தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
பாடத் தலைப்புகள் : இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி, வளர்தமிழ், கனவு பலித்தது, தமிழ் எழுத்துக்களின் வகை தொகை
PDF டவுன்லோட் செய்ய : இந்த குறிப்புகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்துகொள்ள விரும்புபவர்கள், கீழே உள்ள தேர்வை ATTEND செய்யவும். தேர்வை முடிக்கும் பொழுது உங்களுடைய மதிப்பெண்ணுடன் PDF டவுன்லோட் செய்வதற்கான லிங்க்கும் காட்டப்படும். அதனைக் கிளிக் செய்து PDF டவுன்லோட் செய்து கொள்ளவும்.
இந்த இயலில் மொத்தம் 98 குறிப்புகளும் அவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட 75 கேள்விகளும் உள்ளன.
இந்தத் தேர்வு குறிப்புகள் குறித்த உங்களின் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்
இதற்கு முந்தைய தேர்வினை எழுத கீழே கிளிக் செய்யவும்
தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 75
வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர் மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.
click to copy shortcodeResults
#1. ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால்நாழி- என்னும் பாடல் வரிகளை இயற்றியவர் யார்
#2. ஆழிப்பெருக்கு எனும் சொல்லின் பொருள்
#3. தமிழன் கண்டாய் எனும் வாக்கியம் முதன் முதலில் இடம் பெற்றுள்ள இலக்கியம் எது
#4. "என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்" என்று பாரதியார் யாரை குறிப்பிடுகிறார்
#5. தாய்மொழியில் படித்தால் __________ அடையலாம்
தேர்வு எழுதி முடிக்கும் பொழுது உங்களுடைய மதிப்பெண் மற்றும் PDF டவுன்லோட் செய்வதற்கான லிங்க் காட்டப்படும்
எங்கள் இணையதளத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்களுக்குமான ஒரு வரி குறிப்புகள் அனைத்தும் பாடவாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடத்திலிருந்தும் எடுக்கப்பட்ட குறிப்புகளை கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்வும் (TEST) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்புகள் அனைத்தையும் படித்துவிட்டு அந்த தேர்வை எழுதிப் பார்க்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
ஒருவரி வினாக்கள் அனைத்தும் பாடப்புத்தகத்தை வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்டதாகும்.
இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்து வினாக்களையும் நீங்கள் முறையாக பயிற்சி செய்தாலே தமிழகத்தில் நடைபெறும் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறலாம்.
இது போன்று அனைத்து பாடங்களுக்குமான, வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட வினாக்களை பெற கீழே உள்ள டெலிகிராம்/ வாட்சப் குரூப்பில் இணைந்து கொள்ளவும்.
Telegram : https://t.me/THAMIZHPRIYANKALVI1
Whatsapp : https://chat.whatsapp.com/CAJ20fhIAwEHEmeagezQBS
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/
வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட ஒரு வரி குறிப்புகள்
- "தமிழுக்கும் அமுதென்று பேர் என்று துவங்கும் பாடலை இயற்றியவர்" - பாரதிதாசன்
- நிருமித்த எனும் சொல்லுக்கான பொருள் - உருவாக்கிய
- சமூகம் எனும் சொல்லுக்கான பொருள் - மக்கள் குழு
- விளைவு எனும் சொல்லுக்கான பொருள் - விளைச்சல்
- அசதி என்னும் சொல்லுக்கான பொருள் - சோர்வு
- பாரதிதாசனின் இயற்பெயர் - சுப்புரத்தினம்
- பின்வருபவர்களில் யார் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துக்களை தன்னுடைய கவிதைகளில் உள்வாங்கி பாடியுள்ளார் - சுப்புரத்தினம்
- புரட்சிக்கவி என்று அழைக்கப்படுபவர் - பாரதிதாசன்
- பாவேந்தர் என்று அழைக்கப்படுபவர் - பாரதிதாசன்
- தமிழே உயிரே வணக்கம் - என்று துவங்கும் பாடலின் ஆசிரியர் யார் - கவிஞர் காசி ஆனந்தன்
- ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைய வேண்டும்
- நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு அசதி ஆக இருக்கும்
- நிலவு+என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - நிலவென்று
- தமிழ்+எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - -தமிழெங்கள்
- அமுதென்று என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது - அமுது + என்று
- செம்பயிர் எனும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது - செம்மை+பயிர்
- கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி - என்று துவங்கும் பாடலின் ஆசிரியர் - பெருஞ்சித்திரனார்
- ஆழிப்பெருக்கு எனும் சொல்லின் பொருள் - கடல்கோள்
- ஊழி எனும் சொல்லின் பொருள் - நீண்டதொரு காலப்பகுதி
- மேதினி என்னும் சொல்லின் பொருள் - உலகம்
- உள்ளப்பூட்டு என்னும் சொல்லின் பொருள் - அறிய விரும்பாமை
- மாணிக்கம் என்பது யாருடைய இயற்பெயர் - பெருஞ்சித்திரனார்
- பாவலரேறு என்று அழைக்கப்படும் புலவர் யார் - பெருஞ்சித்திரனார்
- கனிச்சாறு,கொய்யாக்கனி, பாவிய கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களின் ஆசிரியர் யார் - பெருஞ்சித்திரனார்
- தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தியவர் யார் - பெருஞ்சித்திரனார்
- கனிச்சாறு என்னும் நூல் எத்தனை தொகுதிகளாக வெளிவந்துள்ளது - 8
- வான் தோன்றி, வளி தோன்றி, நெருப்பு தோன்றி, மண் தோன்றி, மழை தோன்றி, மலைகள் தோன்றி என்று துவங்கும் பாடலை இயற்றியவர் யார் - வாணிதாசன்
- தாய்மொழியில் படித்தால் மேன்மை அடையலாம்
- தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் மேதினி சுருங்கிவிட்டது
- செந்தமிழ் எனும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - செம்மை+தமிழ்
- பொய்யகற்றும் எனும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - பொய் + அகற்றும்
- பாட்டு + இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது - பாட்டிருக்கும்
- எட்டு+திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது - எட்டுத்திசை
- "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று கூறியவர் - பாரதியார்
- என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய் - என்று பாடியவர் - பாரதியார்
- "என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்" என்று பாரதியார் யாரை குறிப்பிடுகிறார் - தமிழை
- தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான நூல் - தொல்காப்பியம்
- தமிழென் கிளவியும் அதனோ ரற்றே - எனும் வரிகள் இடம்பெறும் நூல் - தொல்காப்பியம்
- இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின் - எனும் வரிகள் இடம்பெறும் நூல் - சிலப்பதிகாரம்
- சிலப்பதிகாரத்தின் எந்த காண்டத்தில் தமிழ்நாடு என்னும் சொல் முதன் முதலில் இடம் பெற்றுள்ளது - வஞ்சிக் காண்டம்
- தமிழன் கண்டாய் எனும் வாக்கியம் முதன் முதலில் இடம் பெற்றுள்ள இலக்கியம் எது - அப்பர் தேவாரம்
- நன்னூல் ஒரு - இலக்கண நூல்
- திருக்குறள், நாலடியார் ஆகியவை - அறநூல்கள்
- சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியவை - காப்பியங்கள்
- தொல்காப்பியம், நன்னூல் ஆகியவை - இலக்கண நூல்கள்
- பூவின் 7 பருவங்கள் : அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்
- பூவின் மூன்றாவது பருவம் - முகை
- மா எனும் ஒரு சொல்லுக்கான பொருள்கள் : மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு
- இயற்றமிழ் எண்ணத்தை வெளிப்படுத்தும்
- இசைத்தமிழ் உள்ளத்தை மகிழ்விக்கும்
- நாடகத்தமிழ் உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்தும்
- துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள் போன்றன தமிழ் கவிதை வடிவங்கள்
- கட்டுரை, புதினம், சிறுகதை போன்றவை உரைநடை வடிவங்கள்
- தாவரங்களும் அவற்றின் இலைகளின் பெயர்களும்:
ஆல், அரசு, மா, பலா, வாழை - இலை
அகத்தி, பசலை, முருங்கை - கீரை
அருகு, கோரை - புல்
நெல், வரகு - தாள்
மல்லி - தழை
சப்பாத்தி கள்ளி, தாழை - மடல்
கரும்பு, நாணல் - தோகை
பனை, தென்னை - ஓலை
கமுகு - கூந்தல் - நீண்ட நீண்ட காலம் நீ, நீடு வாழ வேண்டும் - எனும் பாடலின் ஆசிரியர் - கவிஞர் அறிவுமதி
- தொன்மை என்னும் சொல்லின் பொருள் - பழமை
- இடப்புறம் எனும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் - இடது + புறம்
- சீரிளமை என்ற சொல்லை பிரிக்க கிடைக்கும் சொல் - சீர்மை + இளமை
- சிலம்பு+அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - சிலப்பதிகாரம்
- கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல் - கணினித்தமிழ்
- மா என்னும் சொல்லின் பொருள் - விலங்கு
- மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் என்றால் அது எண்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்
- நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என்று கூறும் நூல் எது - தொல்காப்பியம்
- உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்திய நூல் எது - தொல்காப்பியம்
- "கடல் நீர் ஆவியாகி மேகமாகிப் பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும்" இந்தச் செய்தி பழந்தமிழ் இலக்கியங்களான முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது, திருப்பாவை முதலிய நூல்களில் இடம்பெற்றுள்ளது.
- ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால்நாழி- என்னும் பாடல் வரிகளை இயற்றியவர் யார் - ஔவையார்
- போர் வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி இடம் பெற்றுள்ள நூல் எது - பதிற்றுப்பத்து
- சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தி இடம் பெற்றுள்ள நூல் - நற்றிணை
- தொலைவிலுள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்பதை கண்டறிந்த அறிவியல் அறிஞர் யார் - கலிலியோ
- தொலைவிலுள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்ற அறிவியல் கருத்தை கூறும் தமிழ் நூல் எது - திருவள்ளுவமாலை
- தொலைவிலுள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்ற அறிவியல் கருத்தைக் கூறும், திருவள்ளுவமாலை நூலிலுள்ள பாடலை இயற்றியவர் யார் - கபிலர்
- நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் - இப்பாடல் இடம்பெறும் நூல் - தொல்காப்பியம்
- கடல் நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி - இப்பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் - கார் நாற்பது
- நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு - இப்பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் - பதிற்றுப்பத்து
- கோட் சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர் - இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் - நற்றிணை
- தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் - எனும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் - திருவள்ளுவமாலை
- தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் - எனும் பாடல் வரிகளை இயற்றியவர் - கபிலர்
- தமிழ்மொழியின் இலக்கண வகைகள் மொத்தம் எத்தனை - 5
- தமிழ்மொழியின் ஐந்து இலக்கண வகைகள் - எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம்
- ஒலி வடிவாக எழுப்பப்படுவதும் வரிவடிவாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படுகிறது
- குறுகி ஒலிக்கும் அ,இ, உ, எ மற்றும் ஒ ஆகிய ஐந்தும் குறில் எழுத்துக்கள்
- நீண்டு ஒலிக்கும் ஆ,ஈ,ஊ, ஏ, ஐ, ஓ மற்றும் ஔ ஆகிய ஏழும் நெடில் எழுத்துக்கள்
- ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கண் இமைக்கவோ அல்லது ஒருமுறை கை நொடிக்கவோ ஆகும் கால அளவாகும்
- குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 1 மாத்திரை
- நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 2 மாத்திரை
- மெய் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு - 1/2 மாத்திரை
- க்,ச்,ட்,த்,ப்,ற் ஆகிய ஆறு எழுத்துகளும் வன்மையாக ஒலிக்கின்றன
- ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் ஆகிய ஆறு எழுத்துகளும் மென்மையாக ஒலிக்கின்றன
- ய்,ர்,ல்,வ்,ழ்,ள் ஆகிய ஆறு எழுத்துகளும் வன்மையாகவும் இல்லாமல் மென்மையாகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்டு ஒலிக்கின்றன
- மெய்யுடன் உயிர்க்குறில் சேர்ந்தால் உயிர்மெய்க் குறில் தோன்றுகிறது. மெய்யுடன் உயிர்நெடில் சேர்ந்தால் உயிர்மெய் நெடில் தோன்றுகிறது. ஆகவே உயிர்மெய் எழுத்துகளையும் உயிர்மெய் குறில், உயிர்மெய் நெடில் என இரு வகைப்படுத்தலாம்
- தமிழ் மொழியில் உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்கள் தவிர தனி எழுத்து ஒன்றும் உள்ளது. அது ஃ என்னும் ஆயுத எழுத்து ஆகும்
- ஆயுத எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 1/2 மாத்திரை
- வலஞ்சுழி எனும் சொல்லைக் குறிக்கும் ஆங்கில கலைச்சொல் - Clock wise
- இடஞ்சுழி என்னும் சொல்லைக் குறிக்கும் ஆங்கில கலைச்சொல் - Anti clock wise
- இணையம் என்னும் சொல்லைக் குறிக்கும் ஆங்கில கலைச்சொல் - Internet
- குரல் தேடல் என்னும் சொல்லைக் குறிக்கும் ஆங்கில கலைச்சொல் - Voice Search
- தேடுபொறி என்னும் சொல்லைக் குறிக்கும் ஆங்கில கலைச்சொல் - Search engine
- தொடுதிரை என்னும் சொல்லைக் குறிக்கும் ஆங்கில கலைச்சொல் - Touch screen
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்
- History very important 50 questions part 2 - http://tpnkalvi.in/online-test/tpkt-pc/history-very-important-50-questions-part-2/
- History very important 50 questions - http://tpnkalvi.in/online-test/tpkt-pc/history-very-important-50-questions/
- Science Important Questions- Part 5 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-5/
- Science Important Questions- Part 4 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-4/
- வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஏழாம் வகுப்பு – தமிழ் – இயல் 1 - http://tpnkalvi.in/general/7th-standard-tamil-lesson-1/
- Science Important Questions- Part 3 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-3/
- Daily 4 free test series – Today’s Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/daily-4-free-test-series-todays-test-1/
- Science Important Questions- Part 2 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-2/
- 50 Questions test series – Test 12 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-12/
- 20 Questions test series – Test 16 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-16/
- 20 Questions test series – Test 15 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-15/
- 50 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-11/
- 50 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-10/
- 50 Questions test series – Test 9 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-9/
- 50 Questions test series – Test 8 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-8/
- 100 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/100-questions-test-series-test-1/
- 50 Questions test series – Test 7 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-7/
- 50 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-6/
- 50 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-5/
- Science Important Questions- Part 1 - http://tpnkalvi.in/general/science-questions-for-tnpsc-part-1/
Very useful in this question and answer key sir. I am likely in this PDF sir, I am a college student sir although I am prepare tnpsc job questions sir
Glad to see a guy who is preparing for competitive exams while doing his college. Please join in my telegram group to get regular updates regarding the competitive exams
Thank you