வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 4

பகிர்க - Share:

பாடத் தலைப்பு : தாவரங்கள்‌ வாழும்‌ உலகம்‌
THE LIVING WORLD OF PLANTS

PDF  டவுன்லோட் செய்ய : இந்த குறிப்புகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்துகொள்ள விரும்புபவர்கள், கீழே உள்ள தேர்வை ATTEND செய்யவும். தேர்வை முடிக்கும் பொழுது உங்களுடைய மதிப்பெண்ணுடன் PDF டவுன்லோட் செய்வதற்கான லிங்க்கும் காட்டப்படும். அதனைக் கிளிக் செய்து PDF டவுன்லோட் செய்து கொள்ளவும்.

இந்த இயலில் மொத்தம் 85 குறிப்புகளும் அவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட 25 கேள்விகளும் உள்ளன.

இந்தத் தேர்வு குறிப்புகள் குறித்த உங்களின் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்

தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 25





#1. பின்வருவனவற்றுள் எதில் ஆணிவேர் தொகுப்பு இல்லை which of the following don't have tap root system

#2. மாஸ்கள் மற்றும் லிவர்வோர்ட்ஸ் எத்தனை ஆண்டுகளுக்கு முன் உருவானவை Mosses and liverworts appeared in the Earth around _______ years ago

#3. பின்வருவனவற்றுள் எது உணவுப்பொருட்களை வேரில் சேமிப்பது இல்லை Which of the following plant is not saving its food in the root system

#4. பின்வருவனவற்றுள் எது திறந்த விதை தாவரம் Among the following which one is a gymnosperm plant

#5. உலகின் மிக நீளமான நதி எது World's longest river

பகிர்க - Share:
பகிர்க - Share:

Results

பகிர்க - Share:

வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர்

மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும்

Click here

அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும்

Click here

இந்தக் கேள்விகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழே  கிளிக் செய்யவும்

Tamil Medium Notes – Click here

English Medium Notes – Click here

 

இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு  கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.

பகிர்க - Share:
பகிர்க - Share:

நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. 

மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும்

Click here

அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும்

Click here

இந்தக் கேள்விகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழே  கிளிக் செய்யவும்

Tamil Medium Notes – Click here

English Medium Notes – Click here

 

இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு  கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.

பகிர்க - Share:
click to copy shortcode




தேர்வு எழுதி முடிக்கும் பொழுது உங்களுடைய மதிப்பெண் மற்றும் PDF டவுன்லோட் செய்வதற்கான லிங்க் காட்டப்படும்

எங்கள் இணையதளத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்களுக்குமான ஒரு வரி குறிப்புகள் அனைத்தும் பாடவாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு பாடத்திலிருந்தும் எடுக்கப்பட்ட குறிப்புகளை கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்வும் (TEST) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்புகள் அனைத்தையும் படித்துவிட்டு அந்த தேர்வை எழுதிப் பார்க்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

ஒருவரி வினாக்கள் அனைத்தும் பாடப்புத்தகத்தை வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்டதாகும்.

இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்து வினாக்களையும் நீங்கள் முறையாக பயிற்சி செய்தாலே தமிழகத்தில் நடைபெறும் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறலாம்.

இது போன்று அனைத்து பாடங்களுக்குமான, வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட வினாக்களை பெற கீழே உள்ள டெலிகிராம்/ வாட்சப் குரூப்பில் இணைந்து கொள்ளவும்.

Telegram : https://t.me/THAMIZHPRIYANKALVI1

Whatsapp : https://chat.whatsapp.com/CAJ20fhIAwEHEmeagezQBS

youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi

Website: http://tpnkalvi.in/

வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட ஒரு வரி குறிப்புகள்

  1. உயிரினங்களின்‌ வாழ்க்கை முறை, அமைப்பு, மற்றும்‌ செயல்களைப்பற்றி பயிலும்‌ இயற்கை அறிவியல்‌ உயிரியல்‌ ஆகும்‌.
  2. வேர்‌ என்பது நிலத்துக்கு கீழே காணப்படும்‌ தாவரத்தின்‌ முக்கிய அச்சாகும்‌.
  3. வேர்களில்‌ கணுக்களும்‌, கணுவிடைப்‌ பகுதிகளும்‌ இல்லை.
  4. வேர்‌ மூடி, அதன்‌ நுனிப்‌ பகுதியில்‌ உள்ளது.  வேர்‌ நுனிக்குச்‌ சற்று மேற்பகுதியில்‌ வேர்த்‌ தூவிகள்‌ ஒரு கற்றையாக காணப்படுகிறது.
  5. வேர்கள்‌ நேர்‌ புவி நாட்டம்‌ உடையவை.
  6. தாவரங்களின்‌ வேர்த்‌ தொகுப்புகள்‌ இரண்டு வகைப்படும்‌, அவை
    1. ஆணிவேர்த்‌ தொகுப்பு
    2. சல்லிவேர்த்‌ தொகுப்பு
  7. முளைவேர்‌ தொடர்ந்து வளர்ந்து ஆணிவேரை உண்டாக்குகின்றது.
  8. முளைவேர்‌ தடித்த முதல்‌ நிலை வேராக வளர்கிறது. இதில்‌ இருந்து துணை வேர்களான இரண்டாம்‌ மற்றும்‌ மூன்றாம்‌ நிலை வேர்கள்‌ தோன்றுகின்றன.
  9. பொதுவாக இரு வித்திலைத்‌ தாவரங்களில் ஆணிவேர்‌ காணப்படுகிறது.
    எ.கா. அவரை, மா, வேம்பு
  10. சல்லிவேர்த்‌ தொகுப்பு-தாவரத்தின்‌ கணுவில்‌ இருந்து எராளமான மெல்லிய, சம பருமனுள்ள வேர்கள்‌ கொத்தாகத்‌ தோன்றி வளர்கின்றன. பெரும்பாலும்‌ ஒரு வித்திலைத்‌ தாவரங்களில்‌ சல்லிவேர்த்‌ தொகுப்பு காணப்படுகிறது. எடுத்துக்காட்டு நெல்‌, புல்‌, மக்காச்‌ சோளம்‌.
  11. வேரின்‌ பணிகள்‌
    1. வேர்கள்‌ தாவரத்தை பூமியில்‌ நிலைநிறுத்துகின்றன.
    2. மண்ணை இறுக பற்றிக்‌ கொள்ள உதவுகிறது.

    3.மண்ணில்‌ உள்ள நீரையும்‌, கனிமச்‌ சத்துக்களையும்‌ உறிஞ்சி தாவரத்தின்‌ பிற பாகங்களுக்கு அனுப்புகின்றன.
    4.சில தாவரங்கள்‌ தான்‌ தயாரித்த உணவைத்‌ தங்களின்‌ வேர்களில்‌ சேமிக்கின்றன.
    எடுத்துக்காட்டு. கேரட்‌, பீட்ரூட்‌,
  12. நிலத்தின்‌ மேற்பரப்பில்‌ வளர்கின்ற பகுதிக்கு தண்டுத்‌ தொகுப்பு என்று பெயர்‌. இதன்‌ மைய அச்சு தண்டு என அழைக்கப்படும்‌.
  13. தண்டுத்தொகுப்பானது தண்டு, இலைகள்‌, மலர்கள்‌ மற்றும்‌ கனிகளைக்‌ கொண்டுள்ளது.
  14. தண்டு பூமியின்‌ மேற்பரப்பில்‌ சூரியனை நோக்கி வளர்கிறது.
  15. தண்டில்‌ கணுக்களும்‌, கணுவிடைப்‌ பகுதிகளும்‌ உள்ளன. தண்டில்‌ இலைகள்‌ தோன்றும்‌ பகுதிக்கு கணு என்று பெயர்‌. இரண்டு கணுக்களுக்கு இடையே உள்ள தூரம்‌ கணுவிடைப்‌ பகுதி என்று அழைக்கப்படுகிறது.
  16.  தண்டின்‌ நுனியில்‌ தோன்றும்‌ மொட்டு நுனி மொட்டு என்றும்‌, தண்டின்‌ இலையின்‌ கோணத்தில்‌ தோன்றும்‌ மொட்டு கோண மொட்டு என்றும்‌ அழைக்கப்படுகிறது.
  17. தண்டின்‌ பணிகள்‌
    1. தண்டானது கிளைகள்‌, இலைகள்‌, மலர்கள்‌, மற்றும்‌ கனிகள்‌ ஆகியவற்றைத்‌ தாங்குகின்றது.
    2. வேரினால்‌ உறிஞ்சப்பட்ட நீர்‌ மற்றும்‌ கனிமங்கள்‌ தண்டின்‌ வழியாக தாவரத்தின்‌ மற்ற பாகங்களுக்குக்‌ கடத்தப்படுகிறது.
    3. இலையினால்‌ தயாரிக்கப்பட்ட உணவு தண்டின்‌ வழியாக மற்ற தாவரத்தின்‌ பாகங்களுக்கு கடத்தப்படுகின்றன.
    4. சில தாவரங்கள்‌ தண்டில்‌  உணவைச்‌ சேமித்து வைக்கின்றன
    ௭.கா. கரும்பு.
  18. தண்டின்‌ கணுவின்‌ மேல்‌ விரிந்த தட்டையான பசுமை நிறத்தில்‌ தோன்றும்‌ புறஅமைப்பு இலை ஆகும்‌.
  19. தண்டையும்‌, இலையையும்‌ இணைக்கும்‌ காம்புப்‌ பகுதியே இலைக்‌ காம்பு எனப்படும்‌.
  20.  பசுமையான தட்டையான பகுதிக்கு இலைத்‌ தாள்‌ அல்லது இலைப்‌ பரப்பு என்று பெயர்‌.
  21. இலையின் மையத்தில்‌உள்ள முக்கிய நரம்பிற்கு மைய நரம்பு என்று பெயர்‌.
  22. இலையின் மைய நரம்பிலிருந்து கிளை நரம்புகள்‌ தோன்றுகின்றன.
  23. தண்டு அல்லது கிளையுடன்‌ இணைக்கப்பட்டுள்ள இலையின்‌ பகுதி இலையடிப்‌ பகுதி எனப்படும்‌.
  24. இலையடிப்‌ பகுதியில்‌ இரண்டு சிறிய பக்க வாட்டு வளரிகள்‌ உள்ளன. அதற்கு இலையடிச்‌ செதில்கள்‌ என்று பெயர்‌.
  25. இலைகள்‌ பசுமை நிறத்தில்‌ உள்ளன, அதற்கு காரணம்‌ அவற்றிலுள்ள பச்சை நிறமிகளான பச்சையம்‌ ஆகும்‌. இலையின்‌ அடிப்பகுதியில்‌ காணப்படும்‌ நுண்ணிய துளைகள்‌ இலைத்‌ துளைகள்‌ எனப்படுகிறது.
  26. இலையின்‌ பணிகள்‌
    1. ஒளிச்‌ சேர்க்கையின்‌ மூலம்‌ உணவைத்‌ தயாரிக்கிறது.
    சுவாசித்தலுக்கு உதவுகிறது.
    2. இலைத்துளை வழியே நீராவிப்‌ போக்கு நடைபெறுகிறது.
  27.  நீரில்‌ வாழும்‌ விக்‌டோரியா அமேசோனிக்கா என்ற தாவரத்தின்‌ இலைகள்‌ மூன்று மீட்டர்‌ விட்டம்‌ வரையில்‌ வளரும்‌.
  28. நன்கு வளர்ச்சி அடைந்த இலையின்‌ மேற்பரப்பு 45 கிலோ கிராம்‌ எடையோ அல்லது அதற்கு இணயான ஒருவரைத்‌ தாங்கும்‌ தன்மை கொண்டது.
  29. பூவின்‌ அடிப்படையில்‌ - தாவரங்களை இரு வகைகளாக பிரிக்கலாம்‌. அவை பூக்கும்‌ தாவரங்கள்‌, பூவாத்‌ தாவரங்கள்‌ ஆகும்‌.
    சூரியகாந்தி- பூக்கும்‌ தாவரம்‌
    ரிக்ஸியா - பூவாத்தாவரம்‌
  30.  விதை அமைந்திருக்கும்‌ தன்மையில்‌ - தாவரங்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்‌. அவை
    1. ஆஞ்சியோஸ்பெர்ம்கள்‌ (மூடிய விதைத்‌ தாவரங்கள்‌)
    2. ஜிம்னோஸ்பெர்ம்கள்‌ (திறந்த விதைத்‌ தாவரங்கள்‌)
    மா- மூடிய விதைத்தாவரம்‌
    சைகஸ்‌- திறந்த விதைத்‌ தாவரம்‌
  31. கடலின்‌ அடி மட்டத்தில்‌ இருந்து மலையின்‌ உச்சி வரை தாவரங்கள்‌ மற்றும்‌ விலங்குகளின்‌ வாழிடங்களாக உள்ளன.
  32. நீர்‌ வாழிடம்‌ என்பது நிரந்தரமாகவோ அல்லது அவ்வப்போது நீர்‌ சூழ்ந்தோ காணப்படும்‌. இவைகள்‌ இருவகைப்படும்‌.
    1. நன்னீர்‌ வாழிடம்‌
    2. கடல்‌ நீர்‌ வாழிடம்‌
  33. ஆறுகள்‌, குளங்கள்‌, குட்டைகள்‌, மற்றும்‌ ஏரிகள்‌ இவையாவும்‌ நன்னீர்‌ வாழிடங்கள்‌ ஆகும்‌. ஆகாயத்‌ தாமரை, அல்லி மற்றும்‌ தாமரை ஆகியவை நன்னீரில்‌ காணப்படும்‌ தாவரங்களாகும்‌.
  34. உலகில்‌ மிக நீளமான நதி நைல்‌ நதியாகும்‌. இது 6,650 கி.மீ. நீளம்‌ உடையது. இந்தியாவின் மிக நீளமான நதி கங்கையாகும்‌. இதன்‌ நீளம்‌ 2,525 கி.மீ. நீளம்‌ உடையது.
  35. நீர்த்தாவரங்களின்‌ வேர்கள்‌ வளர்ச்சி குன்றியவை
  36. தண்டிலும்‌, இலைப்‌ பகுதிகளிலும்‌ காற்று அறைகள்‌ அதிகமாகக்‌ இருப்பதால்‌ இவைகள்‌ நீரில்‌ எளிதில்‌ மிதக்கின்றன.
  37. தாமரையின்‌ இலைக்‌காம்பில்‌ உள்ள காற்று இடைவெளிகள்‌ நீரில்‌ மிதக்க உதவுகின்றன.
  38. பூமியின்‌ மேற்பரப்பானது 70 சதவீதம்‌ கடல்‌ நீரினால்‌ சுழப்பட்டுள்ளது.
  39. பூமியின்‌ மொத்த ஒளிச்சேர்க்கையில்‌ சுமார்‌ 40% கடல்‌ வாழ்‌ தாவரங்களில்‌ நடைபெறுகிறது.
    உதாரணம்‌, கடல்‌ பாசிகள்‌, கடல்‌ புற்கள்‌, நில ஈரத்‌ தாவரங்கள்‌, புற்கள்‌ மற்றும்‌ தாவர மிதவைகள்‌ (தனித்து நீரில்‌ மிதக்கும்‌ பாசிகள்‌)
  40. நிலவாழிடங்கள்‌ காடுகள்‌, புல்‌வெளிகள்‌ மற்றும்‌ பாலைவனங்கள்‌ என மூவகைப்படும்‌.
  41. பண்ணைகள்‌, நகரங்கள்‌, மாநகரங்கள்‌ ஆகியவை மனிதனால்‌ உருவாக்கப்பட்ட சில நில வாழிடங்களாகும்‌.
  42.  உலகில்‌ 28 சதவீதம்‌ நில வாழிடங்கள்‌ உள்ளன.
  43. 470 மில்லியன்‌ ஆண்டுகளுக்கு முன்‌ உருவான நில வாழ்‌ தாவரங்கள்‌, மாஸ்கள்‌ மற்றும்‌ லிவர்வோர்ட்ஸ்‌.
  44. தென்‌ அமெரிக்காவில்‌ உள்ள அமேசான்‌ மலைக்‌ காடுகள்‌ உலகிற்கான ஆக்ஸிஜன்‌ தேவையில்‌ பாதியைக்‌ கொடுக்கிறது.
  45. நீரின்‌ அளவு மிகக்குறைவாக உள்ள இடத்தை பாலைவனம்‌ என்கிறோம்‌.
  46. இவைகள்‌ பூமியில்‌ மிகவும்‌ வறண்ட பகுதிகள்‌ ஆகும்‌.
  47. ஆண்டின்‌ சராசரி 25 செ.மீக்கும்‌ குறைவாக மழை பெய்யும்‌.
  48. பூமியில்‌ சுமார்‌ 20 சதவீதம்‌ பாலைவனம்‌ உள்ளன.
  49. பாலைவனத்‌ தாவரங்கள்‌ நீரையும்‌ கனிம உப்புக்களையும்‌ இலையில்‌ சேமித்து வைப்பதால்‌ இலைகள்‌ தடிமனாக உள்ளன. கள்ளித்‌ தாவரங்களில்‌ நீரை தண்டில்‌ சேமித்து வைக்கின்றன, அதன்‌ 'இலைகள்‌ முட்களாக மாற்றம்‌ அடைந்துள்ளன.
  50. பாலைவனத்‌ தாவரங்கள்‌ நன்கு வளர்ச்சி அடைந்த நீளமான வேர்கள்‌ கொண்டுள்ளதால்‌ மண்ணின்‌ மிக ஆழத்திற்குச்‌ சென்று நீரை உறிஞ்சுகின்றன.
    ௭.கா. சப்பாத்திக்‌ கள்ளி, அகேவ்‌, சோற்றுக்‌ கற்றாழை, பிரையோபில்லம்‌.
  51. பாலைவனத்‌தின்‌  வகைகள்‌
    1. வெப்ப வறட்சிப்‌ பாலைவனங்கள்‌.
    2. மித வெப்ப பாலைவனங்கள்‌.
    3. கடல்‌ சார்ந்த பாலைவனங்கள்‌.
    4. குளிர்‌ பாலைவனங்கள்‌.
  52.  மணல்‌ குன்றுகளால்‌ ஆன மிகப்‌ பெரிய இந்திய பாலைவனமான தார்‌ பாலைவனம்‌ இந்திய துணைக்‌ கண்டத்தில்‌ உள்ளது. இதன்‌ பகுதிகள்‌ ராஜஸ்தான்‌ மாநிலத்திலும்‌, வடமேற்கு இந்தியாவிலும்‌, பஞ்சாபிலும்‌, சிந்து மாகாணத்திலும்‌ மற்றும்‌ கிழக்கு பாகிஸ்தானிலும்‌ விரிந்துள்ளது.
  53. புல்வெளி வாழிடத்தில்‌ அதிகமாக புற்கள்‌ காணப்படுகிறது. இவை மிகச்சிறியன முதல்‌ உயரமான புற்களைக்‌ கொண்டதாக இருக்கும்‌. எ.கா. புல்வளிகள்‌
  54. காடுகள்‌ மிகப்‌ பரந்த நில பரப்பில்‌ அதிகமாக மரங்களைக்‌ கொண்டுள்ளன.
  55. காடுகள்‌  வெப்ப மண்டல காடுகள்‌, குளிர்‌ பிரதேசகாடுகள் மற்றும்‌ மலைக்‌ காடுகள்‌ என வகைப்படுத்தலாம்‌. இங்கு ஆண்டு சராசரி மழை அளவு 25 - 200 செ.மீ ஆக இருக்கும்‌.
  56. அக்டோபர்‌ மாதம்‌ முதல்‌ திங்கட்கிழமை உலக வாழிட நாளாக அனுசரிக்கப்படுகிறது.
  57. தாவரங்கள்‌ தாங்கள்‌ வளரும்‌ சூழ்நிலைக்கேற்ப தகவமைத்துக்‌ கொண்டு பல்லாண்டுகள்‌ வாழ்கின்றன.
  58. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை அல்லது வாழிடங்களில்‌ வாழும்‌ தாவரங்கள்‌, குறிப்பிட்ட தகவமைப்புகளை பெற்று அவ்வாழிடத்தில்‌ வாழ்கின்றன.
  59. பற்றுக்‌ கம்பி (ஏறு கொடிகள்‌)- பட்டாணி, பாகற்காய்‌ போன்ற மெலிந்த தண்டு உடைய தாவரங்கள்‌ பற்றுக்கம்பியைப்‌ பெற்றுள்ளன. பற்றுக்‌ கம்பியானது ஆதாரத்தைச்‌ சுற்றிக்கொண்டு அத்தாவரங்கள்‌ மேல்‌ ஏறுவதற்கு ஏதுவாக உள்ளது.
    எ.கா. 1. இனிப்பு பட்டாணி - சிற்றிலைகள்‌ பற்றுக்‌ கம்பிகளாக மாறியுள்ளன
    2. பாகற்காய்‌ - கோணமொட்டு பற்றுக்‌ கம்பிகளாக மாற்றம்‌ அடைந்து. அவைகள்‌ மேலே ஏறுவதற்கு உதவுகின்றன.
  60. பின்னு கொடி நீண்ட, மெலிந்த வளையும்‌ தன்மையுடைய தண்டுகளால்‌ நேராக நிலைத்து நிற்கும்‌ தன்மை அற்றவை. எனவே அருகில்‌ உள்ள ஆதாரத்தைப்‌ பற்றிக்‌ கொண்டு வளர்கின்றன. ௭.கா சங்குப்‌ பூ, மல்லிகை.
  61. வளரும்‌ பருவ நிலையில்‌ அதிவேகமாக வளரக்‌ கூடிய தாவரம்‌ மூங்கில்‌ ஆகும்‌
  62. சில தாவரங்களின்‌ இலைகள்‌ முழுமையாகவோ அல்லது சிறு பகுதியாகவோ கூரிய முட்களாக அல்லது சிறிய முட்களாக மாறுகின்றன. இவை பாதுகாப்பிற்கு உதவுகின்றன.
    1. அகேவ்‌ (ரயில்‌ கற்றாழை) - இந்த வகைக்‌ கற்றாழையில்‌ இலையின்‌ நுனிப்பகுதி மற்றும்‌ விளிம்புகள்‌ முட்களாக மாறுபாடு அடைந்துள்ளது.
    2. சப்பாத்திக்‌ கள்ளி - சப்பாத்திக்‌ கள்ளியில்‌ இலைகள்‌ சிறுமுட்களாக மாறி உள்ளன.
    3. காகிதப்‌ பூ (போகன்வில்லியா) - தண்டில்‌ கூர்மையான முட்கள்‌ காணப்படுகின்றன.
  63. ஆணி வேர்‌: முதல்‌ நிலை வேர்‌ செங்குத்தாக கீழ்‌ நோக்கி வளர்ந்து கிளை வேர்களை உருவாக்கும்‌.
  64. சல்லி வேர்‌ : வேர்க்‌ கொத்தாக சம அளவு உடையதாக இருக்கும்‌.
  65. வாழிடம்‌ : ஒரு குறிப்பிட்ட உயிரினம்‌ வாழும்‌ இடம்‌ ஆகும்‌.
  66. நீர்‌ வாழிடம்‌ : இயற்கையாக நீரை வாழ்விடமாக கொண்ட தாவரங்கள்‌.
  67. நில வாழிடம்‌ : இயற்கையாக நிலத்தை வாழ்விடமாக கொண்ட தாவரங்கள்‌.
  68. தகவமைப்பு : ஒரு குறிப்பிட்ட வாழிடத்தில்‌ உயிரினம்‌ உயிர்‌ வாழ்வதற்கு அதன்‌ அமைப்பிலும்‌, பண்பிலும்‌ பெற்றிருக்கும்‌ மாற்றங்கள்‌.
  69. மாற்றுருக்கள்‌ : சுற்றுப்புறக்‌ காரணிகளால்‌ ஒரு உயிரினத்தில்‌ ஏற்படும்‌ மாற்றம்‌ அடைந்த உறுப்புகள்‌ .
  70. பற்றுக்கம்பி : மெலிந்த தண்டின்‌ மாற்றுரு.
  71. பின்னு கொடி: அருகில்‌ உள்ள மரங்களையும்‌ ஆதாரங்களையும்‌ பற்றிக்‌ கொள்ளும்‌ தாவரங்கள்‌.
  72. முட்கள்‌ : கூர்மை மற்றும்‌ கடினமான தண்டின்‌ மாற்றுரு பகுதி.
  73. பூக்கும்‌ தாவரங்களில்‌ இரு முக்கிய தொகுப்புகள்‌ உள்ளன. அவையாவன
    1. வேர்த்‌ தொகுப்பு
    2. தண்டுத்‌ தொகுப்பு
  74. வேர்‌ :தாவரத்தை மண்ணில்‌ நிலைநிறுத்தச்‌ செய்கிறது.
  75. வேர்‌ மண்ணிலிருந்து நீரையும்‌ கனிம உப்புகளையும்‌ உறிஞ்சுகிறது.
  76. தண்டு, தாவரத்தின்‌ மைய அச்சின்‌ மேல்நோக்கி வளரும்‌ பகுதிகள்‌ ஆகும்‌. இதில்‌ கணு, கணுவிடைப்‌ பகுதி காணப்படுகின்றன.
  77. இலைகளின்‌ மூன்று முக்கியப்பணிகள்‌
    1.ஒளிச்சேர்க்கை
    2. சுவாசம்‌
    3. நீராவிப்‌ போக்கு
  78. தாவரங்கள்‌ வாழும்‌ சுற்றுப்புறம்‌ அதன்‌ வாழிடம்‌ ஆகும்‌. இரண்டு வகையான வாழிடங்கள்‌ உள்ளன, அவை
    1. நீர்‌ வாழ்வன
    2. நில வாழ்வன
  79. தகவமைவுகள்‌ - ஒரு தாவரம்‌ அதன்‌ வாழிடத்தில்‌ வாழ்வதற்கு, பயன்படக்கூடிய  சிறப்பு அம்சங்கள்‌.
  80. பற்றுக்‌ கம்பி - மெலிந்த தண்டுடைய தாவரங்களை பற்றுவதற்கு பயன்படும்‌ உறுப்பு
  81. பின்னு கொடி - மெலிந்த தண்டுடைய தாவரங்கள்‌ நேராக நிற்க உதவுவது.
  82. குளம்‌ நன்னீர்‌  வாழிடத்திற்கு உதாரணம்‌.
  83. இலைத்‌ துளையின்‌ முக்கிய வேலை நீராவிப்போக்கு
  84. நீரை உறிஞ்சும்‌ பகுதி வேர்‌ ஆகும்‌.
  85. நீர்‌ வாழ்‌ தாவரங்களின்‌ வாழிடம்‌ நீர்‌

LINE BY LINE NOTES FOR ENGLISH MEDIUM STUDENTS

  1. Biology is a natural science concerned with the study of life and living organisms, including their structure and functions.
  2. The underground part of the main axis of a plant is known as root. It lies below the surface of the soil. 
  3. Root has no nodes and internodes. It has a root cap at the tip. 
  4. A tuft of root hairs is found just above the root Tip.
  5. Roots are positively geotropic in nature.
  6. Plants root system is classified into two types.
    1. Tap root system

    2. Fibrous root system
  7. Tap root system consists of a single root, called taproot, which grows straight down into the ground. 
  8. Smaller roots, called lateral roots arise from the taproot.
  9. They are seen in dicotyledonous plants. Example: Bean, Mango, Neem.
  10. Fibrous root system consists of a cluster of roots arising from the base of the stem. They are thin and uniform in size. It is generally seen in monocotyledonous plants. Example: Grass, Paddy, Maize.
  11. Functions of the Root
    1. Fixes the plant to the soil.

    2. Absorbs water and minerals from the soil.
    3. Stores food in some plants like Carrot and beet root.
  12. The aerial part of the plant body above the ground is known as the shoot system. Main axis of the shoot system is called the stem.
  13. The shoot system consists of stem, leaves, flowers and fruits. 
  14. Stem grows above the soil, and it grows towards the sunlight. 
  15. Stem  has nodes and internodes. Nodes are the parts of stem, where leaf arises. The part of the stem between two successive nodes is called internode.
  16. The bud at the tip of the stem is known as apical or terminal bud, and the buds at the axils of the leaves are called auxiliary buds.
  17. Functions of stem
    1. supports the branches, leaves, flowers and fruits.
    2. transports water and minerals from roots to upper aerial plant parts.
    3. transports the prepared food from leaves to other parts through stem.
    4. stores food as in the case of sugarcane.
  18. The leaf is a green, flat expanded structure borne on the stem at the node.
  19. A leaf has a stalk called petiole. 
  20. The flat portion of the leaf is called leaf lamina or leaf blade. 
  21. On the lamina, there is a main vein called midrib. 
  22. Other veins are branchout from mid rib. 
  23. The portion of the leaf connected in the nodal region of the stem is known as the leaf base.
  24.  Leaves of some plants possess a pair of lateral outgrowth on the base, on either side of auxiliary bud. These are called stipules. 
  25. The green colour of the leaf is due to the presence of green coloured pigment called chlorophyll. On the lower side of the leaf there are tiny pores or openings known as stomata.
  26. The green leaves
    1. Prepare food by the process of

    2. photosynthesis.
    3. Helps in respiration.

    4. Carry out transpiration.
  27. Victoria amazonica, the leaves of this plant grow up to 3 metres across.
  28.  A mature Victoria leaf can support an evenly distributed Load of 45 Kilograms or apparently young person.
  29. Based on flower: Plants can be classified into two main groups.
    1. Flowering plants
    2. Non-flowering plants.
    Sun Flower - Flowering plant
    Riccia-Nonflowering plant
  30. Based on position of sead: Plants can be divided into two groups.
    1. Angiosperms
    2. Gymnosperms
    Mango-Angiosperm
    Cycas-Gymnosperm
  31. From the depths of the ocean to the top of the highest mountain, habitats are places where plants and animals live.
  32. Aquatic habitat includes areas that are permanently covered by water and surrounding areas that are occasionally covered by water. There are two types namely
    1. Fresh water habitat
    2. Marine water habitat.
  33. Nile is the longest river in the world. It is 6650 Km long. The Longest river in India is Ganges River. It is 2525 Km long.
  34. Rivers, lakes, ponds and pools are the fresh water habitat. Water hyacinth, water lily and lotus are seen in the fresh water habitat. 
  35. Fresh water plant”s roots are very much reduced in size.
  36. Stem and leaves have air chambers that allow aquatic plants to float in water.
  37. Air spaces in stems and petioles of lotus are useful for floating in water
  38. Earth’s surface, more than 70% is covered by oceans.
  39. Oceans also support the growth of plants. Marine plants perform about 40% of all photosynthesis that occurs on the planet.
    Example: Marine Algae, Sea grasses, Marsh grass, Phytoplanktons.
  40. Terrestrial habitats are the ones that are found on land like forest, grassland and desert. 
  41. Terrestrial habitat also includes man-made habitats like farms, towns and cities.
  42. Terrestrial habitat can be as big as a continent or as small as an island. 
  43. Terrestrial habitat make up about 28% of the entire world habitat.
  44. The first land plants appeared around 470 million years ago. They were mosses and liverworts. 
  45. The Amazon Rain Forest in South America produces half of the world’soxygen supply.
  46. A habitat without much water is called deserts. Deserts are the driest place on earth. 
  47. Deserts get fewer than 25cm of rainfall annually. 
  48. Deserts cover atleast 20% of the earth. 
  49. The plants which grows in Deserts  habitat have thick leaves that store water and minerals. The plants like cactus store water in their stem and the leaves are reduced to spines. 
  50. Deserts  habitat plants  have long roots that go very deep in the soil in the search of water.
  51. Deserts Types:
    (i) Hot dry deserts,
    (ii) Semi arid deserts,
    (iii) Coastal deserts,
    (iv) Cold deserts.
    Example: Cactus, Agave, Aloe, Bryophyllum
  52. Thar Desert, also called Great Indian Desert, is an arid region of rolling sand hills on the Indian subcontinent. It is located partly in Rajasthan state, north-western India, and partly in Punjab and Sindh (Sind) provinces, eastern Pakistan.
  53. Grassland is an area where the Vegetation is dominated by grasses. Grasses ranges from short to tall. Eg. Savanna Grassland
  54. Forest is a large area dominated by trees. 
  55. There are three types of forests and are:- tropical forests, temperate forests and mountain forest. Annual rain fall ranges from 25-200 cm. 
  56. World habitat day is observed on 1st Monday of October.
  57. Adaptations are special features in plants which help them to survive in the habitats they live in over a long period. 
  58. Plants in a specific environment have developed special features which help them to grow and live in that particular habitat.
  59.  Tendril Climber:- Tendril is a twining climbing organ of some weak stemmed plants like peas and bitter gourd. Tendril coils round a support and help the plant to climb.
    Example: 1. Sweet Peas Leaflets are modified into tendrils.

    2. Bitter Gourd Axillary buds are modified into tendril which helps the plant to climb.
  60. Twiners:- Some plants have weak stems. They cannot stand straight on their own. They must climb on any support to survive.
    Example: Clitoria and Jasmine
  61. Bamboo is one of  the fast growing plants, during active growth phase.
  62. Leaves of some plants become wholly or partially modified into sharp pointed structures called “thorns or spines” for defensive purpose.
    Example: 1. Agave - the leaf apex and margins are modified into thorns
    2. Opuntia - the leaves are modified into spines.

    3. bougainvillea – the stem has sharp thorns.
  63. Tap root: A primary root that grows vertically downward and gives off small lateral roots.
  64.  Fibrous root: Cluster of roots.
  65. Habitat – The area where a particular organism actually lives.
  66.  Aquatic – Plants whose natural habitat is water.
  67.  Terrestrial – Plants whose natural habitat is land.
  68.  Adaptation – Changes in the structure or behaviour of an organism that helps the plants to survive in a particular habitat.
  69.  Modification – a change in organism caused by environmental factors.
  70.  Tendril climber: A slender organ of a modification of stem
  71.  Twiner: Plants which climb up trees and other objects.
  72.  Thorn: A sharp and stiff part of a modification of stem
  73. The plant body of flowering plant consists of two main parts. They are
    1. Root system

    2. Shoot system
  74. Root : fix the plants to the soil.
  75. Roots absorb water and minerals from the soil
  76. Stem is the ascending part of the plant axis. It has nodes and internodes.
  77. Leaves perform three major functions such as
    1.Photosynthesis.
    2. Respiration.
    3. Transpiration
  78. The surroundings where plant live is called their habitat.   The two major habitats.
    1. Aquatic habitat

    2. Terrestrial habitat
  79. Adaptations are special features in plants which help them to survive in their habitat.
  80. Tendril is a climbing organ of some weak stemmed plants
  81. Twiner have weak stem and they can’t stand straight on their own
  82. Pond is an example of Freshwater Habitat.
  83. The important function of stomata is Transpiration
  84. Organ of absorption Root
  85. The habitat of water hyacinth is Aquatic

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்

 

1. 20 Questions test series – Test 12- http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-12/
2. 20 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-11/
3. 20 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-10/
4. 20 Questions test series – Test 9- http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-9/
5. 20 Questions test series – Test 8- http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-8/
6. 20 Questions test series – Test 7- http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-7/
7. 20 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-6/
8. 20 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-5/
9. 20 Questions test series – Test 4 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-4/
10. 20 Questions test series – Test 3 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-3/
11. 20 Questions test series – Test 2 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-2/
12. 20 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-1/

பகிர்க - Share:

1 thought on “வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 4”

  1. எனக்கு மிகவும் பயன் உள்ளதாக Erunthathu .இந்த தேர்வு எங்களுக்கு கிடைத்த ஒரு pokkisom நன்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *