டெலிகிராம் குழு : https://t.me/THAMIZHPRIYANKALVI1
Thamizhpriyan kalvi
Whatsapp- 9551181009
7904512983
பாடத் தலைப்பு : உடல் நலமும், சுகாதாரமும் HEALTH AND HYGIENE
PDF டவுன்லோட் செய்ய : இந்த குறிப்புகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்துகொள்ள விரும்புபவர்கள், கீழே உள்ள தேர்வை ATTEND செய்யவும். தேர்வை முடிக்கும் பொழுது உங்களுடைய மதிப்பெண்ணுடன் PDF டவுன்லோட் செய்வதற்கான லிங்க்கும் காட்டப்படும். அதனைக் கிளிக் செய்து PDF டவுன்லோட் செய்து கொள்ளவும்.
இந்த இயலில் மொத்தம் 56 குறிப்புகளும் அவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட 50 கேள்விகளும் உள்ளன.
இந்தத் தேர்வு குறிப்புகள் குறித்த உங்களின் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்
தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 50
வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர் மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழே கிளிக் செய்யவும் Tamil Medium Notes – Click here English Medium Notes – Click here இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழே கிளிக் செய்யவும் Tamil Medium Notes – Click here English Medium Notes – Click here இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.
click to copy shortcode#1. கொடுக்கப்பட்ட உணவு பொருளில் ஸ்டார்ச் வடிவில் கார்போஹைட்ரேட் உள்ளதா என்பதை சோதிக்க எந்த வேதிப்பொருள் பயன்படுகிறது To test the presence of carbohydrate in the form of starch in given food item, which chemical is used
#2. பின்வருவனவற்றில் எந்த தாது உப்பு குறைபாடு இரத்தச் சோகை நோய்க்கு காரணம் Which Mineral deficiency causing Anaemia
#3. பின்வருவனவற்றுள் எதில் ஆரஞ்சு பழத்தை விட 20 மடங்கு அதிக விட்டமின் சி காணப்படுகிறது Which of the following fruit contains 20 times more vitamin C than orange
#4. அதிகமான புரதம் உள்ள உணவுப் பொருள் எது _________ is the highly rich source of protein
#5. உருளைக்கிழங்கில் அதிகம் உள்ள ஊட்டச்சத்து Potato contains__________ in huge quantity
Results
தேர்வு எழுதி முடிக்கும் பொழுது உங்களுடைய மதிப்பெண் மற்றும் PDF டவுன்லோட் செய்வதற்கான லிங்க் காட்டப்படும்
எங்கள் இணையதளத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்களுக்குமான ஒரு வரி குறிப்புகள் அனைத்தும் பாடவாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடத்திலிருந்தும் எடுக்கப்பட்ட குறிப்புகளை கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்வும் (TEST) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்புகள் அனைத்தையும் படித்துவிட்டு அந்த தேர்வை எழுதிப் பார்க்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
ஒருவரி வினாக்கள் அனைத்தும் பாடப்புத்தகத்தை வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்டதாகும்.
இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்து வினாக்களையும் நீங்கள் முறையாக பயிற்சி செய்தாலே தமிழகத்தில் நடைபெறும் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறலாம்.
இது போன்று அனைத்து பாடங்களுக்குமான, வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட வினாக்களை பெற கீழே உள்ள டெலிகிராம்/ வாட்சப் குரூப்பில் இணைந்து கொள்ளவும்.
Telegram : https://t.me/THAMIZHPRIYANKALVI1
Whatsapp : https://chat.whatsapp.com/CAJ20fhIAwEHEmeagezQBS
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/
வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட ஒரு வரி குறிப்புகள்
- நலம் என்பது முழுமையான மனம் மற்றும் உடல் நலத்தை குறிப்பதாகும்.
