வெப்ப இயற்பியல் - பத்தாம் வகுப்பு அறிவியல் கேள்வி தொகுப்பு
தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/
வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகளைக் கொண்டு இலவசமாக நடத்தப்படும் தேர்வு
- ஒளியியல் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு தொலைநோக்கிகளின் இரு வகைகள் என்ன? ஒளியியல் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு தொலைநோக்கிகளை ஒளிவிலகல் தொலைநோக்கிகள் ஒளி எதிரொளிப்பு தொலைநோக்கிகள் என இரு வகைகளாக வகைப்படுத்தலாம்
- ஒளிவிலகல் தொலைநோக்கி களில் தொலைவில் உள்ள பொருள்களைக் காண எது பயன்படுகிறது? லென்ஸ்கள்
- ஒளிவிலகல் தொலைநோக்கியின் எடுத்துக்காட்டுகள் என்ன? கலிலியோ தொலை நோக்கி, கெப்ளர் தொலைநோக்கி, நிறமற்ற ஒளி விளக்கிகள்(ACHROMATIC REFLECTORS) ஆகியவை ஒளிவிலகல் தொலைநோக்கிகளுக்கு எடுத்துக்காட்டுகள்
- ஒளி எதிரொளிப்பு தொலைநோக்கிகளில் தொலைவிலுள்ள பொருள்களைக் காண எது பயன்படுகிறது? கோளக ஆடிகள்
- ஒளி எதிரொளிப்பு தொலைநோக்கி களுக்கு எடுத்துக்காட்டு என்ன? கிரிகோரியன் நியூட்டன், கேஸ்கிரைன் தொலைநோக்கிகள் போன்றவை ஒளி எதிரொளிப்பு தொலைநோக்கிக்கு எடுத்துக்காட்டுகள்
- தொலைநோக்கிகளை பயன்படுத்தி காணக்கூடிய பொருள்களை அடிப்படையாகக்கொண்டு தொலைநோக்கியின் இரு வகைகள் என்ன? வானியல் தொலைநோக்கிகள் (astronomical telescopes) நிலப்பரப்பு தொலைநோக்கிகள் (terrestrial telescope)
- வானியல் தொலைநோக்கிகள் எதற்குப் பயன்படுகின்றன? வான் பொருள்களான கோள்கள், விண்மீன்கள், விண்மீன் திரள்கள், துணைக்கோள்கள் போன்றவற்றை காணப் பயன்படுகின்றன
- வானியல் தொலைநோக்கியில் கிடைக்கும் பிம்பம் எவ்வகையானது? தலைகீழ் பிம்பம் கிடைக்கும்
- நிலப்பரப்பு தொலைநோக்கியில் எத்தகைய பிம்பம் கிடைக்கும்? நேரான பிம்பம்
- ஒளியானது தன் பாதையில் இருந்து விலகிச் செல்வதை எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஒளிவிலகல்
- வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் இடையே உள்ள தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஒளிவிலகல் எண்
- லென்ஸ் சமன்பாடு எது? 1/f=1/v-1/u
- அனைத்து உயிரினங்களுக்கும் வாழத் தேவையான வெப்ப ஆற்றலைத் தரும் மூலம் எது? சூரியன்
- வெப்பநிலையின் எஸ்ஐ அலகு என்ன? கெல்வின்
- வெப்பநிலையை அளக்க பயன்படும் மற்ற அலகுகள் என்ன? செல்சியஸ் மற்றும் பாரன்ஹீட்
- கெல்வின் அளவு கோளில் உள்ள தனிச்சுழி வெப்பநிலையை பொருத்து அளவிடப்படும் வெப்பநிலையை எவ்வாறு அழைக்கிறோம்? தனித்த அளவுகோல்
- வெப்ப இயக்கவியலின் வெப்பநிலையின் ஒரு அலகு என்பது எவ்வளவு? நீரின் மும்மைப் புள்ளியில் 1/273.16 பங்கு ஆகும்.
- செல்சியஸ் இல் இருந்து கெல்வின் ஆக மாற்ற சமன்பாடு என்ன? K=C+273
- பாரன்ஹீட்டிலிருந்து கெல்வின் ஆக மாற்ற சமன்பாடு என்ன? K=(F+460)×5/9
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்களுக்கு இடையே எந்த வெப்ப ஆற்றல் பரிமாற்றமும் இல்லை எனில் அந்தப் பொருள்கள் எந்த நிலையில் உள்ளன? வெப்பச் சமநிலையில் உள்ளன
- வெப்ப ஆற்றல் அதிகமாக உள்ள பொருளிலிருந்து வெப்பம் குறைவாக உள்ள பொருளுக்கு வெப்ப ஆற்றல் பரவும். இந்த நிகழ்வின் பெயர் என்ன? வெப்பப்படுத்துதல்
- வெப்ப ஆற்றலை உட்கவர்தல் அல்லது வெளியிடுதலின் எஸ்ஐ அலகு என்ன? ஜூல்
- வெப்ப பரிமாற்றத்தில் குளிர்ச்சியான பொருளினால் ஏற்கப்பட்ட வெப்பம் எதற்கு சமம்? சூடான பொருளினால் இழக்கப்பட்ட வெப்பத்திற்கு சமம்
- இரண்டு பொருள்களில் ஏற்படும் வெப்ப பரிமாற்ற நிகழ்வு எப்பொழுது முடிவுக்கு வரும்? இரண்டு பொருள்களும் ஒரே வெப்ப நிலையை அடையும் பொழுது
- ஒரு கிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை ஒரு டிகிரி செல்சியஸ் உயர்த்த தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஒரு கலோரி
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்
- All Test links of tpnkalvi website -http://tpnkalvi.in/online-test/free-tests/all-test-links-of-tpnkalvi-website/
- வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஏழாம் வகுப்பு – தமிழ் – இயல் 1 - http://tpnkalvi.in/general/7th-standard-tamil-lesson-1/
- Science Important Questions- Part 3 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-3/
- Daily 4 free test series – Today’s Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/daily-4-free-test-series-todays-test-1/
- Science Important Questions- Part 2 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-2/
- 50 Questions test series – Test 12 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-12/
- 20 Questions test series – Test 16 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-16/
- 20 Questions test series – Test 15 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-15/
- 50 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-11/
- 50 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-10/
- 50 Questions test series – Test 9 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-9/
- 50 Questions test series – Test 8 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-8/
- 100 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/100-questions-test-series-test-1/
- 50 Questions test series – Test 7 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-7/
- 50 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-6/
- 50 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-5/
- Science Important Questions- Part 1 - http://tpnkalvi.in/general/science-questions-for-tnpsc-part-1/
- 50 Questions test series – Test 4 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-4/
- 50 Questions test series – Test 3 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-3/
- 50 Questions test series – Test 2 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-2/
- 50 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-1/