ஒளியியல் & வெப்ப இயற்பியல் - பத்தாம் வகுப்பு அறிவியல் கேள்வி தொகுப்பு
தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/
வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகளைக் கொண்டு இலவசமாக நடத்தப்படும் தேர்வு
- மனிதரில் ஏற்படும் வயது முதிர்வு காரணமாக சிலியரி தசைகள் வலுவிழப்பதனால் விழி லென்ஸ் நெகிழ்வுத் தன்மையை இழக்கிறது இதனால் கண்ணில் ஏற்படும் குறைபாட்டின் பெயர் என்ன? விழி ஏற்பமைவு திறன் குறைபாடு PRESBYOPIA
- வயது முதிர்வு தூரப்பார்வை என்றால் என்ன?விழியின்
ஏற்பமைவு திறனில் குறைபாடு உடைய சில வயது முதிர்ந்த பெரியவர்கள் அருகில் உள்ள பொருளை தெளிவாக காண முடியாது. இது வயது முதிர்வு தூரப்பார்வை என்றழைக்கப்படுகிறது - கிட்டப்பார்வை தூரப்பார்வை இரண்டையும் குணப்படுத்தும் லென்ஸ் எது? இரு குவிய லென்ஸ்
- இரு குவிய லென்ஸின் அமைப்பு எவ்வாறு இருக்கும்? இந்த லென்ஸின் மேல்புறம் குழி லென்ஸ் (கிட்ட பார்வையை சரி செய்து நீண்ட தொலைவில் உள்ள பொருள்களை காண) கீழ்ப்புறம் குவிலென்ஸ் (தூரப்பார்வை சரி செய்து படிப்பதற்கு ஏற்ப) கொண்டு அமைக்கப்பட்டிருக்கும்.
- இணையான மற்றும் கிடைமட்ட கோடுகளை தெளிவாக காண இயலாத கண்ணின் குறைபாட்டின் பெயர் என்ன? பார்வை சிதறல் குறைபாடு ASTIGMATISM
- பார்வை சிதறல் குறைபாடு எதனால் ஏற்படுகிறது? மரபு
ரீதியாகவோ அல்லது கண்ணில் ஏற்படும் பாதிப்புகளான கண்புரை, கார்னியாவில் உருவாகும் புண்கள், விழியின் மேற்பரப்பில் உண்டாகும் காயங்கள் போன்றவற்றால் தோன்றும் - பார்வை சிதறல் குறைபாட்டை சரிசெய்யும் லென்ஸ் எது? உருளை லென்சுகள்(CYLINDRICAL LENS) மூலம் குறைபாட்டை சரி செய்யலாம்.
- நுண்ணோக்கிகளின் இரு வகைகள் என்ன? எளிய நுண்ணோக்கி மற்றும் கூட்டு நுண்ணோக்கி
- எளிய நுண்ணோக்கியில் எந்த லென்ஸ் பயன்படுத்தப்படுகிறது? குவி லென்ஸ்
- எளிய நுண்ணோக்கியில் பெரிய பிம்பம் கிடைக்க பொருள் எங்கு வைக்கப்பட வேண்டும்?குவிலென்சின் முக்கிய குவியதிற்க்கும் ஒளியியல் மையத்திற்கும் இடையே பொருள் வைக்கப்படும்போது பெரிய பிம்பம் கிடைக்கிறது.
- எளிய நுண்ணோக்கியில் பொருளானது குவிலென்சின் முக்கிய குவியதிற்க்கும் ஒளியியல் மையத்துக்கும் இடையே வைக்கப்படும் பொழுது பிம்பம் எங்கு கிடைக்கும்? நேரான பெரிதாக்கப்பட்ட மாயபிம்பம் பொருள் இருக்கும் அதே பக்கத்தில் தோற்றுவிக்கப்படுகிறது.
- எளிய நுண்ணோக்கியில் பிம்பத்தின் தொலைவானது எதற்கு சமமாக இருக்கும்? பிம்பத்தின் தொலைவானது தெளிவுறு காட்சியின் மீச்சிறு தொலைவுக்கு சமமாக இருக்கும்.
- எளிய நுண்ணோக்கியின் பயன்பாடுகள் என்ன?
1. கடிகாரம் பழுது
பார்ப்பவர்கள் ஆபரணம் செய்பவர்கள் ஆகியோர்களுக்கு
பயன்படுகிறது.
2. சிறிய எழுத்துக்களை படிக்க உதவுகிறது
3.பூக்கள் மற்றும் பூச்சிகளின் பாகங்களை உற்றுநோக்க பயன்படுகிறது
4. தடய அறிவியல் துறையில் கைரேகைகளை பகுத்தறிய பயன்படுகிறது. - கூட்டு நுண்ணோக்கி எளிய நுண்ணோக்கி இவற்றில் எதன் உருபெருக்கு திறன் அதிகம்? கூட்டு நுண்ணோக்கி
- எதனை குறைப்பதன் மூலம் நுண்ணோக்கியின் உருப்பெருக்க திறனை அதிகரிக்கலாம்? குவிலென்சின் குவிய தொலைவினை குறைப்பதன் மூலம் நுண்ணோக்கியின் உருப்பெருக்க திறனை அதிகரிக்கலாம்.
- கூட்டு நுண்ணோக்கியில் எத்தனை லென்சுகள் பயன்படுத்தப்படுகின்றன? இரண்டு குவிலென்சுகள்
- கூட்டு நுண்ணோக்கியில் உள்ள இரண்டு லென்ஸ்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? பொருளருகு லென்ஸ், கண்ணருகு லென்ஸ்
- கூட்டு நுண்ணோக்கியிலுள்ள இரு லென்ஸ்களில் எதன் குவிய தூரம் அதிகம் எதன் குவிய தூரம் குறைவு? பொருளருகு லென்ஸ் குறைந்த குவிய தூரம் கொண்டது, கண்ணருகு லென்ஸ் அதிக குவிய தூரம் கொண்டது.
- கூட்டு நுண்ணோக்கியில் இரு லென்ஸ்களும் எங்கு
பொருத்தப்பட்டுள்ளன? இரு லென்ஸ்களும் முன்னும் பின்னும் நகரக் கூடிய வகையில் அமைக்கப்பட்ட குறுகலான குழாயினுள் பொருத்தப்பட்டுள்ளன. - கூட்டு நுண்ணோக்கியின் உருப்பெருக்க திறன் எளிய
நுண்ணோக்கியின் உருப்பெருக்க திறனைக் காட்டிலும் எவ்வளவு அதிகம்? 50 முதல் 200 மடங்கு வரை அதிகமாக இருக்கும் - நகரும் நுண்ணோக்கி எந்த அளவிற்கு மிகச்சிறிய
தொலைவுகளை அளக்க கூடியது? 0.01 மில்லிமீட்டர் என்ற அளவிலான மிகச் சிறிய தொலைவுகளையும் நகரும் நுண்ணோக்கி அளக்கும். - நகரும் நுண்ணோக்கி எந்த கருவியின் தத்துவத்தின்
அடிப்படையில் செயல்படுகிறது? வெர்னியர் தத்துவத்தின் அடிப்படையில் - நகரும் நுண்ணோக்கியின் மீச்சிற்றளவு என்ன? 0.01 மில்லிமீட்டர்
- வெகு தொலைவில் உள்ள பொருள்களைக் காண உதவுவது எது? தொலைநோக்கிகள்
- முதல் தொலைநோக்கியை உருவாக்கியவர் யார்? 1608 ஆம் ஆண்டு ஜோகன் லிப்ரஷே என்பவரால் முதல் தொலைநோக்கி உருவாக்கப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்
- All Test links of tpnkalvi website -http://tpnkalvi.in/online-test/free-tests/all-test-links-of-tpnkalvi-website/
- வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஏழாம் வகுப்பு – தமிழ் – இயல் 1 - http://tpnkalvi.in/general/7th-standard-tamil-lesson-1/
- Science Important Questions- Part 3 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-3/
- Daily 4 free test series – Today’s Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/daily-4-free-test-series-todays-test-1/
- Science Important Questions- Part 2 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-2/
- 50 Questions test series – Test 12 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-12/
- 20 Questions test series – Test 16 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-16/
- 20 Questions test series – Test 15 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-15/
- 50 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-11/
- 50 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-10/
- 50 Questions test series – Test 9 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-9/
- 50 Questions test series – Test 8 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-8/
- 100 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/100-questions-test-series-test-1/
- 50 Questions test series – Test 7 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-7/
- 50 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-6/
- 50 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-5/
- Science Important Questions- Part 1 - http://tpnkalvi.in/general/science-questions-for-tnpsc-part-1/
- 50 Questions test series – Test 4 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-4/
- 50 Questions test series – Test 3 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-3/
- 50 Questions test series – Test 2 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-2/
- 50 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-1/