ஒளியியல் - பத்தாம் வகுப்பு அறிவியல் கேள்வி தொகுப்பு
தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/
வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகளைக் கொண்டு இலவசமாக நடத்தப்படும் தேர்வு
- ஐரிஸ் என்னென்ன வண்ணங்களில் காணப்படும்? நீலம் கறுப்பு அல்லது பச்சை நிறத்தில் காணப்படலாம். ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தன்மை வாய்ந்த நிறம் மற்றும் அமைப்பை கொண்டிருக்கும்.
- ஒளிப்படக் கருவியின் முகப்பை போன்று செயல்பட்டு கண் பாவையின் உள்ளே நுழையும் ஒளிக்கதிர்களின் அளவை கட்டுப்படுத்தும் பகுதி எது? ஐரிஸ்
- ஐரிஸின் மையப்பகுதி எது? கண் பாவை
- பொருளில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் எதன் வழியாக விழித்திரையை அடைகின்றன? கண் பாவை
- விழி கோளத்தின் பின்புற உட்பரப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? விழித்திரை அல்லது ரெட்டினா
- அதிக உணர்நுட்பம் உடைய விழித்திரையில் உருவாக்கப்படும் பொருளின் பிம்பம் எவ்வாறு இருக்கும்? பொருளின் தலைகீழான மெய்பிம்பம் உருவாக்கப்படும்.
- விழி லென்சை தாங்கும் தசைகளின் பெயர் என்ன? சிலியரி தசைகள்
- பொருளின் தொலைவுக்கு ஏற்ப விழி தன் குவிய தூரத்தை மாற்றிக் கொள்ள உதவும் அமைப்பின் பெயர் என்ன? சிலியரி தசைகள்
- மனித விழியில் உள்ள லென்ஸ் எந்த வகையானது? குவி லென்ஸ்
- விழித்திரையில் கிடைக்கும் தலைகீழான மெய்பிம்பம் எங்கு நேரான பிம்பமாக மாற்றப்படுகிறது? மூளையில்
- அருகிலுள்ள மற்றும் தொலைவில் உள்ள பொருள்களை தெளிவாக காண்பதற்கு ஏற்ப தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளும் தன்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது? விழி ஏற்பமைவு திறன்
- இரு அடுத்தடுத்த ஒளித் துடிப்புகளுக்கு இடைப்பட்ட கால இடைவெளி 1/16 வினாடியை விட குறைவாக இருந்தால் மனிதர்கள் அவற்றை தனித்தனியாக வேறுபடுத்தி அறிய இயலாது. இது எவ்வாறு அழைக்கப்படுகிறது? பார்வை நீட்டிப்பு
- மனிதக் கண் ஒன்றினால் தன் எதிரில் உள்ள பொருளை தெளிவாக காண கூடிய மிகச் சிறிய தொலைவு (minimum distance) எவ்வாறு அழைக்கப்படுகிறது? தெளிவுறு காட்சியின் மீச்சிறு தொலைவு அல்லது அண்மை புள்ளி
- தெளிவுறு காட்சியின் மீச்சிறு தொலைவின் அளவு எவ்வளவு? 25 சென்டி மீட்டர்
- கண் ஒன்றினால் அதிகபட்சமாக எவ்வளவு தொலைவில் (maximum distance) உள்ள பொருளை தெளிவாக காண முடிகிறதோ அப்பள்ளி எவ்வாறு அழைக்கப்படுகிறது? சேய்மைப்புள்ளி
- சேய்மைப்புள்ளியின் தொலைவு எவ்வளவு? ஈறிலா தொலைவு
- இயல்பாக மனித கண்ணினால் பார்க்கக்கூடிய தொலைவின் எல்லைகள் எவ்வளவு? 25 சென்டி மீட்டர் முதல் ஈறிலா தொலைவு வரை
- கிட்டப்பார்வை குறைபாடு ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? மையோபியா
- விழிக்கோளம் சிறிது நீண்டு விடுவதால் மனித கண்ணில் ஏற்படும் குறைபாட்டின் பெயர் என்ன? மையோபியா எனப்படும் கிட்டப்பார்வை
- விழி லென்சின் குவிய தூரம் குறைவதாலும், விழி லென்ஸிற்க்கும் விழித்திரைக்கும் இடையே உள்ள தொலைவு அதிகரிப்பதாலும் ஏற்படும் குறைபாட்டின் பெயர் என்ன? மையோபியா எனப்படும் கிட்டப்பார்வை
- கிட்டப் பார்வையில் எந்த பொருள்களை காண இயலாது? கிட்டப் பார்வையில் அருகில் உள்ள பொருள்களை காண இயலும் தூரத்தில் உள்ள பொருள்களை காண இயலாது.
- கிட்டப்பார்வையை குணப்படுத்த உதவும் குழி லென்சின் குவிய தூரத்தை கண்டறியும் சமன்பாடு எது? f=-x
- தூரப்பார்வை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஹைபர்மெட்ரோபியா
- விழி கோளம் சுருங்குவதால் ஏற்படும் குறைபாட்டின் பெயர் என்ன? தூரப்பார்வை என அழைக்கப்படும் ஹைபர்மெட்ரோபியா
- தூரப் பார்வையில் மனிதர்களால் எந்த பொருளை காண முடியாது? தூரப் பார்வையில் தொலைவில் உள்ள பொருளை தெளிவாக காண முடியும் ஆனால் அருகில் உள்ள பொருளை காண முடியாது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்
- வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஏழாம் வகுப்பு – தமிழ் – இயல் 1 - http://tpnkalvi.in/general/7th-standard-tamil-lesson-1/
- Science Important Questions- Part 3 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-3/
- Daily 4 free test series – Today’s Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/daily-4-free-test-series-todays-test-1/
- Science Important Questions- Part 2 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-2/
- 50 Questions test series – Test 12 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-12/
- 20 Questions test series – Test 16 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-16/
- 20 Questions test series – Test 15 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-15/
- 50 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-11/
- 50 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-10/
- 50 Questions test series – Test 9 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-9/
- 50 Questions test series – Test 8 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-8/
- 100 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/100-questions-test-series-test-1/
- 50 Questions test series – Test 7 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-7/
- 50 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-6/
- 50 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-5/
- Science Important Questions- Part 1 - http://tpnkalvi.in/general/science-questions-for-tnpsc-part-1/
- 50 Questions test series – Test 4 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-4/
- 50 Questions test series – Test 3 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-3/
- 50 Questions test series – Test 2 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-2/
- 50 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-1/