வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 2- STUDY MATERIAL

பகிர்க - Share:

இதற்கு முந்தைய தேர்வினை எழுத கீழே கிளிக் செய்யவும்

பாடத் தலைப்பு விசையும் இயக்கமும் FORCE AND MOTION

PDF  டவுன்லோட் செய்ய : இந்த குறிப்புகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்துகொள்ள விரும்புபவர்கள், கீழே உள்ள தேர்வை ATTEND செய்யவும். தேர்வை முடிக்கும் பொழுது உங்களுடைய மதிப்பெண்ணுடன் PDF டவுன்லோட் செய்வதற்கான லிங்க்கும் காட்டப்படும். அதனைக் கிளிக் செய்து PDF டவுன்லோட் செய்து கொள்ளவும்.

இந்த இயலில் மொத்தம்  53 குறிப்புகளும் அவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட 20 கேள்விகளும் உள்ளன.

இந்தத் தேர்வு குறிப்புகள் குறித்த உங்களின் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்

தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 20





#1. பம்பரத்தின் இயக்கம் எந்த வகை இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு Rotating top is an example of

#2. தனி ஊசல் எந்த வகை இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு Pendulum is an example for

#3. கயிற்றின்‌ ஒரு முனையில்‌ கல்லினைக்‌ கட்டிச்‌ சுற்றுதல்‌ எந்த வகை இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு swirling stone tied to the rope is an example of

#4. உசைன் போல்ட் 100 மீட்டர் தூரத்தை ___________வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார் Usain bolt crossed 100 metre in _________ seconds and made a world record

#5. ரோபோட்டா என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது The word robota comes from

பகிர்க - Share:
பகிர்க - Share:

Results

பகிர்க - Share:

வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர்

மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும்

Click here

அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும்

Click here

இந்தக் கேள்விகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழே  கிளிக் செய்யவும்

Tamil Medium Notes – Click here

English Medium Notes – Click here

 

இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு  கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.

பகிர்க - Share:
பகிர்க - Share:

நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. 

மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும்

Click here

அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும்

Click here

இந்தக் கேள்விகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழே  கிளிக் செய்யவும்

Tamil Medium Notes – Click here

English Medium Notes – Click here

 

இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு  கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.

பகிர்க - Share:
click to copy shortcode


தேர்வு எழுதி முடிக்கும் பொழுது உங்களுடைய மதிப்பெண் மற்றும் PDF டவுன்லோட் செய்வதற்கான லிங்க் காட்டப்படும்

எங்கள் இணையதளத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்களுக்குமான ஒரு வரி குறிப்புகள் அனைத்தும் பாடவாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு பாடத்திலிருந்தும் எடுக்கப்பட்ட குறிப்புகளை கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்வும் (TEST) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்புகள் அனைத்தையும் படித்துவிட்டு அந்த தேர்வை எழுதிப் பார்க்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

ஒருவரி வினாக்கள் அனைத்தும் பாடப்புத்தகத்தை வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்டதாகும்.

இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்து வினாக்களையும் நீங்கள் முறையாக பயிற்சி செய்தாலே தமிழகத்தில் நடைபெறும் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறலாம்.

இது போன்று அனைத்து பாடங்களுக்குமான, வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட வினாக்களை பெற கீழே உள்ள டெலிகிராம்/ வாட்சப் குரூப்பில் இணைந்து கொள்ளவும்.

Telegram : https://t.me/THAMIZHPRIYANKALVI1

Whatsapp : https://chat.whatsapp.com/CAJ20fhIAwEHEmeagezQBS

youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi

Website: http://tpnkalvi.in/


வரி
வரியாகப் படித்து எடுக்கப்பட்ட ஒரு வரி குறிப்புகள்

  1. நாம்‌ கதவை மூடும்போதும்‌, கால்பந்து விளையாடும்‌ போதும்‌, புத்தகப்பையைத்‌ தூக்கும்போதும்‌ என அனைத்துச்‌ செயல்களிலும்‌ தள்ளுதல்‌ அல்லது இழுத்தல்‌ என ஏதேனும்‌ ஒரு வழியில்‌ விசையைப்‌ பொருளின்‌ மீது செலுத்துகிறோம்‌.
  2. புத்தகமானது மேசையில்‌ ஒரே இடத்தில்‌ இருந்தால்‌ அது ஓய்வு நிலையில்‌ இருப்பதாகவும்‌ நீங்கள்‌ அதனைத்‌ தள்ளி ஒரு இடத்திலிருந்து மற்றோர்‌ இடத்திற்கு மாற்றும்போது இயக்கநிலையில்‌ இருப்பதாக கருதப்படுகிறது.
  3. காலத்தைப்‌ பொறுத்து ஒரு பொருள்‌ தனது நிலையை மாற்றிக்கொள்வதை இயக்கம்‌ எனவும்‌, தனது நிலையை மாற்றிக்‌ கொள்ளாமல்‌ ஒரே இடத்தில்‌ இருப்பதை ஓய்வு நிலை எனவும்‌ கூறலாம்‌.
  4. இந்தியாவின்‌ பழங்கால வானியலாளர்‌ ஆரியபட்டா “எவ்வாறு நீங்கள்‌ ஆற்றில்‌ ஒரு படகில்‌ செல்லும்போது ஆற்‌றின்‌ கரையானது உங்களுக்குப்‌ பின்‌புறம்‌ எதிர்த்திசையில்‌ செல்வது போலத்‌  தோன்றுகிறதோ, அதுபோலவே வானில்‌ உள்ள நட்சத்திரங்களை நாம்‌ காணும்போது அது கிழக்கிலிருந்து மேற்காகச்‌ செல்வதாகத்‌ தோன்றுவதால்‌, நிச்சயம்‌ நமது பூமியானது மேற்கிலிருந்து கிழக்காகத்தானே சுற்ற வேண்டும்‌" என்று அனுமானித்தார்‌. 
  5. ஒரு பொருளானது ஒரு நிலையில்‌ இருந்து பார்ப்பவருக்கு ஓய்வுநிலையில்‌ இருப்பது போலவும்‌ மற்றொரு நிலையில்‌ இருந்து பார்ப்பவருக்கு இயக்கத்தில்‌ இருப்பது போலவும்‌ தோன்றும்‌. எனவே ஓய்வுநிலை அல்லது இயக்கநிலை என்பது அதனைக்‌ காண்பவரது நிலையைப்‌ பொறுத்து மாறக்கூடியதாகையால்‌ அதனைச்‌ சார்புடையவை என்கிறோம்‌.
  6. ஒரு பொருளின்மீது செயல்படுத்தப்படும்‌ தள்ளுதல்‌ அல்லது இழுத்தல்‌ நிகழ்வுகளின்‌ காரணமாக இயக்கமானது ஏற்படுகிறது.
  7. நாம்‌ கிணற்றிலிருந்து நீரினை வாளியைக்‌ கொண்டு இறைக்கிறோம்‌. விலங்குகள்‌ வண்டியை இழுத்துக்‌ கொண்டு செல்கின்றன. இங்கு இழுத்தல்‌ அல்லது தள்ளுதல்‌ என்ற நிகழ்வானது மனிதர்கள்‌ அல்லது விலங்குகள்‌ போன்ற உயிருள்ள பொருட்களினால்‌ ஏற்படுவதால்‌ இவை உயிருள்ள புறக்காரணிகள்‌ என அழைக்கப்படுகின்றன.
  8. பொருட்களின்‌ மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால்‌ செயல்படுத்தப்படும்‌ தள்ளுதல்‌ அல்லது இழுத்தலே விசை என அழைக்கப்படுகிறது.
  9. புல்‌வெளியில்‌ வளர்ந்துள்ள உயரமான புற்கள்‌ காற்றில்‌ ஆடுவதையும்‌ ஆற்றுநீரில்‌ மரத்துண்டானது அடித்துச்‌ செல்லப்படுவதையும்‌ பார்த்திருப்பீர்கள்‌. இங்கு தள்ளுதல்‌ அல்லது இழுத்தல்‌ என்ற நிகழ்வானது உயிரற்ற பொருட்களினால்‌ ஏற்படுவதால்‌ இவை உயிரற்ற புறக்காரணிகள்‌ என அழைக்கப்படுகின்றன.
  10. சில செயல்களில் விசையானது பொருளினைத்‌ தொடுவதன்‌ மூலம்‌ செயற்படுத்தப்படுகிறது. இத்தகைய விசையானது தொடுவிசை என அழைக்கப்படுகிறது.
  11. புவியீர்ப்பு விசையானது தேங்காயைக்‌ கீழ்‌ நோக்கி இழுப்பதன்‌ காரணமாகவே அது கீழ்நோக்கி விழுகிறது. இதேபோல்‌ காந்தத்தின்‌ அருகில்‌ இரும்பு துண்டினைக்‌ கொண்டுவரும்‌ போது காந்தமானது இரும்புத்‌ துண்டினை ஈர்க்கிறது. இதற்குக்‌ காரணம்‌ காந்த விசையாகும்‌.  மேற்கண்ட இருநிகழ்வுகளிலும்‌ விசையானது பொருளினைத்‌ தொடாமல்‌ செயற்படுத்தப்படுகிறது. இத்தகைய விசைகள்‌ தொடா விசைகள்‌ என அழைக்கப்படுகிறது.
  12. ஒரு பொருளின்‌ மீது செயற்படுத்தப்படும்‌ விசையானது பொருளின்‌ அளவினை மாற்றக்‌ கூடியதாக இருக்கிறது.
  13. ஒரு பொருளின்‌ இயக்க நிலையையோ அல்லது ஓய்வு நிலையையோ மாற்றவல்லதும்‌, பொருளின்‌ வேகத்தினை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ  செய்யவல்லதும்‌ இயக்கத்தினை நிறுத்தவும்‌ திசையை மாற்றவும்‌ மற்றும்‌ பொருளின்‌ வடிவத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்ய இயலும்‌ காரணி விசை என அழைக்கப்படுகிறது.      
  14.  பொருளின்‌ மீது செயல்படுத்தப்படும்‌ விசையானது,  பொருளை ஓய்வு நிலையிலிருந்து இயக்க நிலைக்கோ அல்லது இயக்க நிலையிலிருந்து ஓய்வு நிலைக்கோ மாற்றும்‌.  இயங்கும்‌ பொருளின்‌ வேகத்தினையோ அல்லது திசையையோ அல்லது இரண்டையுமோ மாற்றும்‌. பொருளின்‌ வடிவத்தில்‌ மாற்றத்தை ஏற்படுத்தும்‌.
  15. நேர்க்கோட்டு இயக்கம்‌ - பொருளானது நேர்க்கோட்டுப்‌ பாதையில்‌ இயங்கும்‌. (உ.ம்‌) நேர்க்கோட்டுப்பாதையில்‌ நடந்து சென்று கொண்டிருக்கும்‌ மனிதன்‌, தானாகக்‌ கீழே விழும்‌ பொருள்‌.
  16. வளைவுப்பாதை இயக்கம்‌ - பொருளானது முன்னோக்கிச்‌ சென்று கொண்டிருக்கும்‌ தனது பாதையில்‌ தனது திசையைத்‌ தொடர்ந்து மாற்றிக்‌ கொண்டே இருக்கும்‌. (உ.ம்‌) பந்தினை வீசுதல்‌.
  17. வட்டப்பாதை இயக்கம்‌ - ஒரு பொருள்‌ வட்டப்பாதையில்‌ இயங்கும்‌ (உ.ம்‌) கயிற்றின்‌ ஒரு முனையில்‌ கல்லினைக்‌ கட்டிச்‌ சுற்றுதல்‌.
  18. தற்சுழற்சி இயக்கம்‌ - ஒரு பொருள்‌ அதன்‌ அச்சினை மையமாகக்‌ கொண்டு இயங்குதல்‌ (உ.ம்‌) பம்பரத்தின்‌ இயக்கம்‌.
  19. அலைவு இயக்கம்‌ - ஒரு பொருள்‌ ஒரு புள்ளியை மையமாகக்‌ கொண்டு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில்‌ முன்னும்‌ பின்னுமாகவோ அல்லது இடம்‌ வலமாகவோ மாறி மாறி நகர்தல்‌ - (உ.ம்‌) தனிஊசல்‌.
  20. ஒழுங்கற்ற இயக்கம்‌ - ஒரு ஈயின்‌ இயக்கம்‌  அல்லது மக்கள்‌ நெருக்கம்‌ மிகுந்த தெருவில்‌ நடந்து செல்லும்‌ மனிதர்களின்‌ இயக்கம்‌.
  21. அலைவானது அதிவேகமாக நடைபெறும்‌ போது நாம்‌  அவ்வியக்கத்தினை அதிர்வுறுதல்‌ என அழைக்கிறோம்‌.
  22.  ஒரு குறிப்பிட்ட கால 'இடைவெளியில்‌ மீண்டும்‌ மீண்டும்‌ நடைபெறும்‌ இயக்கங்களை நாம்‌ கால ஒழுங்கு இயக்கம்‌  என்கிறோம்‌.
  23. காற்றில்‌ அசைந்தாடும்‌ கொடியினை எடுத்துக்‌ கொள்வோம்‌,  அவ்வியக்கம்‌ ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில்‌ சீராக நடைபெறாது. இவ்வகை இயக்கம்‌ கால ஒழுங்கற்ற இயக்கம்‌ எனப்படும்‌.
  24. புவியைச்‌ சுற்றிய நிலவின்‌ இயக்கம்‌ கால ஒழுங்கு இயக்கமாகும்‌. ஆனால்‌ அது அலைவு இயக்கம்‌ அல்ல. ஆனால்‌ ஊஞ்சலில்‌ ஆடிக்‌ கொண்டிருக்கும்‌ ஒரு குழந்தையின்‌ இயக்கம்‌ கால ஒழுங்கு மற்றும்‌ அலைவு இயக்கமாகும்‌.
  25. அலைவு இயக்கம்‌ அனைத்துமே கால ஒழுங்கு இயக்கமாக அமையும்‌. ஆனால்‌ அனைத்துக்‌ கால ஒழுங்கு இயக்கங்களும்‌ அலைவு இயக்கமாகக்‌ காணப்படாது.
  26. ஓரலகு காலத்தில்‌ ஒரு பொருள்‌ எவ்வளவு தூரம்‌ கடந்தது என்று கூறுவதே சராசரி வேகமாகும்‌. அதாவது ஒரு பொருளானது d தொலைவினை t கால இடைவெளியில்‌ கடந்தால்‌ அதன்‌
    சராசரி வேகம்‌ (s) = (கடந்த தொலைவு (d))/(எடுத்துக்கொண்ட காலம்‌ (t)) =d/t
  27. பொருள்‌ கடந்த தொலைவினை அதற்கு எடுத்துக்கொண்ட காலத்தால்‌ வகுக்க நமக்குக்‌ கிடைப்பது சராசரி வேகமாகும்‌.
  28. தொலைவின்‌ SI அலகு மீட்டர்‌ (m), காலத்தின்‌ அலகு வினாடி (s). எனவே மீட்டர்‌/வினாடி என்பது சராசரி வேகத்திற்கான SI அலகாகும்‌. அதாவது m/s.
  29. ஒரு பொருள்‌ பயணம்‌ செய்த வேகமும்‌ அப்பொருள்‌ அப்பயணத்திற்காக எடுத்துக்‌ கொண்ட காலமும்‌ நமக்குத்‌ தெரியுமானால்‌ நம்மால்‌ அப்பொருள்‌ கடந்த தொலைவினைக்‌ கணக்கிட இயலும்‌.
    சராசரி வேகம்‌ (s) =  (கடந்த தொலைவு (d) / (எடுத்துக்காண்ட காலம்‌ (t)
    எனவே கடந்த தொலைவு (d) = சராசரி வேகம்‌ (s) * காலம்‌ (t)
    d=s*t
  30. ஒரு பொருளின்‌ வேகமும்‌ அது கடந்த தொலைவும்‌ நாம்‌ அறிவோமானால்‌ அது பயணம்‌ செய்த நேரத்தினை நம்மால்‌ கணக்கிட இயலும்‌.
    காலம்‌ (t) = (கடந்த தொலைவு (d))/(சராசரி வேகம்‌(s)
    t=d/s
  31. உசைன்‌ போல்ட்‌ 100மீ தூரத்தினை 9.58 வினாடிகளில்‌ கடந்து உலகசாதனை படைத்தார்‌. 
  32. தரையில்‌ வாழும்‌ விலங்குகளில்‌ சிறுத்தையானது சராசரியாக 112 கிமீ/மணி  என்ற வேகத்தில்‌ ஓடும்‌ மிக வேகமான விலங்காகும்‌.
  33.  குறிப்பிட்ட கால இடைவெளியில்‌  சீரான வேகத்தில்‌ இயங்கும்‌ பொருளின்‌ இயக்கத்தினை நாம்‌ சீரான இயக்கம்‌ என்றும்‌, மாறுபட்ட வேகங்களில்‌ இயங்கும்‌ பொருளின்‌ இயக்கத்தினை நாம்‌ சீரற்ற இயக்கம்‌ என்றும்‌ கூறுகிறோம்‌.
  34. மிதிவண்டியின்‌ சக்கரமானது தன்‌ அச்சினைப்பற்றிச்‌ சுழல்வதால்‌ தற்சுழற்சி இயக்கத்தினையும்‌, மிதிவண்டியானது நேர்க்கோட்டு பாதையில்‌ முன்னேறிச்‌ செல்வதால்‌ நேர்க்கோட்டு இயக்கத்தினையும்‌ மேற்கொள்கிறது.
  35. ரோபாட்டுகள்‌ என்பது தானியங்கி இயந்திரமாகும்‌. சில ரோபாட்டுகள்‌ இயந்திர வேலைகளையும்‌, பணிகளையும்‌ மனிதனை விடச்‌ சிறப்பாகவும்‌ துல்லியமாகவும்‌ செய்ய வல்லவை. 
  36. ரோபாட்டுகள்‌ ஆபத்தான பொருட்களைக்‌ கையாளவும்‌, மிகத்தொலைவில்‌ உள்ள கோள்களின்‌ இயல்புகளைக்‌ கண்டறியவும்‌ பயன்படுகின்றன. 
  37. ரோபாட்டா என்ற செக்கோஸ்லோவியா வார்த்தையிலிருந்து ரோபாட்‌ என்ற வார்த்தையானது உருவாக்கப்பட்டது. இதன்‌ பொருள்‌ உத்திரவுக்கு படிந்த ஊழியர்‌ என்பதாகும்‌. 
  38. ரோபாட்டிக்ஸ்‌ என்பது ரோபாட்டுகளைப்‌ பற்றி அறியும்‌ அறிவியல்‌ பிரிவு ஆகும்‌.
  39. ரோபாட்டுகளால்‌ தங்கள்‌ சுற்றுப்புறத்தை உணரவும்‌ சூழலுக்கு ஏற்ப எதிர்வினை புரியவும்‌ இயலும்‌. அவற்றால்‌ மிக நுட்பமான பணிகளையும்‌ செய்ய இயலும்‌, மிக அதிக விசையைப்‌ பயன்படுத்தி ஆற்ற வேண்டிய பணிகளையும்‌ செய்ய இயலும்‌. உம்‌ ஒரு மருத்துவரின்‌ வழிகாட்டுதலின்படி அவற்றால்‌ கண்‌ அறுவைச்‌ சிகிச்சையை மேற்கொள்ள இயலும்‌, அதேபோல்‌ அதனால்‌ ஒரு மகிழுந்தினை வடிவமைக்கவும்‌ இயலும்‌. 
  40. செயற்கை நுண்ணறிவினைப்‌ பயன்படுத்தி ரோபாட்டுகள்‌ தாங்கள்‌ அடுத்து என்ன செய்ய வேண்டும்‌ என்ற முடிவினையும்‌ அவைகளே எடுக்க இயலும்‌.
  41. ரோபாட்டுகளின்‌ உணர்திறன்‌:
    • மின்னணு உணர்விகள்‌ ரோபாட்டுகளின்‌ கண்களாகவும்‌ காதுகளாகவும்‌ உள்ளன.
    • இரட்டைக்‌ கேமராவானது அதற்கு இந்த உலகம்‌ பற்றிய முப்பரிமாணப்‌ பிம்பத்தினை அளிக்கிறது.
    • மைக்ரோஃபோன்கள்‌ ஒலியை உணர உதவுகின்றன.
    • அதனுடன்‌ இணைக்கப்பட்ட கணிப்பொறி ரேடியோ அலைகள்‌ பரிமாற்றம்‌ மூலம்‌ செய்திகளை அனுப்பவும்‌ பெறவும்‌ உதவுகின்றது.
  42. ரோபாட்டுகளால்‌ சிந்திக்க இயலும்‌. அவைகள்‌ மிகுந்த சிக்கலான விளையாட்டுகளை விளையாடுகின்றன. செஸ்‌ விளையாட்டில்‌ மனிதனை விட இவை சிறப்பாக விளையாடுகின்றன. 
  43. செயற்கை நுண்ணறிவு என்பது மனித மூளை போன்று சிந்திக்கத்தக்க வகையில்‌ கணினி செயல்பாடுகளை உருவாக்குவதாகும்‌. இன்றைய நிலையில்‌ நாம்‌ அதனை அடையவில்லையெனினும்‌ சில கணினிகள்‌, கூட்டத்திற்கு இடையில்‌ முகங்களை அடையாளம்‌ கண்டு கொள்ளும்‌ வகையில்‌ அமைந்துள்ளன.
  44. நானோ ரோபாட்டுகள்‌ அல்லது நானோபோட்ஸ்‌ என்பவை மிகச்‌ சிறிய அளவுடையவை. அவை மிக நுண்ணிய இடங்களில்‌ தங்கள்‌ பணிகளைச்‌ செய்வதற்கு உருவாக்கப்பட்டவை ஆகும்‌. 
  45. வருங்காலங்களில்‌ நம்மால்‌ இரத்த ஓட்டத்தில்‌ நானோபோட்டுகளைச்‌ செலுத்துவதன்‌ மூலம்‌ நடைமுறையில்‌ சாத்தியமில்லாத நுண்ணிய கடினமான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள இயலும்‌.
  46. இயக்கம்‌ மற்றும்‌ ஓய்வு ஆகியவை ஒன்றுக்கொன்று சார்புள்ளவை.
  47. ஓய்வு நிலையில்‌ உள்ள அனைத்துப்‌ பொருட்களும்‌ வேறொரு நிலையில்‌ இருந்து பார்க்கும்‌ போது இயக்கநிலையிலும்‌ அதேபோல்‌ இயக்க நிலையில்‌ உள்ள பொருட்கள்‌ வேறொரு நிலையில்‌ இருந்து பார்க்கும்போது ஓய்வு நிலையிலும்‌ உள்ளன.
  48. தள்ளுதல்‌ அல்லது இழுத்தல்‌ என்பதன்‌ மூலம்‌ ஒரு பொருளின்‌ மீது விசையானது செயல்படுத்தப்படுகிறது. இவ்விசையானது உயிருள்ள மற்றும்‌ உயிரற்ற புறக்காரணிகளால்‌ செயல்படுத்தப்படலாம்‌.
  49. பொருளின்‌ மீது செயல்படுத்தப்படும்‌ விசையானது, பொருளை அமைதி நிலையிலிருந்து இயக்க நிலைக்கோ அல்லது இயக்க நிலையிலிருந்து அமைதி நிலைக்கோ மாற்றலாம்‌. இயங்கும்‌ பொருளின்‌ வேகத்தினையோ அல்லது திசையையோ அல்லது இரண்டையுமோ மாற்றலாம்‌. பொருளின்‌ வடிவத்தில்‌ மாற்றத்தை ஏற்படுத்தலாம்‌.
  50. சில விசைகள்‌ தொடு விசையாகவும்‌ சில விசைகள்‌ தொடா விசையாகவும்‌ செயல்படக்கூடியவை.
  51. சராசரி வேகம்‌ = கடந்த தொலைவு / எடுத்துக்கொண்ட காலம்‌ (s=d/t)
  52. வேகத்தின்‌ அலகு = மீ/விநாடி
  53. இயக்கத்தினை அதன்‌ பாதையைப்‌ பொறுத்தும்‌ கால ஒழுங்குமுறையைப்‌ பொறுத்தும்‌ சீர்‌ தன்மையைப்‌ பொறுத்தும்‌ சீரான இயக்கம்‌ மற்றும்‌ சீரற்ற இயக்கம்‌ என வகைப்படுத்தலாம்‌.

LINE BY LINE NOTES FOR ENGLISH MEDIUM STUDENTS

  1. When we open the door, kick a football, lift our school bag, all involve motion and there is some push or pull.
  2. When the book was at the same place with respect to the table, you say the book was at rest; but when it was pushed from one place on the table to another place, you say it was moving.
  3. When there is a change of position of an object with respect to time, then it is called motion, if it remains stationary it is called rest.
  4. Aryabatta, an ancient Indian astronomer, said that like the banks of the river appear to move back to a person in a boat floating gently in a river, the night sky studded with stars appear to move from east to west while Earth rotates from west to east. Learn more by asking others and reading up on your own.
  5. An object may appear to be stationary for one observer and appear to be moving for another. An object is at rest in relation to a certain set of objects and moving in relation to another set of objects. This implies that rest and motion are relative.
  6. Motion occurs when the object is pulled or pushed by an agency.
  7. we pulled out water from the well, with bucket or “the animal pulls a bullock cart”. It is a person or animal, that is an animate agency that does the pushing or pulling.
  8. Forces are push or pull by an animate or inanimate agency.
  9. we see a tall grass in the meadow dancing in the wind, a piece of wood is moving down a stream. Here the push or pull was due to the inanimate agency.
  10. If the force is executed by touching the body, that type of force is called Contact Force.
  11. Gravity pulls the ripen coconut from the tree to the ground. Observe that the magnet and the nail did not touch each other. Still, there was a pulling force that made the nail to jump towards the magnet. In these two examples, the force is applied without touching the object. Such forces are known as "non-contact forces"
  12. The shape of the object change on application of force.
  13.  The applied force is an interaction of one object on another that causes the second object to move from rest, or speed up, slow down, stop the motion, change the direction, compress or expand.
  14. Forces can Change the states of body from rest to motion or motion to rest. Either change the speed or direction or both of the body. Change the shape of the body.
  15. Linear- moving in a straight line, like a person walking on a straight path, free fall.
  16.  Curvilinear - moving ahead but changing direction, like a throwing ball. 
  17. Circular -moving in a circle, swirling stone tied to the rope. 
  18. Rotatory -The movement of a body about its own axis, like a rotating top. 
  19. Oscillatory -coming back to the same position after a fixed time interval, like a pendulum.
  20. Zigzag (irregular)- like the motion of a bee or people walking in a crowded street.
  21. Fast oscillations are referred to as vibrations.
  22. Motion repeated in equal intervals of time is called as periodic motion.
  23. Let us take the example of sabing swing in wind. This motion is not in uniform interval. Such Motions are called non-periodic motion.
  24. Revolution of the moon around the earth is periodic but not oscillatory. However, the children playing in a swing is both periodic and oscillatory.
  25. All oscillatory motions are periodic, but not all periodic are oscillatory.
  26. The distance travelled by an object in unit time is called average speed of the object. If an object travelled a distance (d) in time (t) then its Average speed (s) is = distance travelled / time taken = d/t.
  27. In other words, you divide the distance travelled by the time taken to get the speed.
  28. In SI units the unit of distance is metre and the unit of time is second. So, the SI unit of average speed is metre/second.
  29. If you know the speed and the time taken by the object travelled, then we can compute how much distance it had travelled.
    Speed = distance travelled / time taken (s = d/t) s = d/t or st = d therefore the distance travelled is speed × time.
  30. If we know the speed and distance travelled we can compute the time taken. s = d/t that is t = d/s time taken = distance travelled / speed
  31. Usain Bolt crossed 100metre in 9.58 seconds and made a world record.
  32. A Cheetah is the fastest land animal running with an average speed of 112 km/h
  33. If an object covers uniform distances in uniform intervals then the motion of the object is called Uniform Motion. Otherwise the Motion is called Non- Uniform Motion. 
  34.  What type of motion does the cycle in total Perform? The tyres rotate and make a rotatory motion, but the cycle as such moves forward in a linear path.
  35. Robots are automatic machines. Some robots can perform mechanical and repetitive jobs faster, more accurately than people. 
  36. Robots can also handle dangerous materials and explore distant planets. 
  37. The term comes from a czech word, ‘robota’ meaning ‘forced labour’. 
  38. Robotics is the science and study of robots.
  39. Robots can sense and respond to their surroundings. They can handle delicate objects or apply great force-for example, to perform eye operations guided by a human surgeon, or to assemble a car. 
  40. With artificial intelligence, robots will also be able to make decisions for themselves.
  41. Electronic sensors are a robot’s eyes and ears. Twin video cameras give the robot a 3-D view of the world. Microphones detect sounds. Pressure sensors give the robot a sense of touch, to judge how hard to grip an egg. Heavy luggage built-in computers send and receive information with radio waves.
  42. Robots can think. They can play complex games, such as chess, better than human beings.
  43. Artificial intelligence attempts to create computer programs that think like human brains. Current research has not achieved this, but some computers can be programmed to recognize faces in a crowd.
  44. Nano-robots or nanobots are robots scaled down to microscopic size in order to put them into very small spaces to perform a function.
  45.  Future nanobots could be placed in the blood stream to perform surgical procedures that are too delicate or too difficult for standard surgery.
  46. Motion and rest are relative. 
  47. All things that are at rest can be seen as in motion from a different point of view, and all motion can be seen as rest from a different perspective. 
  48. Application of forces is implemented by a push or pull. Forces can be applied by animate as well as inanimate agency. 
  49. Application of forces result in motion from rest, increase or decrease in speed, change in direction, and distortion of the shape.
  50. Some forces act only in contact; there are some which can even effect at a distance.
  51. Average speed = distance travelled / time taken (s= d/t) 
  52. The motion can be classified according to the path, periodic or non-periodic as well as if the speed is uniform or nonuniform.
  53. Unit of speed is m/s.

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்

 

1. All Test links of tpnkalvi website -http://tpnkalvi.in/online-test/free-tests/all-test-links-of-tpnkalvi-website/

2. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – சமூக அறிவியல்- இயல் 7 - http://tpnkalvi.in/general/6th-social-science-term-1-lesson-7/
3. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – சமூக அறிவியல்- இயல் 5 - http://tpnkalvi.in/general/6th-social-science-term-1-lesson-5/
4. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – சமூக அறிவியல்- இயல் 3 - http://tpnkalvi.in/general/6th-social-science-term-1-lesson-3/
5. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 5 - http://tpnkalvi.in/general/6th-science-term-1-lesson-5/
6. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 4 - http://tpnkalvi.in/general/6th-science-term-1-lesson-4/
7. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 3 - http://tpnkalvi.in/general/6th-science-term-1-lesson-3/
8. அக்டோபர் மாத இலவச தேர்வுகள் – Registration form - http://tpnkalvi.in/online-test/free-tests/october-month-free-test-registartion-form/
9. October month free test new group link - http://tpnkalvi.in/general/october-month-free-test-new-group-link/
10. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 1 - http://tpnkalvi.in/general/6th-science-lesson-1-term-1/
11. 50 Questions test series – Test 31 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-31/
12. 50 Questions test series – Test 30 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-30/
13. 50 Questions test series – Test 29 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-29/
14. 50 Questions test series – Test 28 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-28/
15. 50 Questions test series – Test 27 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-27/

 

பகிர்க - Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *