்திறன்
  6. பொருள் ஒன்றின் மீது செயல்படும் விசையானது அப் பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர்த்தகவில் அமையும். மேலும் இந்த உந்த மாறுபாட்டு விசையின் திசையிலேயே அமையும். இந்த விதியின் பெயர் என்ன? நியூட்டனின் இரண்டாம் விதி அல்லது விசையின் விதி
  7. ஒரு நியூட்டன் என்றால் எவ்வளவு? ஒரு கிலோ கிராம் நிறையுடைய பொருளொன்றை ஒரு மீவி^-2 அளவிற்கு முடுக்க தேவைப்படும் விசையின் அளவு ஒரு நியூட்டன் ஆகும்
  8. ஒரு டைன் என்றால் எவ்வளவு? ஒரு கிராம் நிறையுடைய பொருள் ஒன்றை 1 செமீ^-2 அளவிற்கு முடுக்க தேவைப்படும் விசையின் அளவு ஒரு டைன் ஆகும்.



  9. ஒரு கிலோ கிராம் நிறையுள்ள பொருளை ஒரு மீவி^-2 அளவிற்கு முடுக்க தேவைப்படும் விசையின் அளவு ஒரு நியூட்டன் ஆகும். இது எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஓரலகு விசை
  10. ஈர்ப்பியல் மாறிலி G யின் மதிப்பு என்ன? 6.674×10^-11 N m² kg²
  11. புவியீர்ப்பு முடுக்கத்தின் g சராசரி மதிப்பு எவ்வளவு? 9.8 மீ வி^-2
  12. புவியீர்ப்பு முடுக்கத்தின் g மதிப்பு புவியில் உள்ள அனைத்து இடங்களிலும் ஒரே மதிப்பாக இருக்குமா? இருக்காது.
  13. புவியின் நிறை மதிப்பு எவ்வளவுM= 5.972×10²⁴ கிலோ கிராம்
  14. புவியீர்ப்பு முடுக்கம் g பூமியின் எந்த பகுதியில் அதிகமாக இருக்கும் எந்த பகுதியில் குறைவாக இருக்கும்? புவியீர்ப்பு முடுக்கம் நிலநடுக்கோட்டுப் பகுதியில் குறைவாக இருக்கும். துருவப் பகுதியில் அதிகமாக இருக்கும்.
  15. புவியின் மையத்தில் புவியீர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு என்ன? சுழி
  16. ஒரு பொருளில் அடங்கியுள்ள பருப்பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? நிறை
  17. ஒரு பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசையின் மதிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? எடை
  18. ஓய்வு நிலையில் உள்ள போது நமது எடை எவ்வாறு அழைக்கப்படுகிறது? உண்மை எடை
  19. மேலே அல்லது கீழே நாம் நகரும் பொழுது நமது எடை எவ்வாறு அழைக்கப்படுகிறது? தோற்ற எடை
  20. விண்வெளி வீரர் ஏன் மிதக்கிறார்? விண்வெளி வீரர் உண்மையில் மிதப்பது இல்லை விண்கலம் மிக அதிக சுற்றியக்க திசை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது அவர் அக்கலத்துடன் இணைந்து சம வேகத்தில் நகர்கிறார். அவரது முடுக்கம் விண்கல முடுக்கத்திற்கு சமமாக இருப்பதால் அவர் தடையின்றி விழும் நிலையில் உள்ளார் அப்போது அவரது தோற்ற எடை மதிப்பு சுழி ஆகும் எனவே அவர் அக்கலத்துடன் எடையற்ற நிலையில் காணப்படுகிறார்.
  21. தாவரங்களின் வேர் முளைத்தல் மற்றும் வளர்ச்சி புவியின் ஈர்ப்பு விசை சார்ந்து அமைவது என்ன இயக்கம்? புவி திசை சார்பியக்கம்
  22. இயங்கியலின் இரண்டு பிரிவுகள் என்னென்ன? இயக்கவியல், இயக்க விசையியல்
  23. ஒரு பொருள் மீது பல்வேறு விசைகள் செயல்படும் போது அவைகளின் மொத்த விசையை ஒரு தனித்த விசை மூலம் அளவிடலாம் அந்த விசையின் பெயர் என்ன? தொகுபயன் விசை
  24. கணத்தாக்கு மதிப்பு எதனுடைய பெருக்கல் பலனுக்கு சமமாக இருக்கும்? விசை மற்றும் கால அளவின் பெருக்கல் பலனுக்கு
  25. மேலிருந்து கீழே வரும் பொருள்களின் முடுக்கம் புவியின் ஈர்ப்பு முடுக்கத்திற்கு சமமாக உள்ள போது எடை முற்றிலும் குறைந்து சுழி நிலைக்கு வருகிறது இது எவ்வாறு அழைக்கப்படுகிறது? எடை இல்லா நிலை.

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்

 

1. 20 Questions test series – Test 12- http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-12/
2. 20 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-11/
3. 20 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-10/
4. 20 Questions test series – Test 9- http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-9/
5. 20 Questions test series – Test 8- http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-8/
6. 20 Questions test series – Test 7- http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-7/
7. 20 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-6/
8. 20 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-5/
9. 20 Questions test series – Test 4 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-4/
10. 20 Questions test series – Test 3 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-3/
11. 20 Questions test series – Test 2 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-2/
12. 20 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-1/

பகிர்க - Share:

1 thought on “Science Important Questions- Part 3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *