வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – 9th Standard – Tamil – Lesson 7

பகிர்க - Share:

தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்

பாடத் தலைப்புகள் : இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர் பங்கு, சீவகசிந்தாமணி, முத்தொள்ளாயிரம், மதுரைக்காஞ்சி, சந்தை, ஆகுபெயர்

PDF  டவுன்லோட் செய்ய : இந்த குறிப்புகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்துகொள்ள விரும்புபவர்கள், கீழே உள்ள தேர்வை ATTEND செய்யவும். தேர்வை முடிக்கும் பொழுது உங்களுடைய மதிப்பெண்ணுடன் PDF டவுன்லோட் செய்வதற்கான லிங்க்கும் காட்டப்படும். அதனைக் கிளிக் செய்து PDF டவுன்லோட் செய்து கொள்ளவும்.

இந்த இயலில் மொத்தம் 123 குறிப்புகளும் அவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட 109 கேள்விகளும் உள்ளன.

தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 109




#1. இசை என்னும் சொல்லின் பொருள்

#2. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சந்தை எத்தனை ஏக்கர் பரப்பில் இயங்குகிறது

#3. கயம் எனும் சொல்லின் பொருள்

#4. சில்காற்று எனும் சொல்லின் பொருள்

#5. மண்ணுற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கின் விண்ணுற ஓங்கிய பல்படைப் புரிசை - இவ்வரிகள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளன

பகிர்க - Share:
பகிர்க - Share:

Results

பகிர்க - Share:

வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர்

மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும்

Click here

அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும்

Click here

 

இந்தக் கேள்விகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழே  கிளிக் செய்யவும்

Tamil Notes – Click here

இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு  கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.

பகிர்க - Share:
பகிர்க - Share:

நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. 

மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும்

Click here

அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும்

Click here

 

இந்தக் கேள்விகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழே  கிளிக் செய்யவும்

Tamil Notes – Click here

இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு  கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.

பகிர்க - Share:
click to copy shortcode

தேர்வு எழுதி முடிக்கும் பொழுது உங்களுடைய மதிப்பெண் மற்றும் PDF டவுன்லோட் செய்வதற்கான லிங்க் காட்டப்படும்




எங்கள் இணையதளத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்களுக்குமான ஒரு வரி குறிப்புகள் அனைத்தும் பாடவாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு பாடத்திலிருந்தும் எடுக்கப்பட்ட குறிப்புகளை கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்வும் (TEST) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்புகள் அனைத்தையும் படித்துவிட்டு அந்த தேர்வை எழுதிப் பார்க்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

ஒருவரி வினாக்கள் அனைத்தும் பாடப்புத்தகத்தை வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்டதாகும்.

இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்து வினாக்களையும் நீங்கள் முறையாக பயிற்சி செய்தாலே தமிழகத்தில் நடைபெறும் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறலாம்.

இது போன்று அனைத்து பாடங்களுக்குமான, வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட வினாக்களை பெற கீழே உள்ள டெலிகிராம்/ வாட்சப் குரூப்பில் இணைந்து கொள்ளவும்.

Telegram : https://t.me/THAMIZHPRIYANKALVI1

Whatsapp : https://chat.whatsapp.com/CAJ20fhIAwEHEmeagezQBS

youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi

Website: http://tpnkalvi.in/

வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட ஒரு வரி குறிப்புகள்

  1. இரண்டாம் உலகப் போரின்போது மலேசியாவில் ஆங்கிலேயர்கள் ஜப்பானியரிடம் சரண் அடைந்த நாள் - பிப்ரவரி 15  1942
  2. யாருடைய தலைமையில் ஜப்பானியர்கள் இந்திய தேசிய ராணுவப் படையை உருவாக்கினர் - மோகன் சிங்
  3. இந்திய தேசிய ராணுவத்தின் ஒற்றர் படையில் இருந்த வீரர்களை இந்தியாவின் எந்தெந்த மாநிலங்களுக்கு உளவு பார்ப்பதற்காக ஜப்பானியர்கள் நீர் மூழ்கி கப்பல் மூலம் அனுப்பினர் - குஜராத், கேரளா
  4. இந்திய தேசிய ராணுவத்தின் ஒற்றர் படையில் இருந்த வீரர்களை, ஆங்கிலேயர்களை உளவு பார்ப்பதற்காக தரை வழியில் எந்த நாட்டின் காடுகள் வழியாக ஜப்பானியர் அனுப்பி வைத்தனர் - பர்மா
  5. நேதாஜி அவர்கள் இந்திய தேசிய ராணுவத்தின் பொறுப்பை ஏற்க எத்தனை நாள்கள் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்து சிங்கப்பூர் வந்தடைந்தார் - 91
  6. நேதாஜி அவர்கள் இந்திய தேசிய ராணுவத்தின் பொறுப்பை எப்பொழுது ஏற்றார் - ஜூலை 9 1943
  7. டெல்லி சலோ என்று கூறியவர் - நேதாஜி
  8. இந்திய தேசிய ராணுவப் படை ஆங்கிலேயர்களை எதிர்த்த பொழுது தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி இந்திய தேசிய ராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர் - முத்துராமலிங்கனார்
  9. இந்திய தேசிய ராணுவப் படை தலைவரான தில்லான் அவர்களின் கூற்றுப்படி - இந்திய தேசிய ராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்.
  10. இந்திய தேசிய ராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான் என்று கூறியவர் - தில்லான்
  11. தமிழ் வீரர்களை பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாக பிறக்க வேண்டும் என்று கூறியிருந்தவர் - நேதாஜி
  12. டோக்கியோ கேடட்ஸ் படைக்கு எத்தனை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர் - 45
  13. டோக்கியோ கேடட்ஸ் பிரிவினர் எந்த படையில் பயிற்சி பெறுவதற்காக சென்றனர் - வான்படை
  14. இம்பீரியல் மிலிட்டரி அகாடமி எங்கு அமைந்துள்ளது - ஜப்பான்
  15. கியூசு தீவு எந்த நாட்டைச் சேர்ந்தது - ஜப்பான்
  16. இந்திய தேசிய ராணுவப் படையின் பெண்கள் பிரிவின் பெயர் - ஜான்சிராணி
  17. இந்திய தேசிய ராணுவப் படையின் பெண்கள் பிரிவின் தலைவர் - லட்சுமி
  18. இந்திய தேசிய ராணுவத்தில் பயிற்சி பெற்று பின்பு சுதந்திர இந்தியாவில் செசல்ஸ் நாட்டுத் தூதுவராக பணியாற்றியவர் - கேப்டன் தாசன்
  19. மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது என்று கூறியவர் - சர்ச்சில்
  20. தமிழ் இனம்தான் ஆங்கிலேயர்களை அழிக்கும் என்று கூறியவர் - நேதாஜி
  21. நேதாஜியின் பொன்மொழிகள்
  22. மனதை மலர வைக்கும் இளங்கதிரவனின் வைகறைப் பொழுது வேண்டுமா? அப்படியானால் இரவில் இருண்ட நேரங்களில் வாழக் கற்றுக்கொள்.
  23. அநீதிகளுக்கும் தவறான செயல்களுக்கும் மனம் ஒப்ப இடம் தருதல் மிகப்பெரிய குற்றமாகும்.
  24.  நீங்கள் நல்வாழ்வை தந்தே ஆக வேண்டும் என்பதுதான் காலத்தால் மறையாத சட்டமாகும்.
  25.  எந்த விலை கொடுத்தாவது சமத்துவத்திற்கு போராடுவதே மிகச்சிறந்த நற்குணம் ஆகும்.
  26. விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மனநிறைவும் வேண்டுமா? அப்படியானால் அதற்கு விலை உண்டு. அவற்றுக்கான விலை துன்பமும் தியாகமும் தான்.
  27. இந்திய தேசிய ராணுவம் ஆங்கிலேயர்களை வென்று இந்தியாவில் மூவர்ணக் கொடியை ஏற்றிய நாள் - மார்ச் 18  1944
  28. இந்திய தேசிய ராணுவம் ஆங்கிலேயர்களை வென்று இந்தியாவில் மூவர்ணக் கொடியை ஏற்றிய இடம் - மொய்ராங், மணிப்பூர்
  29. 1943-1945 ஆகிய ஆண்டுகளில் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த எத்தனை இளைஞர்கள் சென்னை சிறையில் தூக்கிலிடப்பட்டனர் - 18
  30. நான் என் உயிரை கொடுப்பதற்கு கொஞ்சமும் கவலைப் படவில்லை –––ஏனெனில் நான் கடவுளுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை என்று ––––கூறியவர் - ராமு
  31. வாழ்வின் பொருள் தெரிந்தால்தான் மனிதன் மேல் நிலையை அடைவான், நாட்டிற்காக உயிர் நீத்த முழு நிலவினை போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திதான் என்று கூறியவர் - அப்துல் காதர்
  32. 1943-1945 ஆகிய ஆண்டுகளில் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த 18 இளைஞர்கள் ________  சிறையில் தூக்கிலிடப்பட்டனர் - சென்னை
  33. இந்திய தேசிய ராணுவம்  - தமிழர் பங்கு என்ற நூலின் ஆசிரியர் - மா.சு அண்ணாமலை
  34. தெங்கு எனும் சொல்லின் பொருள் - தேங்காய்
  35. இசை என்னும் சொல்லின் பொருள் - புகழ்
  36. வருக்கை என்னும் சொல்லின் பொருள் - பலாப்பழம்
  37. நெற்றி எனும் சொல்லின் பொருள் - உச்சி
  38. மால்வரை எனும் சொல்லின் பொருள் - பெரிய மலை
  39. மடுத்து எனும் சொல்லின் பொருள் - பாய்ந்து
  40. கொழுநிதி எனும் சொல்லின் பொருள் - திரண்ட நிதி
  41. மருப்பு எனும் சொல்லின் பொருள் - கொம்பு
  42. வெறி எனும் சொல்லின் பொருள் - மணம்
  43. கழனி எனும் சொல்லின் பொருள் - வயல்
  44. செறி எனும் சொல்லின் பொருள் - சிறந்த
  45. இரிய எனும் சொல்லின் பொருள் - ஓட
  46. சூல் எனும் சொல்லின் பொருள் - கரு
  47. அடிசில் எனும் சொல்லின் பொருள் - சோறு
  48. மடிவு எனும் சொல்லின் பொருள் - சோம்பல்
  49. கொடியனார் எனும் சொல்லின் பொருள் - மகளிர்
  50. வட்டம் எனும் சொல்லின் பொருள் - எல்லை
  51. நற்றவம் எனும் சொல்லின் பொருள் - பெருந்தவம்
  52. வெற்றம் எனும் சொல்லின் பொருள் - வெற்றி
  53. காய்மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகின் என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் - சீவக சிந்தாமணி
  54. வள்ளல் கைத்தல மாந்தரின் மால்வரைக் கொள்ளை கொண்ட குழு நிதி குப்பையை - எனும் பாடல் வரிகளை இயற்றியவர் - திருத்தக்க தேவர்
  55. நற்றவம் செய்வார்க்கு இடம் தவம் செய்வார்க்கும் அஃது இடம் - என்று கூறப்படும் நாடு - ஏமாங்கத நாடு
  56. விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்  - சீவக சிந்தாமணி
  57. சீவகசிந்தாமணியில் உள்ள இலம்பகங்களின் எண்ணிக்கை - 13
  58. மணநூல் என அழைக்கப்படுவது - சீவக சிந்தாமணி
  59. திருத்தக்கதேவர் எந்த சமயத்தைச் சார்ந்தவர் - சமண சமயம்
  60. திருத்தக்க தேவரின் காலம் - ஒன்பதாம் நூற்றாண்டு
  61. நரி விருத்தம் என்ற நூலின் ஆசிரியர் - திருத்தக்க தேவர்
  62. அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ வெள்ளம் தீ பட்டது - இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் - முத்தொள்ளாயிரம்
  63. காவல் உழவர்கள் களத்து அகத்துப் போர்ஏறி நாவலோ என்றிசைக்கும் நாளோதை - இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் - முத்தொள்ளாயிரம்
  64. நந்தின் இளைஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும் பந்தர் இளங்கமுகின் பாளையும்  - இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் - முத்தொள்ளாயிரம்
  65. அள்ளல் எனும் சொல்லின் பொருள் - சேறு
  66. பழனம் என்னும் சொல்லின் பொருள் - நீர் மிக்க வயல்
  67. வெரீஇ எனும் சொல்லின் பொருள் - அஞ்சி
  68. பார்ப்பு எனும் சொல்லின் பொருள் - குஞ்சு
  69. இசைத்தால் எனும் சொல்லின் பொருள் - ஆரவாரத்தோடு கூவுதல்
  70. நந்து எனும் சொல்லின் பொருள்  - சங்கு
  71. கமுகு எனும் சொல்லின் பொருள் - பாக்கு
  72. முத்தம் எனும் சொல்லின் பொருள் - முத்து
  73. இளங்கமுகு இலக்கண குறிப்பு தருக - பண்புத்தொகை
  74. கொல்யானை இலக்கண குறிப்பு தருக - வினைத்தொகை
  75. குவிமொட்டு இலக்கண குறிப்பு தருக - வினைத்தொகை
  76. வெரீஇ இலக்கண குறிப்பு தருக - சொல்லிசை அளபெடை
  77. முத்தொள்ளாயிரம் எந்த வகை பாவால் இயற்றப்பட்டது - வெண்பா
  78. முத்தொள்ளாயிரம் நூலில் மொத்தம் எத்தனை பாடல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன - 108
  79. மதுரைக் காஞ்சியின் ஆசிரியர் - மாங்குடி மருதனார்
  80. மதுரைக் காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் - பாண்டியன் நெடுஞ்செழியன்
  81. மதுரைக்காஞ்சி மொத்தம் எத்தனை அடிகளைக் கொண்டது - 782
  82. மதுரைக்காஞ்சி நூலில் மொத்தம் எத்தனை அடிகள் மதுரையைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன - 354
  83. பெருகுவள என்ற அடைமொழியுடன் கூறப்படும் நூல் எது - மதுரைக்காஞ்சி
  84. மாங்குடி மருதனார் எட்டுத்தொகையில் மொத்தம் எத்தனை பாடல்களை பாடியுள்ளார் - 13
  85. காஞ்சி என்ற சொல்லின் பொருள் - நிலையாமை
  86. புரிசை எனும் சொல்லின் பொருள் - மதில்
  87. அணங்கு என்னும் சொல்லின் பொருள் - தெய்வம்
  88. சில்காற்று எனும் சொல்லின் பொருள் - தென்றல்
  89. புழை என்னும் சொல்லின் பொருள் - சாளரம்
  90. மாகால் என்னும் சொல்லின் பொருள் - பெருங்காற்று
  91. முந்நீர் என்னும் சொல்லின் பொருள் - கடல்
  92. பணை எனும் சொல்லின் பொருள் - முரசு
  93. கயம் எனும் சொல்லின் பொருள் - நீர்நிலை
  94. ஓவு எனும் சொல்லின் பொருள் - ஓவியம்
  95. நியமம் என்னும் சொல்லின் பொருள் - அங்காடி
  96. நிலைஇய என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு - சொல்லிசை அளபெடை
  97. குழாஅத்து எனும் சொல்லின் இலக்கண குறிப்பு - செய்யுளிசை அளபெடை
  98. வாயில் எனும் சொல்லின் இலக்கண குறிப்பு -  இலக்கணப்போலி
  99. மகிழ்ந்தோர் எனும் சொல்லின் இலக்கண குறிப்பு - வினையாலணையும் பெயர்
  100. மண்ணுற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கின் விண்ணுற ஓங்கிய பல்படைப் புரிசை - இவ்வரிகளை இயற்றியவர் - மாங்குடி மருதனார்
  101. மண்ணுற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கின் விண்ணுற ஓங்கிய பல்படைப் புரிசை - இவ்வரிகள் எந்த நகரைப் புகழ்ந்து பாடுகின்றன - மதுரை
  102. பொறி மயிர் வாரணம்……கூட்டுறை  வயமாப் புலியொடு குழும இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் - மதுரைக்காஞ்சி
  103. மண்ணுற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கின் விண்ணுற ஓங்கிய பல்படைப் புரிசை - இவ்வரிகள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளன - மதுரைக்காஞ்சி
  104. பகலில் செயல்படும் கடை வீதிகளை நாளங்காடி என்றழைப்பர்
  105. இரவில் செயல்படும் கடை வீதிகளை அல்லங்காடி என்று அழைப்பர்
  106. நாள் என்ற சொல்லின் பொருள் பகல்
  107. அல் என்ற சொல்லின் பொருள் இரவு
  108. தாவணி என்ற சொல்லின் பொருள் சந்தை
  109. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சந்தை எத்தனை ஏக்கர் பரப்பில் இயங்குகிறது - 18
  110. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சந்தை எந்த நாளில் கூடுகிறது - ஞாயிற்றுக்கிழமை
  111. ஊர் மற்றும் அவற்றின் சந்தை  சிறப்பு –
    • மணப்பாறை  மாட்டுச்சந்தை
    •  அய்யலூர் ஆட்டுச்சந்தை
    •  ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை
    •  நாகர்கோவில் தோவாளை பூச்சந்தை
    •  ஈரோடு ஜவுளி சந்தை
    •  கடலூர் காராமணிக்குப்பம் கருவாட்டு சந்தை
    •  நாகப்பட்டினம் மீன் சந்தை
  112. பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே விருதுநகர் வியாபாரிக்கு - செல்லக்கண்ணு நீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு செல்லக்கண்ணு - இப்பாடல் வரிகளின் ஆசிரியர் - மருதகாசி
  113. ஆகுபெயர்கள் மொத்தம் எத்தனை - 16
  114. பின்வருவனவற்றுள் எது முதலாகுபெயர் என்று அழைக்கப்படுகிறது- பொருளாகு பெயர்
  115. நச்சிலைவேல் கோக்கோதை நாடு எது - சேர நாடு
  116. நல்யானைக் கோக்கள்ளி நாடு எது - சோழ நாடு
  117. நகைமுத்த வெண்குடையான் நாடு எது - பாண்டிய நாடு
  118. வயலிடைப் புகுந்தாய் மணிக்கதிர் விளைத்தாய் வளைந்துசெல் கால்களால் ஆறே - இவ்வரிகளை இயற்றியவர் - வாணிதாசன்
  119. கலைச்சொற்கள்
    1. இந்திய தேசிய ராணுவம் Indian National army
    2. பண்டமாற்று முறை commodity exchange
    3. காய்கறி வடி சாறு vegetable soup
    4. செவ்வியல் இலக்கியம் classical literature
    5. கரும்புச்சாறு sugarcane juice
  120. ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்ற நூலின் ஆசிரியர்  - மு மேத்தா
  121. தமிழ்ப் பழமொழிகள் என்ற நூலின் ஆசிரியர் - கி வா ஜெகந்நாதன்
  122. இருட்டு எனக்குப் பிடிக்கும் என்ற நூலின் ஆசிரியர் - ச தமிழ்ச்செல்வன்

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்

பகிர்க - Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *