பாடத் தலைப்பு : பேரண்டம் மற்றும் சூரியக் குடும்பம் The Universe and Solar System
PDF டவுன்லோட் செய்ய : இந்த குறிப்புகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்துகொள்ள விரும்புபவர்கள், கீழே உள்ள தேர்வை ATTEND செய்யவும். தேர்வை முடிக்கும் பொழுது உங்களுடைய மதிப்பெண்ணுடன் PDF டவுன்லோட் செய்வதற்கான லிங்க்கும் காட்டப்படும். அதனைக் கிளிக் செய்து PDF டவுன்லோட் செய்து கொள்ளவும்.
இந்த இயலில் மொத்தம் 140 குறிப்புகளும் அவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட 50 கேள்விகளும் உள்ளன.
இந்தத் தேர்வு குறிப்புகள் குறித்த உங்களின் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்
இதற்கு முந்தைய தேர்வினை எழுத கீழே கிளிக் செய்யவும்
தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 50
வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர் மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழே கிளிக் செய்யவும் Tamil Medium Notes – Click here English Medium Notes – Click here இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழே கிளிக் செய்யவும் Tamil Medium Notes – Click here English Medium Notes – Click here இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.
click to copy shortcode#1. ஒளியின் திசை வேகம் எவ்வளவு? Velocity of light is
#2. சூரிய குடும்பத்தின் மொத்த நிறையில் சூரியனின் சதவீதம் எவ்வளவு? Percentage of the Sun in the total mass of the solar system?
#3. மிகவும் சிறிய கோள் எது? Very small planet
#4. வெள்ளி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்கிறது? Rotation period of Venus
#5. ஒலியின் திசை வேகம் எவ்வளவு? Velocity of sound is
Results
தேர்வு எழுதி முடிக்கும் பொழுது உங்களுடைய மதிப்பெண் மற்றும் PDF டவுன்லோட் செய்வதற்கான லிங்க் காட்டப்படும்
அடுத்து தேர்விற்கான பாட குறிப்புகளை காண கீழே கிளிக் செய்யவும்
எங்கள் இணையதளத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்களுக்குமான ஒரு வரி குறிப்புகள் அனைத்தும் பாடவாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடத்திலிருந்தும் எடுக்கப்பட்ட குறிப்புகளை கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்வும் (TEST) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்புகள் அனைத்தையும் படித்துவிட்டு அந்த தேர்வை எழுதிப் பார்க்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
ஒருவரி வினாக்கள் அனைத்தும் பாடப்புத்தகத்தை வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்டதாகும்.
இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்து வினாக்களையும் நீங்கள் முறையாக பயிற்சி செய்தாலே தமிழகத்தில் நடைபெறும் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறலாம்.
இது போன்று அனைத்து பாடங்களுக்குமான, வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட வினாக்களை பெற கீழே உள்ள டெலிகிராம்/ வாட்சப் குரூப்பில் இணைந்து கொள்ளவும்.
Telegram : https://t.me/THAMIZHPRIYANKALVI1
Whatsapp : https://chat.whatsapp.com/CAJ20fhIAwEHEmeagezQBS
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/
வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட ஒரு வரி குறிப்புகள்
- 'பெருவெடிப்பு' (BigBang) என்ற ஒரு நிகழ்வு ஏற்பட்டதின் காரணமாய் எண்ணிலடங்கா விண்மீன்களும், வான்பொருட்களும் தோன்றின. இவை அனைத்தையும் பொதுவாக 'பேரண்டம்'(Universe) என்று அழைத்தனர். இதனை அண்டம் (Cosmos) என்றும் குறிப்பிடுகின்றனர்.
- அண்டத்தை பற்றிய படிப்பிற்கு 'அண்டவியல்' (Cosmology) என்று பெயர்.
- காஸ்மாஸ் என்பது ஒரு கிரேக்கச் சொல்லாகும்
- பேரண்டம் என்பது மிகப்பரந்த விண்வெளி ஆகும். சுமார் 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எற்பட்ட பெரு வெடிப்பின் போது பேரண்டம் உருவானதாக பல வானியல் அறிஞர்கள் நம்புகின்றனர்.
- இப்பேரண்டமானது கோடிக்கணக்கான விண்மீன் திரள் மண்டலங்கள், விண்மீன்கள், கோள்கள், வால் நட்சத்திரங்கள், சிறுகோள்கள், விண்கற்கள் மற்றும் துணைக் கோள்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
- விண்மீன் திரள் மண்டலம் என்பது ஈர்ப்பு விசையால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு இருக்கும் நட்சத்திரங்களின் தொகுப்பாகும்.
- வான்வெளியில் விண்மீன் திரள் மண்டலங்கள் சிதறியும், குழுவாகவும் காணப்படுகின்றன.
- பெருவெடிப்பு நிகழ்வுக்குப் பிறகு சுமார் 5 பில்லியன் வருடங்களுக்குப் பின் 'பால்வெளி விண்மீன் திரள் மண்டலம் '(Milky way Galaxy) உருவானது.
- நமது சூரியக் குடும்பம் பால்வெளி விண்மீன் திரள் மண்டலத்தில் காணப்படுகிறது.
- ஆண்ட்ரோமெடா (Andromeda) விண்மீன் திரள் மண்டலம் மற்றும் மெகல்லனிக் க்ளவுட்ஸ்(Megellanic clouds) விண்மீன் திரள் மண்டலம் ஆகியன புவிக்கு அருகில் காணப்படும் விண்மீன் திரள் மண்டலங்கள் ஆகும்.
- ஓர் ஒளியாண்டு என்பது ஒளி ஒர் ஆண்டில் பயணிக்கக்கூடிய தொலைவு ஆகும். ஒளியின் திசைவேகம் வினாடிக்கு 3,00,000 கி.மீ ஆகும். ஆனால், ஒலியானது வினாடிக்கு 830 மீட்டர் என்ற வேகத்தில் பயணிக்கும்.
- சோலார் என்ற பதமானது 'சூரியக் கடவுள்' எனப் பொருள்படும் Sol என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
- சூரியக் குடும்பம் சுமார் 4.5 பில்லியன் வருடங்களுக்குமுன்பு உருவானதாக நம்பப்படுகிறது.
- சூரியன், எட்டு கோள்கள், குறுளைக் கோள்கள், துணைக் கோள்கள், வால் நட்சத்திரங்கள், சிறு கோள்கள் மற்றும் விண்கற்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது சூரியக்குடும்பம் ஆகும். இஃது ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டுள்ள ஓர் அமைப்பாகும்.
- சூரியக் குடும்பத்தின் மையத்தில் சூரியன் அமைந்துள்ளது.
- சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்து வான்பொருட்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன.
- சூரியன் சூரியக் குடும்பத்தின் மொத்த நிறையில் 99.8 சதவிகிதம் உள்ளது.
- சூரியன் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற வெப்பமான வாயுக்களால் ஆனது.
- சூரியன் சூரியன் தானே ஒளியை உமிழக்கூடிய தன்மை பெற்றது.
- சூரியன் ஒரு விண்மீன் ஆகும்.
- சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 6000° C ஆகும்.
- சூரியக் குடும்பத்தின் அனைத்து கோள்களுக்கும் வெப்பத்தையும், ஒளியையும் சூரியன் அளிக்கிறது.
- சூரியனின் ஒளி புவியின் மேற்பரப்பை வந்தடைய சுமார் 8.3 நிமிடங்கள் ஆகின்றது.
- சூரியன் 1.3 மில்லியன் புவிகளை தனக்குள்ளே அடக்கக்கூடிய வகையில் மிகப்பெரியதாகும்.
- 'கோள்' என்றால் 'சுற்றிவருபவர்' என்று பொருள்.
- சூரியக் குடும்பத்தில் எட்டுகோள்கள் உள்ளன. அவை புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகும்.
- வெள்ளி மற்றும் யுரேனஸ் கோள்களைத் தவிர பிற கோள்கள் அனைத்தும் சூரியனை எதிர் கடிகாரச்சுற்றில், அதாவது மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றி வருகின்றன. இவ்வாறு கோள்கள் சூரியனைச் சுற்றி வரக்கூடிய பாதை சுற்றுப்பாதை எனப்படுகிறது.
- கோள்கள் அனைத்தும் தத்தமது பாதையை விட்டு விலகாமல் சூரியனைச் சுற்றி வருவதற்குச் சூரியன் ஈர்ப்பு விசையே காரணமாகும்.
- சூரியனுக்கு அருகில் உள்ள நான்கு கோள்களான புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் "உட்புறக் கோள்கள்' அல்லது 'புவிநிகர் கோள்கள்' என்று அழைக்கப்படுகின்றன. பாறைகளால் ஆன இக்கோள்கள் அளவில் சிறியன. இக்கோள்களின் மேற்பரப்பில் மலைகள், எரிமலைகள் மற்றும் தரைக்குழிவுப் பள்ளங்கள் (Craters) காணப்படுகின்றன.
- சூரியக்குடும்பத்தில்உள்ள கடைசிநான்கு கோள்களான வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியன 'வெளிப் புறக்கோள்கள்" அல்லது 'வியாழன் நிகர் கோள்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இக்கோள்கள் வாயுக்களால் நிரம்பிக் காணப்படுவதால் 'வளிமக் கோள்கள்' (Gaseous Planets) எனவும் அழைக்கப்படுகின்றன.
- செவ்வாய், வியாழன் கோள்களுக்கிடையே 'சிறு கோள் மண்டலம்' காணப்படுகிறது.
- 'வாள் நிற விசும்பின் கோள் மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு' என்று பாடல் சிறுபாணாற்றுப்படையில் காணப்படுகிறது.
- சூரியனுக்கு அருகில் இருக்கும் புதன் அளவில் மற்ற கோள்களைவிட மிகவும் சிறியது. இக்கோளானது ரோமானியக் கடவுள்களின் தூதுவரான 'மெர்குரி' யின் பெயரால் அழைக்கப்படுகிறது. இக்கோளில் நீரோ, வாயுக்களோ கிடையாது. இக்கோளில் வளிமண்டலம் இல்லாததால் பகல் பொழுதில் அதிக வெப்பநிலையும், இரவு நேரத்தில் கடுங்குளிரும் காணப்படும். மேலும் புதன் கோளுக்குத் துணைக்கோள்கள் எதுவுமில்லை.
- கோள்களின் வரிசையை நினைவிற் கொள்ள: புது வெள்ளம் புவியில் செலுத்தினால் விவாகம், சண்டை, யுத்தம் நெருங்காது.
- அதிகாலைப் பொழுதிலும், அந்திப் பொழுதிலும் புதன் கோளை நாம் வெற்றுக் கண்களால் காணமுடியும்.
- வெள்ளி சூரியனிடமிருந்து இரண்டாவதாக அமைந்துள்ளது.
- புவியைப் போன்றே ஒத்த அளவுள்ளதால் வெள்ளியும் புவியும் 'இரட்டைக் கோள்கள்' என அழைக்கப்படுகின்றன.
- வெள்ளியின் சுழலுதல் காலம் மற்ற கோள்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. வெள்ளி தன்னைத் தானே சுற்றிக்கொள்ள 243 நாள்கள் எடுத்துக் கொள்கிறது.
- யுரேனஸைப் போன்றே வெள்ளிக்கோளும் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகிறது (கடிகாரச் சுற்று).
- வெள்ளி மற்ற கோள்களைக் காட்டிலும் மிகவும் மெதுவாகச் சுற்றுகிறது.
- புதன் கோளைப் போன்றே வெள்ளிக்கும் துணைக்கோள்கள் இல்லை.
- அன்பு மற்றும் அழகைக் குறிக்கும் ரோமானிய கடவுளான 'வீனஸ்' என்ற பெயரால் இக்கோள் அழைக்கப்படுகிறது.
- காலையிலும், மாலையிலும் விண்ணில் காணப்படுவதால் இக்கோளை 'விடிவெள்ளி' மற்றும்'அந்திவெள்ளி' என்று அழைக்கின்றோம்.
- நிலவிற்கு அடுத்தப்படியாக இரவில் பிரகாசமாகத் தெரியும் விண்பொருள் வெள்ளியாகும்.
- சூரியனிடமிருந்து மூன்றாவதாக அமைந்துள்ள புவி ஐந்தாவது பெரிய கோளாகும்.
- புவியின் மேற்பரப்பானது நான்கில் மூன்று பகுதி நீரால் சூழப்பட்டுள்ளதால் 'நீலக்கோள்' என்றும் 'நீர்க்கோள்' என்றும் அழைக்கப்படுகிறது.
- ரோமானிய மற்றும் கிரேக்கக் கடவுள்களின் பெயரால் அழைக்கப்படாத ஒரே கோள் புவியாகும்.
- புவியின் துருவ விட்டம் 12,714 கிலோமீட்டர் மற்றும் நிலநடுக்கோட்டூ விட்டம் 12,756 கிலோமீட்டர் ஆகும்.
- புவி சூரியனை வினாடிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றிவருகிறது. இக்கோளில் நிலம், நீர் மற்றும் வளிமண்டலம் காணப்படுவதால் உயிரினங்கள் வாழத் தகுதியான சூழல் நிலவுகிறது. புவியின் ஒரே துணைக்கோள் நிலவாகும்.
- சூரியனுக்கும் புவிக்கும் இடையே உள்ள தொலைவு 150 மில்லியன் கிலோ மீட்டராகும். மணிக்கு 800 கி.மீ. வேகத்தில் செல்லும் வானூர்தி சூரியனை சென்றடைய 21 வருடங்கள் ஆகும்.
- சூரியனிடமிருந்து நான்காவதாகக் காணப்படும் செவ்வாய் கோளானது அளவில் புதனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது சிறிய கோளாகும்.
- செவ்வாய் கோள் ரோமானியப் போர்க்கடவுள் 'மார்ஸ்' (Mars) பெயரால் அழைக்கப்படுகிறது. இதன் மேற்பரப்பில் இரும்பு ஆக்ஸைடு உள்ளதால் செந்நிறமாகத் தோற்றமளிக்கிறது.
- செவ்வாய் 'சிவந்த கோள்' என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோளின் வளிமண்டலம் மிகவும் மெல்லியதாகும். இதன் துருவப் பகுதிகளில் புவியைப் போன்றே பனியுறைகள் (Ice caps) காணப்படுகின்றன. இக்கோளானது ஃபோபஸ் (phobos) மற்றும் டீமஸ் (Deimos) என்ற இரு துணைக்கோள்களைக் கொண்டுள்ளது.
- செவ்வாய்க் கோளை ஆராய்வதற்காக, சுற்றிவரும் கலங்களும் (Orbiters), தரை ஊர்திகளும் (Rovers) அனுப்பப்பட்டுள்ளன.
- சூரியக் குடும்பத்தின் மிகப் பெரியக் கோளான வியாழன் சூரியனிடமிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ளது.
- வியாழன் ரோமானியர்களின் முதன்மைக் கடவுள் (Jupiter) பெயரால் அழைக்கப்படுகிறது.
- நிலா மற்றும் வெள்ளி கோளுக்கு அடுத்ததாக பிரகாசமாக விண்ணில் தெரிவது வியாழன் ஆகும். இக்கோள் தன் அச்சில் மிகவும் வேகமாகச் சுழலக்கூடியதாகும். சூரியனைப் போன்றே 'இதன் வளிமண்டலத்திலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் காணப்படுகின்றன.
- மிக அதிகமான துணைக்கோள்களை வியாழன் கொண்டுள்ளது. அவற்றுள் அயோ (IO), யூரோப்பா (Europa), கனிமீடு (Ganymede) மற்றும் கேலிஸ்டோ (Callisto) ஆகியன சில மிகப்பெரிய துணைக்கோள்களாகும்.
- சூரியக் குடும்பத்தின் இரண்டாவது பெரிய கோளான சனி சூரியனிடமிருந்து ஆறாவதாக அமைந்துள்ளது.
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) செவ்வாய்க் கோளின் வளிமண்டலம் மற்றும் தரைப்பகுதியை ஆராய்வதற்காக 24.09.2014. அன்று மங்கள்யான் (Mars Orbiter Mission) எனப்படும் விண்கலத்தை அனுப்பியது. இதனால் இந்தியா செவ்வாய்க் கோளினை ஆராயும் நாடுகளின் பட்டியலில் ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், நாஸா (NASA), ஐரோப்பிய விண்வளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அடுத்ததாக நான்காம் இடத்தில் உள்ளது.
- சனிக்கோளை ஒரு பெரிய நீர்நிலையில் இட்டால் அது மிதக்கும்.
- ரோமானிய வேளாண்மை கடவுளின் பெயரால் (Saturn) இது அழைக்கப்படுகிறது. பாறைத்துகள்கள், பனித்துகள்கள் மற்றும் தூசுக்களால் ஆன பல பெரிய வளையங்கள் சனிக்கோளைச் சுற்றிக் காணப்படுகின்றன.
- சனி 62 துணைக் கோள்களைக் கொண்டுள்ளது. வியாழன் கோளைப் போன்றே அதிக துணைக்கோள்களைக் கொண்ட இக்கோளின் மிகப்பெரிய துணைக்கோள் 'டைட்டன்' (Titan) ஆகும்.
- சூரியக் குடும்பத்தில் காணப்படும் துணைக்கோள்களில் நைட்ரஜன் மற்றும் மீத்தேன் ஆகிய வாயுக்களைக் கொண்ட வளிமண்டலம் மற்றும் மேகங்கள் சூழ்ந்து காணப்படுகின்ற ஒரே துணைக்கோள் டைட்டன் ஆகும்.
- சனிக் கோளின் தன் ஈர்ப்புத் திறன் (Specific Gravity) நீரை விடக் குறைவாகும்.
- யுரேனஸ் - உருளும் கோள்
- வில்லியம் ஹெர்ஷல் என்ற வானியல் அறிஞரால் 1781 ஆம் ஆண்டு யுரேனஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தொலை நோக்கியால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோள் இதுவாகும். இது சூரியனிடமிருந்து ஏழாவதாக அமைந்துள்ளது.
- மீத்தேன் வாயு இக்கோளில் உள்ளதால் யுரேனஸ் பச்சை நிறமாகத் தோன்றுகிறது. இது கிரேக்க விண் கடவுளான 'யுரேனஸ்' பெயரால் அழைக்கப்படுகிறது. வெள்ளிக் கோளைப் போன்றே இக்கோளும் தன் அச்சில் கடிகாரச் சுற்றில் சுற்றுகிறது. இதன் அச்சு மிகவும் சாய்ந்து காணப்படுவதால் தன் சுற்றுப்பாதையில் உருண்டோடுவது போன்று சூரியனைச் சுற்றி வருகிறது.
- யுரேனஸின் 27 துணைக்கோள்களில் 'டைட்டானியா' (Titania) மிகப் பெரியதாகும்.
- நெப்டியூன் - குளிர்ந்த கோள்
- சூரியக் குடும்பத்தில் எட்டாவது மற்றும் மிகத் தொலைவில் அமைந்துள்ள கோள் இதுவாகும்.
- ரோமானியக் கடல் கடவுளின் பெயரைக் கொண்ட நெப்டியூன் கோளில் பலத்த காற்று வீசும்.
- 14 துணைக்கோள்களைக் கொண்ட நெப்டியூனின் மிகப் பெரிய துணைக்கோள் 'டிரைட்டன்' (Triton) ஆகும்.
- நெப்டியூன் சூரியக் குடும்பத்தில் மிகத் தொலைவில் உள்ளதால் மிகவும் குளிர்ந்து காணப்படுகிறது.
- நெப்டியூன் கோளில் காணப்படும் நீலம் மற்றும் வெள்ளை நிறமானது யுரேனஸ் கோளிலிருந்து இதை வேறுபடுத்திக் காட்டுகிறது.
- நெப்டியூன் கோளுக்கு அப்பால் தொலைவில் காணப்படும் சிறிய விண்பொருட்கள் குறுங்கோள்கள் ஆகும். அவை மிகவும் குளிர்ந்தும் ஒளியில்லாமலும் காணப்படுகின்றன. கோள வடிவில் காணப்படும் இவை கோள்களைப் போல இல்லாமல் தமது சுற்றுப்பாதையைப் பிற குறுங்கோள்களுடன் பகிர்ந்துகொள்ளும்.
- புளுட்டோ, செரஸ், ஈரிஸ், மேக்மேக் மற்றும் ஹெளமியா போன்றவை சூரியக் குடும்பத்தில் காணப்படும் ஐந்து குறுங்கோள்களாகும்.
- நிலவு - புவியின் துணைக்கோள்
- கோள்களைச் சுற்றிவரும் விண்பொருட்கள் துணைக்கோள்களாகும்.
- புவியின் ஒரே துணைக்கோள் நிலவாகும். நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரமும், புவியைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரமும் ஏறக்குறைய ஒன்றாகும். அதாவது 27 நாள்கள் 8 மணி நேரமாகும்.
- நிலவிற்கு வளிமண்டலம் கிடையாது. இதன் காரணமாக விண்கற்களின் தாக்கத்தால் இதன் மேற்பகுதியில் அதிகளவில் தரைக்குழிப் பள்ளங்கள் காணப்படுகின்றன.
- நிலவு புவியிலிருந்து 3,84,400 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது புவியில் நான்கில் ஒரு பங்கே அளவுடையது.
- மனிதன் தரையிறங்கிய ஒரே விண்பொருள் நிலவாகும்.
- நிலவைப் பற்றி ஆராய்வதற்காக இந்தியாவால் அனுப்பப்பட்ட முதல் விண்கலம் சந்திராயன்-1 ஆகும். இது 2008 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது
- நாம் எப்போதும் நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே காண்கிறோம்.
- சூரியனைச் சுற்றி வரும் சிறிய திடப் பொருட்களே சிறுகோள்கள் எனப்படும். செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கோள்களுக்கிடையே சிறுகோள்கள் மண்டலம் காணப்படுகிறது. அவை அளவில் மிகவும் சிறியதாக இருப்பதால் கோள்கள் என அழைக்கப்படுவதில்லை.
- வால் விண்மீன்கள் தலை மற்றும் வால் பகுதிகளைக் கொண்டதாகக் காணப்படும். திடப் பொருட்களால் ஆன தலைப் பகுதி பனிக்கட்டியால் பிணைக்கப்பட்டுள்ளது. அதன் வால்பகுதி வாயுக்களால்ஆனது.
- புவிக்கு அருகில் 76 வருடங்களுக்கு ஒருமுறை வரக்கூடிய 'ஹேலி' வால்விண்மீன் கடைசியாக 1986ம் ஆண்டு வானில் தென்பட்டது. இது மீண்டும் 2061 ஆம் ஆண்டு விண்ணில் தோன்றும் என கணக்கிடப்பட்டுள்ளது.
- சூரியக் குடும்பத்தில் காணப்படும் சிறு கற்கள் மற்றும் உலோகப் பாறைகளால் ஆன விண்பொருட்களை விண்கற்கள் என்று அழைக்கிறோம். இந்த விண்கற்கள் புவியின் வளிமண்டலத்தை அடையும் போது உராய்வின் காரணமாக எரிந்து ஒளிர்வதால் எரிநட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.
- வளிமண்டலத்தைத் தாண்டி புவியின் மேற்பரப்பைத் தாக்கும் விண்கற்கள் 'விண்வீழ்கற்கள்' (Meteorites) என்று அழைக்கப்படுகின்றன.
- சூரியன் காலையில் கிழக்கிலும், மதியம் உச்சியிலும் மாலையில் மேற்கிலும் காணப்படுகிறது, புவி சூரியனை இடைவிடாமல் சுற்றி வருவதே இதற்குக் காரணம் ஆகும்.
- நமது கண்களுக்குச் சூரியன் நகர்வதைப் போன்று தோன்றினாலும் அது உண்மையல்ல.
- புவி சூரியனை மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றி வருவதால் சூரியன் கிழக்கிலிருந்து மேற்காகச் செல்வதாகத் தோன்றுகிறது.
- புவி கோள வடிவமானது. இது தன் அச்சில் சுழலுகிறது. புவியின் வட துருவத்திலிருந்து, புவி மையத்தின் வழியாக தென் துருவம் வரை செல்லக்கூடிய ஒரு கற்பனைக் கோடு புவியின் அச்சு எனப்படும்.
- புவி தன் அச்சில் 23½°சாய்ந்து தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. தன் சுற்றுவட்டப்பாதைக்கு 66½° கோணத்தை இந்த சாய்வு ஏற்படுத்துகிறது.
- புவியின் சுழலும் வேகம் நிலநடுக்கோட்டுப் பகுதியில் 1670 கி.மீ/மணி ஆகவும், 60 வடக்கு அட்சரேகையில் 845 கி.மீ/மணி ஆகவும், துருவப் பகுதியில் சுழலும் வேகம் சுழியமாகவும் இருக்கும்.
- புவி தன் அச்சில் தன்னைத் தானே சுற்றுவதைச் சுழலுதல் என்று கூறுகிறோம்.
- மேற்கிலிருந்து கிழக்காகச் சுழலும் புவியானது, ஒருமுறை சுழலுவதற்கு 23 மணி நேரம், 56 நிமிடங்கள், 4.09 வினாடிகள் எடுத்துக் கொள்கிறது.
- புவி ஒருமுறை சுழலுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தை ஒரு நாள் என்று அழைக்கிறோம்.
- புவி சுழலுவதன் காரணமாக இரவு , பகல் ஏற்படுகிறது.
- புவி கோள வடிவமாக உள்ளதால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சூரிய வெளிச்சம் புவியின் ஒரு பகுதியில் மட்டுமே படுகிறது. அப்பகுதிக்கு அது பகல்பொழுது ஆகும். புவியின் ஒளிபடாத பகுதி இரவாக இருக்கும்.
- இவ்வாறு புவியின் ஒளிபடும் பகுதியையும், ஒளிபடாத பகுதியையும் பிரிக்கும் கோட்டிற்கு "ஒளிர்வு வட்டம்' (Terminator LIne) என்று பெயர்.
- நள்ளிரவு சூரியன் என்பது இரு அரைக்கோளங்களிலும் கோடைக்காலத்தில் ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கிலும், அண்டார்க்டிக் வட்டத்திற்கு தெற்கிலும் 24 மணி நேரமும் சூரியன் தலைக்குமேல் தெரியும் நிகழ்வாகும்.
- புவி தன் நீள்வட்டப் பாதையில் (Elliptical Line) சூரியனைச் சுற்றிவரும் நகர்வையே சுற்றுதல் என்று கூறுகிறோம்.
- புவி வினாடிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. புவி ஒரு முறை சூரியனைச் சுற்றிவர 365¼ நாள்கள் ஆகிறது. இது தோராயமாக 365 நாள்களாக எடுத்துக்கொள்ளப்பட்டு ஒரு வருடம் என்று அழைக்கப்படுகிறது. மீதமுள்ள 4 நாட்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளாகக் கணக்கிடப்பட்டு பிப்ரவரி மாதத்தில் கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்படுகிறது. அதாவது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை பிப்ரவரி மாதத்திற்கு 29 நாள்களாக இருக்கும். அந்த வருடம் 'லீப் வருடம்' (Leap year) என்று அழைக்கப்படுகிறது.
- புவி சூரியனைச் சுற்றி வருவதால் பருவகாலங்கள் தோன்றுகின்றன.
- சூரிய அண்மை (Perihelion) என்பது புவி தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிக அருகில் வரும் நிகழ்வாகும். சூரியச் சேய்மை (Aphelion) என்பது புவி தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்குத் தொலைவில் காணப்படும் நிகழ்வாகும்.
- புவி சூரியனைச் சுற்றிவருவதால் மார்ச் 21 ம் தேதி முதல் செப்டம்பர் 23ம் தேதி வரை ஆறுமாதங்கள் புவியின் வட அரைக்கோளம் சூரியனை நோக்கி சாய்ந்து காணப்படும். அச்சமயத்தில் தென் அரைக்கோளம் சூரியனிடமிருந்து விலகி காணப்படுகிறது. அடுத்த ஆறுமாதங்கள் அதாவது செப்டம்பர் 23ம் தேதி முதல் மார்ச் 21 ம் தேதி வரை புவியின் தென் அரைக்கோளம் சூரியனை நோக்கி சாய்ந்தும், வட அரைக்கோளம் சூரியனிடமிருந்து விலகியும் காணப்படும்.
- புவி தன் சுற்றுப்பாதையில் சூரியனைச் சுற்றி வருவதால் சூரியன் நிலநடுக்கோட்டிற்கு வடக்காகவும், தெற்காகவும் நகர்வதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23 ஆகிய நாள்கள் நிலநடுக்கோட்டுப் பகுதியில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழும். அதனால் புவியின் அனைத்துப் பகுதிகளிலும் பகல் மற்றும் இரவுப்பொழுது சமமாகக் காணப்படும். எனவே, இந்நாட்கள் 'சமப்பகலிரவு' நாட்கள் என அழைக்கப்படுகின்றன.
- ஜுன் 21 ம் நாள் கடகரேகை மீது சூரியனின் செங்குத்துக் கதிர்கள் விழுவதால் வட அரைக்கோளத்தில் அந்நாள் மிக நீண்ட பகல்பொழுதைக் கொண்டிருக்கும். தென் அரைக் கோளம் நீண்ட இரவைக் கொண்டிருக்கும். இந்நிகழ்வு 'கோடைக்காலக் கதிர்திருப்பம்' (summer solstice) என்று அழைக்கப்படுகிறது. டிசம்பர் 22ம் தேதி மகரரேகையின் மீது சூரியனின் செங்குத்துக் கதிர்கள் விழுகின்றன. இந்நிகழ்விற்கு 'குளிர்காலக் கதிர்திருப்பம்' (Winter Solstice) என்று பெயர். இச்சமயத்தில் தென் அரைக்கோளத்தில் பகல்பொழுது அதிகமாகக் காணப்படும் . வட அரைக்கோளம் நீண்ட இரவைக் கொண்டிருக்கும்.
- உயிரினங்கள் வாழத் தகுதியான கோள் புவியாகும்.
- புவியில் காணப்படும் மூன்று தொகுதிகள் பாறைக்கோளம், நீர்க்கோளம் மற்றும் வளிமண்டலம் ஆகும். இத்தொகுதிகளுடன் தகுந்த காலநிலையும் நிலவுவதால் உயிரினங்கள் வாழத் தகுதியுள்ள இடமாக புவி மாற்றியுள்ளது.
- உயிரினங்கள் வாழக்கூடிய குறுகிய மண்டலம் 'உயிர்க்கோளம்' என்று அழைக்கப்படுகிறது.
- பாறை என்ற பொருள்படும் 'லித்தோஸ் (Lithos) என்ற கிரேக்கப் பதத்தில் இருந்து பாறைக்கோளம் (Lithospere) என்ற சொல் பெறப்பட்டது.
- புவியின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகள் மற்றும் மண் அடுக்கைப் பாறைக்கோளம் என்று கூறுகிறோம். இந்த நிலப்பரப்பில் உயிரினங்கள் காணப்படுகின்றன.
- "ஹைட்ரோ" (Hydro) என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்லே ஹைட்ரோஸ்பியர் (Hydrospere) ஆகும். இதற்கு நீர்க்கோளம் என்று பெயர். இது பெருங்கடல்கள், கடல்கள், ஆறுகள், ஏரிகள், மலையுச்சிகளில் காணப்படும் பனியுறைகள், வளிமண்டலத்தில் காணப்படும் நீராவி ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.
- அட்மோ' (Atmo) என்ற கிரேக்கப் பதத்திற்கு வளி அல்லது காற்று என்று பொருள். புவியைச் சுற்றி காணப்படும் பல்வேறு காற்றுத் தொகுதி வளிமண்டலம் எனப்படுகிறது.
- வளிமண்டலத்தில் காணப்படும் வாயுக்களில் நைட்ரஜன் (78%) மற்றும் ஆக்ஸிஜன் (21%) முதன்மையான வாயுக்களாகும். கார்பன்-டை- ஆக்ஸைடு, ஆர்கான், ஹைட்ரஜன், ஹீலியம் மற்றும் ஒசோன் வாயுக்கள் குறைந்த அளவில் காணப்படுகின்றன.
- உயிர்க்கோளம் பாறைக்கோளம், நீர்க்கோளம் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றோடு தொடர்புடைய உயிரினங்கள் வாழக்கூடிய ஒரு பகுதி "உயிர்க்கோளம் ' எனப்படுகிறது.
- 'பயோ' என்ற கிரேக்கச் சொல்லிற்கு 'உயிர்' என்று பொருள். உயிர்க்கோளம் பல்வேறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலமும் ஒப்பற்ற காலநிலை, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொண்ட பகுதியாக உள்ளது. இம்மண்டலங்கள் 'சூழல் மண்டலங்கள்' என்று அழைக்கப்படுகின்றன.
- மன்னார் உயிர்க்கோள் பெட்டகம் இந்திய பெருங்கடலில் 10,500 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது.
- சுமார் 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெரு வெடிப்பின் போது பேரண்டம் உருவானது.
- பேரண்டத்தில் எண்ணிலடங்கா விண்மீன்திரள் மண்டலங்கள் காணப்படுகின்றன.
- நமது சூரியக் குடும்பம் பால்வளி விண்மீன் திரள் மண்டலத்தில் காணப்படுகிறது.
- சூரியக் குடும்பத்தின் மொத்த நிறையில் சூரியன் மட்டும் 99.8 சதவிகிதம் உள்ளது.
- வெள்ளி மற்றும் யுரேனஸ் கோள்களைத் தவிர பிற கோள்கள் அனைத்தும்
- சூரியனை எதிர் கடிகாரச் சுற்றில் சுற்றிவருகின்றன.
- சிறுகோள்கள் செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கிடையே காணப்படுகின்றன.
- புவி சுழலுவதன் காரணமாக இரவு பகல் ஏற்படுகிறது. புவி சூரியனைச் சுற்றி வருவதன் காரணமாக பருவ காலங்கள் ஏற்படுகின்றன.
- கோடைக்காலக் கதிர் திருப்பம் வட அரைக்கோளத்தில் நீண்ட பகல்பொழுதைக் கொண்டிருக்கும். புவியில் காணப்படும் நிலம், நீர் மற்றும் காற்று ஆகியவற்றோடு தகுந்த காலநிலையும் புவியில் உயிரினங்கள் வாழக் காரணமாகின்றன.
- விண்மீன்திரள் - விண்மீன் கூட்டம் சிறுகோள்கள் - செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கோள்களுக்கிடையே காணப்படும் பாறைத்துகள்கள். விண்கல் - சூரியக் குடும்பத்தில் காணப்படும் சிறுகற்கள் மற்றும் உலோகப்பாறைகள்.
- வால் விண்மீன்கள் - பனிக்கட்டி தூசு மற்றும் சிறிய பாறைத்துகள்களால் ஆன விண்பொருட்கள்.
- துணைக்கோள்கள் - கோள்களைச் சுற்றி வரும் விண்பொருட்கள்.
- சுற்றுப்பாதை - கோள்கள் சூரியனைச் சுற்றிவரும் பாதை.
- புவியின் அச்சு - புவியின் வட துருவத்திலிருந்து புவி மையத்தின் வழியாக தென் துருவம் வரை செல்லக்கூடிய ஒரு கற்பனைக் கோடு.
- சுழலுதல் - புவி தன்னைத்தானே தன் அச்சில் சுழலுதல்.
- சுற்றுதல் - புவி தன் நீள்வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வரும் நகர்வு. சமப்பகலிரவு - இரவும் பகலும் சமமாகக் காணப்படும் நிகழ்வு.
- கதிர் திருப்பம் - கடகரேகை மற்றும் மகரரேகை மீது சூரியனின் செங்குத்துக் கதிர்கள் விழும் நிகழ்வு.
- தரை ஊர்தி - விண்பொருட்களை ஆராய்வதற்காக அதன் மேற்பரப்பில் ஊர்ந்து செல்லும் ஊர்தி.
- சுற்றி வரும் கலங்கள்- விண்பொருட்களின் மீது இறங்காமல் அதனைச் சுற்றி வரும் கலம்.

LINE BY LINE NOTES FOR ENGLISH MEDIUM STUDENTS
- Numerous stars and celestial bodies came into existence by a massive explosion called Big Bang. These celestial bodies together are called The Universe. It is also referred to as the Cosmos. The stars that you see are so far away that they appear to be small, but they are really huge in size.
- The study of the Universe is called Cosmology.
- The term Cosmos is derived from the Greek word ‘Kosmos’.
- The Universe is a vast expanse of space. Most astronomers believe that the Universe came into existence after the Big Bang explosion that took place about 15 billion years ago.
- The universe consists of billions of galaxies, stars, planets, comets, asteroids, meteoroids and natural satellites. These are collectively called as celestial bodies, which are located far away from each other.
- A Light year is the unit used to measure the distance between the celestial bodies.
- Galaxy is a huge cluster of stars which are held together by gravitational force.
- Most of the galaxies are scattered in space, but some remain in groups.
- The Milky Way Galaxy was formed about 5 billion years after the Big Bang explosion.
- Our solar system is a part of the Milky Way galaxy.
- Andromeda galaxy is the nearest to the Earth apart from the ‘Magellanic Clouds’ galaxy.
- A light-year is the distance traversed by light in a year at a velocity of 300,000 km per second. Sound travels at a speed of 330 m per second.
- The word ‘solar’ is derived from the Roman word ‘sol’, which means ‘Sun God’.
- The solar system is believed to have formed about 4.5 billion years ago.
- The solar system is a gravitationally bound system which comprises of the Sun, the eight planets, dwarf planets, satellites, comets, asteroids and meteoroids.
- The Sun is at the centre of the solar system.
- Each member of the solar system revolves around the Sun.
- The Sun is so huge that it accounts for 99.8 percent of the entire mass of the solar system.
- The Sun is made up of extremely hot gases like Hydrogen and Helium.
- The Sun is a star. It is self-luminous so it gives light on its own.
- The surface temperature of the Sun is about 6,000° C.
- It is the source of light and heat energy to the entire solar system.
- Sunlight takes about 8.3 minutes to reach the Earth
- 1.3 million Earths fit inside the Sun.
- The word planet means wanderer.
- There are eight planets in the solar system. They are Mercury, Venus, Earth, Mars, Jupiter, Saturn, Uranus and Neptune.
- All the planets rotate anti-clockwise (from west to east) on their own axes except Venus and Uranus. The elliptical path in which the planets move around the Sun is known as orbit.
- The eight planets revolve in their respective orbits because of the gravitational pull of the Sun.
- They do not move out of their paths or away from the solar system.
- The four planets nearer to the Sun are called Inner or Terrestrial Planets (Mercury, Venus, Earth and Mars). The inner planets are comparatively smaller in size and are composed of rocks. The surface of inner planets has mountains, volcanoes and craters.
- The last four planets are called as Outer Planets or Jovian Planets (Jupiter, Saturn, Uranus, and Neptune). They are also called Gaseous Giants.
- An asteroid belt is found between Mars and Jupiter.
- The ancient Tamils knew that the planets went around the Sun. For example, in Tamil literature Sirupanatruppadai, the line ’வாள் நிற விசும்பின் கோள் மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு’ mentions that the Sun is surrounded by planets.
- Mercury is the smallest and closest planet to the Sun. It is named after the Roman deity ‘Mercury’, the messenger to the Gods. It is an airless and waterless planet. It does not have an atmosphere and so experiences extremes of temperature. It has no natural satellites.
- Mercury can be viewed in the morning and evening with naked eye.
- Mnemonic to remember the order of planets: My Very Educated Mother Just Showed Us Neptune.
- Venus - The Hottest Planet
- Venus is the second planet from the Sun.
- Venus is called Earth’s twin, as it is almost the same size as the Earth.
- Venus has the longest rotation period (243 days) among the planets in the Solar system.
- Venus rotates in the opposite direction to all other planets except Uranus.
- Venus has no natural satellites like Mercury.
- Venus is named after the Roman goddess of love and beauty.
- Venus is often visible in the mornings and the evenings and so it is frequently called as the Morning Star and the Evening Star.
- After the Moon, Venus is the brightest natural object in the night sky.
- Even though Mercury is the nearest planet to the Sun, Venus is the hottest one.
- Earth - The Living Planet
- The Earth is the third planet from the Sun and the fifth largest planet in the solar system.
- Earth is called ‘blue planet’ or ‘watery planet’ because three-fourth of the Earth is covered by water.
- The Earth is the only planet in the solar system which is not named after any Greek or Roman deity. It is the only planet known to support life.
- The polar diameter of the Earth is 12, 714 km and the equatorial diameter is 12, 756 km.
- The Earth revolves around the Sun at a speed of about 30 km per second. Life is possible on Earth because of the presence of land, air and water. The only natural satellite of the Earth is the Moon.
- The distance between the Sun and the Earth is about 150 million kilometre. A flight flying at a speed of 800 km per hour from the Earth would take 21 years to reach the Sun.
- Mars - The Red Planet
- Mars is the fourth planet from the Sun and the second smallest planet in the solar system, after Mercury.
- Mars is named after the Roman God of war. It appears red in colour due to the presence of iron oxide on its surface. So, it is often described as The Red Planet. It has a thin atmosphere. It also has polar ice caps like the Earth. Mars has two natural satellites namely Phobos and Deimos.
- Many orbiters and rovers have been launched to explore Mars planet.
- Jupiter - the Largest Planet
- Jupiter is the fifth planet from the Sun and the largest planet in the solar system.
- Jupiter is named after the king of the Roman gods.
- Jupiter is the third brightest object in the night sky, after the moon and Venus. It is the fastest spinning planet in the solar system. It is called a gas giant planet. Its atmosphere is made up of mostly Hydrogen and Helium like the Sun.
- Jupiter has the largest number of natural satellites. Io, Europa, Ganymede and Callisto are a few large satellites of Jupiter.
- Saturn - The Ringed planet
- Saturn is the sixth planet from the Sun and the second largest planet in the solar system, after Jupiter.
- On 24th September, 2014 Mangalyan (Mars Orbiter Mission - MOM), launched by the Indian Space Research Organization (ISRO), reached the orbit of Mars to analyze its atmosphere and topography. ISRO has now become the fourth space agency to reach Mars after the Soviet Space programme, NASA and the European Space Agency.
- If you could put Saturn in a large enough ocean it would float.
- Saturn is named after the Roman god of agriculture. Saturn has many rings around it. These rings are huge and are mostly made up of ice, rocks and dust particles.
- Saturn has 62 natural satellites around it. Titan, Saturn’s largest moon, is the only satellite in the solar system that has clouds and a dense atmosphere composed of nitrogen and methane.
- The specific gravity of Saturn is less than that of water.
- Uranus - The Somersaulting planet
- Uranus is the seventh planet from the Sun. It was the first to be discovered with a telescope by the astronomer William Herschel in 1781.
- It appears green due to the presence of methane. It is named after the Greek god of the sky. It rotates on its axis from east to west like Venus. Its axis is tilted so much that it appears to orbit the Sun on its sides like a rolling ball.
- Uranus has 27 natural satellites, of which Titania is the largest.
- Neptune - The coldest Planet
- Neptune is the eighth and the farthest planet from the Sun.
- There are strong winds on this planet. It is named after the Roman god of sea.
- Neptune has 14 natural satellites, the largest being Triton.
- Because of Neptune ‘s distance from the Sun, Neptune is one of the coldest planets in the solar system.
- The striking blue and white features of Neptune help to distinguish it from Uranus.
- Dwarf planets are small celestial bodies found beyond the planet Neptune. They are extremely cold and dark. They are almost spherical in shape, but unlike planets they can share their orbit with other dwarf planets.
- The five dwarf planets of the solar system are Pluto, Ceres, Eris, Makemake and Haumea.
- The Moon - Earth’s Satellite
- Satellites are celestial objects, which revolve around the planets.
- The moon is the Earth’s only satellite. It revolves around the Earth once in every 27 days and 8 hours. It takes about the same time for it to complete one rotation around its axis.
- It has no atmosphere. The surface of the moon is characterized by craters created by the impact of meteors.
- The distance between the moon and the Earth is about 3, 84,400km. The size of the moon is one-quarter of the Earth.
- The Moon is the only celestial body where humans have landed.
- ISRO launched India’s first ever Moon mission, Chandrayaan - 1 in 2008.
- We see only one side of the Moon always.
- Asteroids are small solid objects that move around the Sun. They are found as a belt between Mars and Jupiter. They are too small to be called planets. They are also known as Planetoids or Minor Planets.
- A comet is a celestial object made up of a head and a tail. The head of a comet consists of solid particles held together by ice and the tail is made of gases.
- Halley’s Comet is the most famous comet which comes close to the Earth every 76 years. It last appeared in 1986 and will next appear in 2061.
- A meteor is a stone-like or metallic body. When entering into the Earth’s atmosphere, most of them burn. As they often appear as streaks of light in the sky, they are also known as Shooting Stars.
- Meteors which strike the Earth’s surface are called meteorites.
- Sun is seen in the east in the morning, overhead in the afternoon and in the west in the evening. This is because of the constant moving of the Earth around the Sun.
- It seems that the Sun is moving, but it is not so.
- The Earth is spherical in shape. It rotates on its axis, which is an imaginary line that runs from the North Pole to the South Pole passing through the centre of the Earth.
- The Earth’s axis is always tilted or inclined from the vertical by an angle of 23½°. It makes an angle of 66½° with the plane of the Earth’s orbit.
- The velocity of the Earth’s rotation varies from 1670 km per hour at the equator to 845 km per hour at 60° N and S latitudes and zero at the poles.
- Rotation is the spinning movement of the Earth on its axis.
- The Earth rotates from west to east (anticlockwise) and takes 23 hours 56 minutes and 4.09 seconds to complete one rotation.
- The time taken by the Earth to complete one rotation is called a day.
- The rotation of the Earth causes day and night.
- As the Earth is spherical in shape, only one half of it is illuminated by the Sun at a time. The other half remains dark. The illuminated portion of the Earth experiences day, whereas the darkened part of the Earth experiences night.
- The line which divides the surface of the Earth into a lighted half and a dark half is called the Terminator Line.
- The Midnight Sun is a natural phenomenon that occurs in the summer months in places north of the Arctic Circle or south of the Antarctic Circle, when the Sun remains overhead 24 hours a day.
- Revolution is the movement of the Earth around the Sun on its elliptical path.
- The Earth takes 365 ¼ days for it to complete one revolution. It revolves around the Sun at a speed of 30 km per second. For the sake of convenience, we take it as 365 days and call it a year. The remaining quarter day is added once in every four years in the month of February. That is why February has 29 days once in four years. It is called a Leap Year.
- The inclination of the Earth on its axis and its revolution around the Sun cause different seasons.
- Perihelion is the Earth’s closest position to the Sun. Aphelion is the farthest position of the Earth from the Sun.
- The Northern Hemisphere is inclined towards the Sun for six months from 21st March to 23rd September while the Southern Hemisphere is tilted away from the Sun.
- From Sep 23rd to March 21st the southern hemisphere is inclined towards the Sun and the northern hemisphere faces away from the Sun.
- The changing position of the Earth in its orbit during revolution gives the impression that the Sun is continuously moving north and south of the equator. The equator faces the Sun directly on 21 March and 23 September. These two days are called Equinoxes, during which the day and night are equal throughout the Earth.
- On 21st June, the Tropic of Cancer faces the Sun. This is known as the Summer Solstice. It is the longest day in the Northern Hemisphere and longest night (shortest day) in the Southern Hemisphere. On 22nd December, the Tropic of Capricorn faces the Sun. It is called the Winter Solstice. It is the longest day in the Southern Hemisphere and longest night (shortest day) in the Northern Hemisphere.
- The Earth is the most suitable planet to support life.
- Earth has three major components that we call as the realms of the Earthlithosphere, hydrosphere and atmosphere. The three components along with suitable climate make life possible on Earth.
- All living things exist in a narrow zone called the biosphere.
- The word lithosphere is derived from the Greek word Lithos, which means rocky. The Lithosphere is the land on which we live.
- It is the solid outer layer of the Earth consisting of rocks and soils.
- The word Hydro means water in Greek. The hydrosphere consists of water bodies such as oceans, seas, rivers, lakes, ice caps on mountains and water vapour in the atmosphere.
- Atmosphere The word Atmo means air in Greek. Atmosphere is the envelope of air that surrounds the Earth.
- Different types of gases make up the atmosphere. The major gases are Nitrogen (78%) and Oxygen (21%). The other gases like Carbon dioxide, Hydrogen, Helium, Argon, and Ozone are present in meager amounts.
- Biosphere The narrow belt of interaction among the lithosphere, the hydrosphere and the atmosphere, where life exists is known as Biosphere.
- Bio means life in Greek. It consists of distinct zones. Each zone has its own climate, plant and animal life. These zones are known as ecosystems.
- The Gulf of Mannar Biosphere Reserve in the Indian Ocean covers an area of 10,500 sq.km in the ocean.
- The Universe was formed 15 billion years after the Big Bang explosion
- Many galaxies are found in the Universe.
- Our solar system is a part of the Milky Way Galaxy.
- The Sun is so huge that it accounts for 99.8 percent of the entire mass of the solar system.
- All planets rotate anti-clockwise on their own axes except Venus and Uranus.
- Asteroids are found as a belt between Mars and Jupiter.
- The rotation of the Earth causes day and night.
- The revolution of the Earth causes seasons.
- Summer solstice is the longest day in the Northern Hemisphere.
- The presence of land, water and air along with suitable climate makes life possible on Earth.

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்
1. All Test links of tpnkalvi website -http://tpnkalvi.in/online-test/free-tests/all-test-links-of-tpnkalvi-website/
2. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – சமூக அறிவியல்- இயல் 7 - http://tpnkalvi.in/general/6th-social-science-term-1-lesson-7/
3. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – சமூக அறிவியல்- இயல் 5 - http://tpnkalvi.in/general/6th-social-science-term-1-lesson-5/
4. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – சமூக அறிவியல்- இயல் 3 - http://tpnkalvi.in/general/6th-social-science-term-1-lesson-3/
5. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 5 - http://tpnkalvi.in/general/6th-science-term-1-lesson-5/
6. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 4 - http://tpnkalvi.in/general/6th-science-term-1-lesson-4/
7. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 3 - http://tpnkalvi.in/general/6th-science-term-1-lesson-3/
8. அக்டோபர் மாத இலவச தேர்வுகள் – Registration form - http://tpnkalvi.in/online-test/free-tests/october-month-free-test-registartion-form/
9. October month free test new group link - http://tpnkalvi.in/general/october-month-free-test-new-group-link/
10. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 1 - http://tpnkalvi.in/general/6th-science-lesson-1-term-1/
11. 50 Questions test series – Test 31 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-31/
12. 50 Questions test series – Test 30 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-30/
13. 50 Questions test series – Test 29 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-29/
14. 50 Questions test series – Test 28 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-28/
15. 50 Questions test series – Test 27 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-27/
1 thought on “வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – சமூக அறிவியல்- இயல் 5”