- உலக சுகாதார நிறுவனம் (WHO) "உடல் நலம் என்பது, ஒரு மனிதனின் முழுமையான உடல், மனம் மற்றும் சமூகம் சார்ந்த இடர்பாடுகள் இல்லாமல் இருக்கும் நிலையைக் குறிப்பதாகும். மேலும் உடற்குறைபாடு, நோயுற்று இருப்பதை மட்டும் குறிப்பது ஆகாது" என்று வரையறுத்துள்ளது.
- உடல்நலம் என்பது உடல் சுற்றுபுறத்தில் ஏற்படும் அழுத்தங்களுக்கும், மாற்றங்களுக்கும் ஏற்ற வகையில் தகவமைத்து கொள்வது மூலம், உடலினுள் சமநிலையைப் பேணுகின்ற சிறப்பான நிலையாகும், இந்நிலை ஹோமியோஸ்டாஸிஸ் எனப்படுகிறது.
- சுகாதாரம் என்பது தன்னையும், தன் சுற்று புறத்தையும் தூய்மையாகப் பராமரிப்பதன் வாயிலாக நோயிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கும், நோய் பரவாமல் இருப்பதற்கும் உதவுகிறது.
- உணவில் உள்ள வேதிப்பொருட்கள் நமக்கு ஆற்றல் அல்லது சக்தியைத் தருகிறது, உடல் வளர்ச்சி மற்றும் நோய்களில் இருந்து பாதுகாப்பதற்கும் உதவுகின்றன. இவைகளை நாம் சத்துப் பொருட்கள் என்கிறோம்.
- உணவில் உள்ள வேதிப் பொருட்களின் அடிப்படையில் சத்துப் பொருட்கள் ஆறு முக்கிய வகைகளாக பிரிக்கலாம், அவையாவன
- கார்போஹைட்டேட்டுகள்
- புரதங்கள்
- கொழுப்புகள்
- வைட்டமின்கள்
- தாது உப்புக்கள்,
- நீர்
- மாவுச் சத்து - கார்போஹைட்ரேட்டுக்கள் உணவு ஆற்றல் தரும் ஆக்கக்கூறு ஆகும்.
- கார்போஹைட்டேட்டுக்களின் வடிவம் - மூலப் பொருட்கள்
- சர்க்கரை - பழங்கள், தேன், கரும்புச் சர்க்கரை, பீட்ரூட்
- ஸ்டார்ச் - அரிசி, கோதுமை, சோளம், உருளைக்கிழங்கு
- நார்ச்சத்து - உணவு முழுதானியங்கள், கொட்டை உணவுகள்
- கொழுப்பு என்பதும் ஆற்றல் தரும் ஓர் உணவு ஆகும். இது கார்போஹைட்ரேட்டை விட அதிக ஆற்றலை தரக் கூடியது ஆகும்.
- கொழுப்புச் சத்து உள்ள சில உணவுப் பொருட்கள் வெண்ணெய், நெய், பால், பாலாடைக் கட்டி, பன்னீர், கொட்டைகள், மாமிசம், மீன், மற்றும் முட்டையின் மஞ்சள் ௧ரு. இவைகள் நமது உடலுக்கு ஆற்றல் தருவது மட்டுமல்லாது, நமது உடலைப் பாதுகாத்து நம் செல்களையும் பாதுகாக்கின்றன.
- அயோடின், ஸ்டார்ச்சுடன் வினைபுரிந்து ஸ்டார்ச் அயோடின் கூட்டுப் பொருளாக, அதாவது நீலம் கலந்த கருப்பு நிறமாக மாறுகிறது, இந்த கருநீல நிறம் உணவில் ஸ்டார்ச் உள்ளது என்பதை உறுதி செய்கிறது.
- அதிகமான புரதம் உள்ள உணவு சோயாபீன்ஸ் ஆகும்.
- தாமிர சல்பேட், சோடியம் ஹைட்ராக்ஸைடு , புரதத்துடன் வினைபுரிந்து கூட்டுப் பொருளாக, அதாவது ஊதா நிறமாக மாறுகிறது, இந்த ஊதா நிறம் உணவில் புரதம் உள்ளது என்பதை உறுதி செய்கிறது.
- உடல் வளர்ச்சி, செல் பழுதுபார்த்தல், மற்றும் செரிமானம் போன்ற பல்வேறு விதமான உடற்செயல்களுக்கும் புரதங்கள் மிகவும் அவசியம்.
- முட்டை, மீன், பால், கோழி , இறைச்சி, சோயாபீன்ஸ், கொட்டைகள், பருப்புக்கள் போன்றவைகளில் இருந்து நமக்கு புரதங்கள் கிடைக்கின்றன. உடல் வளர்ச்சிக்கான புரதங்கள் உணவுப் புரதங்கள் ஆகும்.
- உடலின் பல்வேறுபட்ட உயிர் வேதிவினைகள் நடப்பதற்கு வைட்டமின்கள் மிகவும் அவசியம். பழங்கள், காய்கறிகள், தானியங்கள், இறைச்சி சூரிய ஒளி போன்றவற்றில் வைட்டமின்கள் அதிகம் காணப்படுகின்றன.
- வைட்டமின்கள் பாதுகாக்கும் உணவு என்று அழைக்கப்படுகிறது.
- A,B,C,D,E மற்றும் K ஆகிய ஆறு முக்கிய வைட்டமின்கள் உள்ளன. வைட்டமின் B மற்றும் வைட்டமின் C நீரில் கரையும் வைட்டமின்கள் ஆகும். வைட்டமின் A,D,E மற்றும் K கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் ஆகும். உணவில் வைட்டமின் சத்துக்கள் குறைந்தால், உடலில் உடல் நல குறைபாடு மற்றும் நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
- முளைகட்டிய பாசிப்பயிரில் குறைந்த கலோரி உள்ளது. இதில் நார்ச்சத்தும், வைட்டமின் B யும் உள்ளன. முளை கட்டாத பயிரோடு ஒப்பிடும் போது முளை கட்டிய பாசிப்பயிரில் அதிக அளவு வைட்டமின் C மற்றும் வைட்டமின் K உள்ளன.
- சூரியத் திரை பூச்சு, (SUN SCREEN LOTION) தோலின், வைட்டமின் D உற்பத்தியை 95% குறைக்கிறது. எனவே வைட்டமின் D குறைபாட்டு நோய் ஏற்படுகிறது.
- நெல்லிக்கனிகளில், ஆரஞ்சு பழங்களைவிட 200 மடங்கு, அதிக "வைட்டமின் C” காணப்படுகிறது.
- தாது உப்புகள் உடல் வளர்ச்சிக்கும், பொதுவான உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தத் தேவைப்படுகின்றன. கீரை வகைகள், பருப்பு வகைகள், முட்டை, பால் மீன் மற்றும் பழங்கள் போன்றவை தாதுஉப்புக்கள் நிறைந்த முக்கிய உணவு பொருட்கள் ஆகும்.
- தாது உப்புகள் பாதுகாப்பு உணவுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
- முருங்கை இலையில் நிறைந்துள்ள சத்துக்கள் வைட்டமின் A , வைட்டமின் C, பொட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்து மற்றும் புரதம். இது (ANTIOXIDANTS) - ஆக்ஸிஜனேற்றத் தடுப்பானாகவும் உள்ளது.
- உலகளவில் 80% முருங்கை இலை உற்பத்தி இந்தியாவில் தான் உள்ளது.
- முருங்கை இலைகளை பெரும்பாலும் இறக்குமதி செய்யக் கூடிய நாடுகளாவன : சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, தென் கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆகும்.
- நாம் தினந்தோறும் குறைந்தது 2 லிட்டர்கள் நீரை குடிக்க வேண்டும்.
- உடல் நலம் என்பது முழுமையான உடல் நலம், மன நலம், ஆகியவற்றை உள்ளடக்கியது.
- உடல் நலம் என்பது நோய் இன்றி இருப்பது மட்டுமல்ல, சத்தான உணவை சாப்பிடுவதால் நாம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் குறைகளற்ற நிலையைப் பெறுகிறோம்.
- சத்துகுறைந்த உணவுவகைகள் உடல் பருமனையும், நோய்களையும் உண்டாக்கும்.
- அனைத்து சத்துக்களும் போதுமான அளவு கொண்ட ஓர் உணவு நாம் நலமாக வளர்வதற்கும் செயல்படுவதற்கும் அவசியம். சரிவிகித உணவு என்பது பல்வேறு சத்துக்கள் போதுமான அளவு இருப்பதை உறுதி செய்கிறது. அப்பொழுதுதான் நல்ல நலமான உடல் நிலை கிடைக்கும்.
- உணவு என்பது போதுமான அளவு நீரையும், சரியான அளவு ஆற்றலையும் தர வேண்டும். சரிவிகித உணவு அதிக வேலை செய்யும் திறன் பெறுவதற்கும், நல்ல உடல் மற்றும் மன நலத்திற்கும், நோய்களை எதிர்க்கும் அதிக திறன் பெறுவதற்கும், உடல் நன்றாக வளர்வதற்கும் உதவுகிறது.
- நாம் உண்ணும் உணவில் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் அனைத்தும் சரியான விகிதத்தில் கிடைக்கவில்லை என்றால் ஊட்டச் சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டினால் நோய்கள் உண்டாகின்றன.
- சமீபத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வின்படி 14.4 மில்லியன் குழந்தைகள் உடல் பருமனாக இருக்கின்றார்கள். இந்த வகையில் இந்தியா சீனாவிற்கு அடுத்ததாக, உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
- உடற்பயிற்சி என்பது உடல் தகுதி முழு நலம், உடல் நலம் ஆகியவற்றை பெறுவதற்கும் அல்லது அதிகப்படுத்துவதற்கும் செய்யப்படும் உடல் நீதியான பயிற்சியாகும். இது கீழே கொடுக்கப்பட்டது போன்ற பல்வேறு காரணங்களை உள்ளடக்கியது;
- வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை அதிகப்படுத்துதல்.
- வயது முதிர்ச்சியைத் தவிர்த்தல்.
- தசைகள் மற்றும் இதய இரத்த ஓட்ட மண்டலத்தை வலுப்படுத்துதல்.
- தடகள விளையாட்டு திறனை மேம்படுத்துதல், எடையைக் குறைத்தல்.
- உடற்பயிற்சியானது குழந்தைகள் மற்றும் முதியோர்களில் ஏற்படும் உடல் பருமன் விளைவுகளை குறைக்கும்.
- உணர்வுப் பூர்வமான உடல் நலத்திற்கும் சரியான அளவு ஓய்வு என்பது அவசியம். உடல் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும், ஊட்டச் சத்து எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு ஓய்வும் முக்கியம் ஆகும்.
- தூய்மை என்பது உடல் நலத்தை காப்பதற்காக செய்யப்படும் பழக்க வழக்கங்களின் தொகுப்பு ஆகும். உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) கூற்றுப்படி "தூய்மை என்பது நோய்கள் பரவாமல் தடுப்பதும், உடல் நலத்தை பராமரிக்கவும், செய்யப்படும் பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தலாகும்".
- தன் சுத்தம் என்பது சுத்தமாக இருப்பதன் மூலமாக ஒரு தனி மனிதன் தன் உடல் நலத்தை தூய்மையாக கவனித்துக் கொள்ளச் செய்யும் பழக்கங்கள் ஆகும். அது நாம் எத்தனை முறை குளிக்கிறோம், கைகளை கழுவுகிறோம், நகங்களை வெட்டுகிறோம், உடை மாற்றுகிறோம், என்பதை உள்ளடக்கிய தனி மனிதனின் பழக்கம் ஆகும்.
- தன் சுத்தத்தை அலட்சியம் செய்யும் போது நோய் வாய்ப்படும் ஆபத்து அதிகரிக்கிறது. தன் சுத்தத்தை அலட்சியப்படுத்தும் போது நுண்ணுயிரிகளால் ஏற்படும் சில நோய்களைக் காண்போம்.
- சீதபேதி
- பற்சொத்தை
- சேற்றுப்புண்
- பொடுகு
- பெரும்பாலான நுண்ணுயிரிகள் நான்கு முக்கிய பிரிவுகளாக உள்ளன
- பாக்டீரியா
- வைரஸ்
- புரோட்டோசோவா
- பூஞ்சைகள்
- பாக்டீரியா என்பவை மிகச் சிறிய புரோகேரியோட்டிக் நுண்ணுயிரிகள் ஆகும்.
- பாக்டீரியா செல்களில் உட்கரு கிடையாது. இவை பொதுவாக செல் சவ்வுகள் அற்ற நுண்ணுறுப்புக்களை கொண்டிருக்கும்.
- பாக்டீரியா ஒட்டுண்ணிகளாகவோ அல்லது தன்னிச்சையான நுண்ணுயிரிகளாகவோ காணப்படும்.
- பாக்டீரியாக்கள் திசுக்களை ஊடுருவிச் செல்லும் தன்மை கொண்டவை. அவை சீழ் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்களை உற்பத்தி செய்யும்.
- நுண்ணோக்கியின் உதவியினால் நுண்ணுயிரிகளின் அமைப்பை பற்றி தெரிந்துகொள்ளமுடியும்
- வாந்தியெடுத்தாலோ அல்லது வயிற்றுப் போக்கு ஏற்பட்டாலோ நம் உடலில் இருந்து அதிக நீர் வெளியேற்றப்பட்டு உப்பின் சமநிலை சீரற்றுப் போகும். அதிக நீர் வெளியேறுவது தீவிர உடல் பிரச்சினைகளை உருவாக்கும். அவற்றைத் தவிர்க்கும் பொருட்டு ORS கரைசலை உட்கொள்வதன் மூலம் பிரச்சினைகளில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளலாம்.
- வைரஸ் என்பது ஒரு செல்லற்ற உயிரி ஆகும். இவை மற்றொரு உயிரினங்களின் செல்களில் புகுந்து பெருக செய்கின்றன.
- நோய் என்பது உடலில் நோயூக்கிகளின் செயல்பாட்டால் ஏற்படும் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளின் வெளிப்பாட்டில் ஏற்படும் தொகுப்பு. முரண்பாடு அல்லது கோளாறு உடல் செயல்பாடுகளில் ஏற்படும் ஒழுங்கற்ற தன்மை.
- தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் போன்ற எல்லா உயிரினங்களையும் வைரஸ் பாதிக்கக் கூடியவை
- வைரஸ் செல்லுக்குள் நுழைந்து பெருக்கம் அடைகிறது. வைரஸ் செல்களை அழித்து, பாதிப்பு அடையச் செய்து அல்லது மாற்றம் அடையச் செய்து உங்களை நோய் வாய்ப்பட வைக்கும்.
- ஆறு வகையான பெரிய ஊட்டச்சத்துகள் உள்ளன அவை
- கார்போஹைட்ரேட்டுகள்
- புரதங்கள்
- கொழுப்புகள்
- வைட்டமின்கள்
- தாது உப்புகள்
- நீர்
- குவாஷியோர்கர், மராசுமஸ் - புரத சத்துக்கள் குறைபாடு உள்ள நோய்கள்
- மாலைக்கண் நோய், ஸ்கர்வி, ரிக்கட்ஸ், பெரி-பெரி ஆகியவை வைட்டமின் குறைபாட்டு நோய்கள்
- பாக்டீரியா ஒரு புரோகேரியாட்டிக் நுண்ணுயிரி
- காலரா, டைபாய்டு, நிமோனியா ஆகியவை பாக்டீரியா நோய்கள்
- இன்புளுயன்சா, சாதாரண சளி, சின்னம்மை, ஆகியவை வைரஸ் நோய்கள்
LINE BY LINE NOTES FOR ENGLISH MEDIUM STUDENTS
- The word "health" refers to a state of complete emotional and physical well-being.
- As defined by World Health Organization (WHO), it is a "State of complete physical, mental, and social well being, and not merely the absence of disease or infirmity."
- Health is a dynamic condition resulting from a body's constant adjustment and adaptation in response to stresses and changes in the environment for maintaining an inner equilibrium called homeostasis.
- Hygiene is a science of the establishment and maintenance of health conditions or practices (as of cleanliness) conducive to health has poor personal hygiene.
- The Chemical constituents of food which give us energy, help to build our body and protect us from diseases are called Nutrients.
- Types of Nutrients
- Carbohydrate
- Proteins
- Fats
- Vitamins
- Minerals
- Water.
- Carbohydrates are an energy giving component of the food.
- Form of Carbohydrates - Sources
Sugar - Fruits, Honey, Cane Sugar, Sugar Beet
Starch - Rice, Wheat, Maize, Potato, etc.
Dietary fibre - Whole grain, nuts,etc. - Fat is also an energy-giving food and provides more energy than Carbohydrates.
- Some important sources of fats are butter, ghee, milk, cheese, paneer, nuts, meat, fish, egg yolk etc. Apart from giving energy, they insulate our body and protect the cells.
- Iodine reacts with Starch to form Starch-Iodine complex which is blueblack in colour. Thus, the appearance of blue-black colour confirms the presence of Starch in the food item
- Soyabean is the highly rich source of protein.
- Copper sulphate solution and Sodium hydroxide react with protein to form a complex which is blueblack in colour. Thus, the appearance of purple or violet colour confirms the presence of protein in the food item
- Proteins are necessary for our growth and repair, as well as for regulating various body functions such as digestion.
- The sources of proteins are pulses, eggs, fish, milk, chicken, soya bean, nut, grams etc, Proteins are body building foods.
- Vitamins are required for carrying out various biochemical reactions in our body. Fruits, vegetables, grains, meat products are good sources of vitamins.
- Vitamins are called as protective food.
- There are six major vitamins A, B, C, D, E and K. Vitamins B and Vitamins C are water soluble, Vitamins A, D, E and K are fat soluble.
- green gram sprouts are low in calories, have fibre and Vitamin B. It has comparatively high amount of vitamin C and vitamin K.
- Sun screen lotion reduces your skin's ability to produce Vitamin D by up to 95% which may lead to Vitamin D deficiency.
- Gooseberries contains nearly 20 times the vitamin C than Orange.
- Minerals are required for growth as well as for the regulation of normal body function.Green leafy vegetables like spinach, pulses, eggs, milk, fish and fruits are important sources of minerals in our diet.
- Minerals are also a protective foods.
- Moringa leaves are rich in Vitamin A, Vitamin C, Potassium, Calcium, Iron and Protein. It also contains Powerful antioxidants
- 80% of the world production of Moringa Leaves is in India.
- The Major countries which import Moringa Leaves are China, US, Germany, Canada, South Korea and European countries.
- Our body needs an adequate supply of water in order to maintain good health. Any human being should take a minimum eight tumblers ( 2 Litres) of water every day.
- Health is a state of complete physical, mental and social well-being and not merely absence of diseases.
- Eating a healthy diet keeps you physically and mentally fit.
- Unhealthy food choices lead to obesity and illness, preventing you from socializing with friends and family.
- A diet should contain an adequate amount of all the necessary nutrients required for healthy growth and activity.
- A balanced diet contains a sufficient amount of various nutrients to ensure good health. Food should also provide the appropriate amount of energy and adequate amount of water.
- Malnutrition occurs when all the nutrients that the body needs are not obtained in the proper proportions from the diet. The word malnutrition refers to the condition that results when a person does not take a balanced diet. Malnutrition leads to deficiency disease. The diseases that are caused due to lack of Nutrients in the diet are called Deficiency Diseases.
- India has the second highest number of obese children in the world after China, according to a study that has found that 14.4 million children in the country have excess weight.
- Physical exercise is any bodily activity that enhances or maintains physical fitness and overall health and wellness. It is performed for various reasons, including
increase in growth and development,
strengthening muscles and the cardiovascular system,
developing athletic skills, weight loss or maintenance, and enjoyment.
Physical exercise may help to decrease some of the effects of childhood and adult obesity. - Proper amount of rest is essential for physical and mental health. Rest is as important as nutrition and physical activity for growth and development and good health.
- Hygiene is a set of practices performed to preserve health. According to the World Health Organization (WHO), “Hygiene refers to conditions and practices that help to maintain health and prevent the spread of diseases.”
- Personal hygiene involves those practices performed by an individual to care for one’s bodily health and well being, through cleanliness. It includes such personal habit choices as how frequently to bathe, wash hands, trim fingernails, and change clothing.
- When you neglect personal hygiene, you are increasing the risk of falling sick. Let us name some of the diseases or conditions caused by microorganism due to the negligence of personal hygiene.
Diarrhoea
Tooth decay
Athlete’s foot( Madurai’s foot)
Dandruff. - Most of the microbes belong to four major groups:
Bacteria
Virus
Protozoa
fungi - Bacteria are very small prokaryotic microorganisms.
- Bacterial cells do not have nucleus and do not usually have membrane bound organelles.
- Bacteria can exist either as independent organisms or as parasites
- They invade tissues. They produce pus or harmful wastes
- Microscopes help to study the structure of the microorganisms.
- Vomiting or loose motions result in loss of water and cause salt imbalance in the body. Loss of water (dehydration) can lead to serious problems. This can be prevented by consuming ORS at short intervals.
- Virus is an acellular agent that replicates only inside the cells of other living organisms.
- Disease is a definite pathological process having a characteristic set of signs and symptoms. Disorder is a derangement or abnormality of function.
- Virus can infect all types of life forms plant, animals and microorganisms.
- Virus invade living normal cells and use their cell machinery to multiply. Virus can kill damage or change the cells and make you sick.
- There are six major nutrients
Carbohydrate
Fats
Protein
Vitamins
Minerals
Water - Kwashiorkor and Marasmus are protein deficiency diseases.
- Night blindness, scurvy, Rickets and Beriberi are vitamin deficiency diseases.
- Bacteria is a Prokaryotic microorganism.
- Cholera, Typhoid and Pneumonia are bacterial diseases
- Influenza, common cold and chickenpox are viral diseases.
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்
1. All Test links of tpnkalvi website -http://tpnkalvi.in/online-test/free-tests/all-test-links-of-tpnkalvi-website/
2. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – சமூக அறிவியல்- இயல் 7 - http://tpnkalvi.in/general/6th-social-science-term-1-lesson-7/
3. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – சமூக அறிவியல்- இயல் 5 - http://tpnkalvi.in/general/6th-social-science-term-1-lesson-5/
4. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – சமூக அறிவியல்- இயல் 3 - http://tpnkalvi.in/general/6th-social-science-term-1-lesson-3/
5. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 5 - http://tpnkalvi.in/general/6th-science-term-1-lesson-5/
6. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 4 - http://tpnkalvi.in/general/6th-science-term-1-lesson-4/
7. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 3 - http://tpnkalvi.in/general/6th-science-term-1-lesson-3/
8. அக்டோபர் மாத இலவச தேர்வுகள் – Registration form - http://tpnkalvi.in/online-test/free-tests/october-month-free-test-registartion-form/
9. October month free test new group link - http://tpnkalvi.in/general/october-month-free-test-new-group-link/
10. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 1 - http://tpnkalvi.in/general/6th-science-lesson-1-term-1/
11. 50 Questions test series – Test 31 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-31/
12. 50 Questions test series – Test 30 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-30/
13. 50 Questions test series – Test 29 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-29/
14. 50 Questions test series – Test 28 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-28/
15. 50 Questions test series – Test 27 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-27/